Saturday, 20 September 2014


இரகுபதி வாத்தியார்


        (எனது தமிழில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்)


 

காலை மணி 7.30, நகர வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல மாறிவரும் ஒரு சராசரி இந்திய கிராமம். இரவு பெய்த மழையால் சுத்தப்படுத்தப்பட்ட சிமெண்ட் தெருக்கள், சற்று வேகமாக வீசுகின்ற காற்று, காலை மழைமேகம், நேரமாகியும் இருள் நீங்கா காலநிலை என்று இன்றையநாள் வழக்கத்திற்கு மாறாக சற்று வித்தியாசமாக இருந்தது.

பால்காரன் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியவறே வந்து வண்டியை ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி “ பால்.... பால்” என்று கூவினான், ஆனால் அந்த வீட்டில் இருந்து யாரும் வந்து கதவை திறப்பதகாத் தெரியவில்லை.

பால்காரன் அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தான், தூரத்தில் குழந்தைகள் விளையாடுகின்றன, ஒரு பெண் ஒரு சிறுவனை கையில் பிடித்து அழைத்துக்கொண்டு வருகிறாள். அவள் அருகில் வந்தவுடன், பால்காரன் அந்த பெண்ணிடம் கேட்டான் “வாத்தியார் வீட்டில யாருமில்லையா?”. ஒரு சிறிய மௌனதிர்ற்கு பிறகு “ உள்ளேதான் இருப்பாங்க..... காலிங் பெல்லை அடிங்க” என்றாள்.

பால்காரன் வண்டியில் இருந்து இறங்கி வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு காலிங் பெல்லை அழுத்தினான். வீட்டில் இருந்து யாராவது வருவார்களா என்று எதிர்ப் பார்த்துகொண்டிருந்தான், அப்போது தெருவில் ஒரு குழந்தையின் அழுகை சப்தம் கேட்டது, சட்டென்று திரும்பிப் பார்த்தார் பால்காரர்., ஒரு சிறுவன் மஞ்சள் நிற பேருந்தைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருந்தான் “அம்மா நான் நாளைக்கு போறேன்... நான் நாளைக்கு போறேன், என்ன விடுங்க என்ன விடுங்க...” என்று தாயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

பால்காரன் மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினான். சோபாவில் படுத்துக்கொண்டிருந்த வாத்தியார் சட்டென்று விழித்துக்கொண்டு “லொக்கு லொக்கு” என்று இரும்பினார், தரையில் படுத்துகொண்டிருந்த வாத்தியாரின் மனைவி விழித்துக்கொண்டு “அய்யோ நேரமாச்சே” என்று பதறி எழுந்து, கதவை திறந்தார்.

“என்னங்கம்மா அசந்து தூங்கிடீங்களா?” என்று பால்காரன் கேட்டான். அவள் பதில் ஒன்றும் கூறாமல் “இருப்பா பாத்திரம் எடுத்திட்டு வர்றேன்” என்றாள். வாத்தியார் சோபாவில் படுத்துக்கொண்டு ஏதோ யோசனையில் இருந்தார்.

பால்காரன் பாலை  அளந்துகொண்டே

பால்காரன் கேட்டான் “ஏம்மா.... பெங்களுருல இருக்கிற உங்க மகளைப் பார்க்க போறிங்களா?”.

மௌனத்தை மட்டும் பதிலளித்துவிட்டு வாத்தியாரின் மனைவி வீட்டிற்குள் சென்றாள்.

எதுவும் புரியாத பால்காரன் வண்டியை மெதுவாக நகர்த்தினான்.

வீட்டிற்குள் சென்ற வாத்தியாரின் மனைவி, சோபாவில் படுத்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் “காப்பி வேணுமா”.

சில நிமிட அமைதிக்குப் பிறகு மனைவியின் முகத்தை மெல்ல பார்த்தார்…., சில விநாடிகள் நீடித்தது.

பதிலெதுவும் கிடைக்காத மனைவி சமையலறையை நோக்கி நடந்தாள். எதோ நினைவு வர, அங்கும் இங்கும் கண்களால் தேடினாள்...

“தம்பி தம்பி” என்று கூறிக்கொண்டே படுக்கை அறையை தட்டினாள். கதவு திறக்கப்படவில்லை..... அவளின் மனம் பயப்படத் தொடங்கியது. “தம்பி தம்பி” என்று மீண்டும் கதவுகளைத் தட்டினாள், ஜன்னல்களை திறக்க முற்ப்பட்டாள், ஜன்னல்கள் மூடியிருந்தது, அவளின் பயம் அதிகமானது.

அவள் ஹாலை நோக்கி ஓடிவந்து “என்னங்க என்னங்க” தம்பி கதவை திறக்க மாட்டேங்கிறான் என்று பதடத்துடன் சொன்னாள்.

எதையோ யோசித்துகொண்ட்டிருந்த வாத்தியார் சட்டென்று எழுந்து படுக்கை அறையை நோக்கிச் சென்றார். மனைவி படபடப்புடன் கண்களில் கண்ணீர் ததும்ப வாத்தியாரை பின்தொடர்ந்தாள்.

வேகமாக வந்த வாத்தியார் கையை ஓங்கி கதவைத் தட்ட முயன்றார்..... கதவு சட்டென்று திறந்தது. “என்னம்மா” என்று கண்களைக் கசக்கியபடியேய் மகன் வெளியே வந்தான்.

வாத்தியார் மனைவியை திரும்பிப் பார்த்தார்...... சில நிமிட மௌன உரையாடலுக்குப் பின்னால் வாத்தியார் மீண்டும் சோபாவிற்கே வந்து அமர்ந்தார்.

“என்னப்பா பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகில்லையா?” என்று மகனைப் பார்த்து வாத்தியாரின் மனைவி கேட்டாள்.

“ம்ம்.....” என்ற பதிலுடன் அவன் மீண்டும் படுக்கை அறைக்குள் போனான்.

வாத்தியாரின் மனைவியின் கன்னங்களில் நீர்வழியத் தொடங்கியது.... அமைதியாய் அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

................................................................................................

................................................................................................

“குறையேதும் இல்லை மறை மூர்த்தி கண்ணா....” என்ற பாடல் எங்கிருந்தோ ஒலிக்கத் தொடங்கியது..... சட்ரென்று நிமிர்த்து பார்த்த வாத்தியாரின் மனைவி, பாடல் கணவனின் கைப்பேசியில் இருந்து வருகின்றது என்பதை உணர்ந்தாள், வந்த அழைப்பு ஏமாற்றதுடன் துண்டித்துக்கொண்டது. மீண்டும் “குறையேதும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.......” பாடல் ஒலிக்க தொடங்கியது, இந்த முறை வாத்தியாரின் மனைவி வேகமாக வந்து கணவனின் கைப்பேசியை எடுத்தாள். யாரிடமிருந்து அழைப்பு வருகின்றது என்பதை ஆர்வத்துடன் பார்த்தாள், அவளின் கண்கள் சற்று மலரத்தொடன்கியது, சோகத்தால் இறுகி இருந்த முகத்தில் சற்று சந்தோஷம்.

இந்த மாற்றத்திற்கு காரணம், அழைப்பு வந்தது மூத்த மகளிடமிருந்து, கைப்பேசியை அப்படியே எடுத்துக்கொண்டு ஹலோ....  என்று சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கி ஓடினாள்.

“என்னம்மா எப்படி இருக்க?, அப்பா எப்படி இருக்காரு?, தம்பிஎங்கே?” என்று மகள் கேள்விகளை அடுக்கினாள். ஆனால் அம்மா பதில் ஒன்றும் கூறாமல் அழுவதற்கு ஆரம்பித்துவிட்டாள்.

“என்னம்மா விடுங்க” இன்னுமா அதையே நினைச்சுக்கிட்டு இருப்பீங்க.....

“எனக்கு உங்க அப்பாவைப் பார்த்தா தான் பயமா இருக்கு” என்று கூறிக்கொண்டே அழத் தொடர்ந்தாள்.

“அவருகிட்ட ஃபோனைக் கொடுங்க நான் பேசிறேன்” என்றாள்.

“அவரு மூனு நாள அப்படியே இருக்காரு, யாருகிட்டேயும் சரியாப் பேசமாட்டேங்கறாரு, உம்முன்னு இருக்காரு, எனக்கு என்னமோ பயமாவே இருக்கு” என்று கூறிவிட்டு. “அதுமட்டுமில்லே உன் தம்பியும் ரெண்டு நாளா ஸ்கூலுக்கு போகமாட்டேன்கிறான்” என்று கூறிக்கொண்டே அழுதாள்.

“அவனுக்கு என்னாச்சு?, என்ன ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகணும்ன்னு நெனப்பில்லையா அவனை கூப்பிடுங்க” என்றாள்.

“அவனும் அமைதியாவே இருக்கான், பெட்ரூம விட்டு வெளிய அதிகமா வரவே மாட்டேங்கரான், நாம என்ன பாவம் பண்ணினோமோ? அன்று அழுதுகொண்டே இருந்தாள்.

“நீங்க அழுகாதீங்க” என்று சமாதனப் படுத்திய மகள், அடுத்த கணமே அவளும் அழுது விட்டாள்.

“நீ எதுக்கு அழுகனும், நீ  அழுகாத, சும்மா இரு” என்று மகளின் அழுகையை நிறுத்தினாள்.

“அப்பா அப்படி இருக்காருன்ன காரணம் இருக்கு, இவன் எதுக்குமா உம்முன்னு இருக்கான்? யாராவது அவன திட்டுனீங்களா?” என்று மகள் கேட்டாள்.

“வீட்ல யாருப்பா அவன திட்டுவாங்க? முந்தாநேத்து ஸ்கூல இருந்து வந்தப்ப இருந்துதான் அவன் இப்படி இருக்கான்” என்றாள்.

“சரி மா, அப்பாவும் தம்பியும்  சாப்பிட்டாங்களா?” என்று மகள் கேட்டாள்.

“இல்லைப்ப, நேத்து ராத்திரி சாப்பாடே அப்படியே இருக்கு” என்றாள்.

“கடவுளே நாங்க என்ன பாவம் பண்ணினோம்” என்று கடவுளைக் கடித்துக்கொண்ட மகள் “அவருக்கு லீவு கிடைக்கல... இல்லேன்னா நானே வரலாமுன்னு இருந்தேன்.... “ என்றாள்.

“விடுப்ம்மா நாம என்ன பாவம் செஞ்சோமோ நம்ம குடும்பத்தில மட்டும் இதெல்லாம் நடக்குது” என்று அம்மா சொன்ன்னாள்.

“அம்மா... சும்மா இருங்க” என்று அதட்டிய மகள், நடந்ததிற்கும் நமக்கும் எந்த சம்மந்தமுமே இல்ல, அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்தா முயற்ச்சி பண்ணினார் கடைசில முடியல... அதுக்கு நாம என்ன பண்ண முடியும் என்றாள்.

“சரி விடு... உங்க அப்பா இந்த ஊர விட்டே காலிபண்ணி போயிடலாமுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு” என்று அம்மா கூறினாள்.

“எதுக்கும்மா அப்பா இப்படி லூசு மாதிரி பண்ணுறாரு? எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது” என்றாள் மகள்.

“இப்ப பேசி ஒன்னும் பண்ண முடியாது, உங்க அப்பா முடிவு பண்ணிடாரு” என்றாள்.

“சரி நான் அதப்பத்தி பிறகு பேசிறேன், நீங்க சாபீடுங்க... போங்க...” என்றாள் மகள்.

“சரி, பிறகு ஃபோன் பண்றேன், நானும் சமைக்கனும்” அன்று அம்மா கூறினாள்

“என்னம்மா? மணி என்னாச்சு... இப்பவா சமைக்கப் போறேங்க?, நீங்க ஒன்னும் இப்ப சமைக்க வேணாம், மாமா வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டுவருவாங்க” என்றாள்.

“எதுக்குமா சம்மந்தி வீட்டுக்கு தொந்தரவு, மூனு நாளா அவங்கதான் கொண்டுவந்தாங்க, இன்னைக்கு இங்கேயே சமைக்கலாம்” என்று அம்மா சொன்னாள்.

“இருக்கட்டும்மா.... அதுவும் நம்ம வீடு மாதிரிதான்”, என்று கூறிய மகள், “நான் ஃபோனை கட் பண்றேன், மாமாவீட்டுக்கு பேசணும்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

ஹாலை நோக்கி கைபேசியோடு வந்த வாத்தியாரின் மனைவி, கணவனிடம் கூறினாள், “பெரியவ ஃபோன் பண்ணினா”

சற்று விநாடிகள் கழித்து மனைவியின் முகத்தை திரும்பி பார்த்த வாத்தியார் தனது இறுகிய முகத்தை தளரவிடாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்.

கணவனின் வாடிய முகத்தை பார்க்க மனமில்லாமல் அவள் சமையலறைக்குத் திரும்பினாள்.

“சம்மந்தி சம்மந்தி” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

வாத்தியார் மெல்ல எழுந்து கதவைத் திறந்தார், வந்திருந்தது அவருடைய சம்மந்தி, அதுமட்டும் அல்ல இவர் வாத்தியாரின் பள்ளத் தோழனும் கூட.

“வாங்க” என்ற ஒற்றை வார்த்தை கூறிவிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தார்.

“நான் கொஞ்சம் வெளில போயிட்டு வந்தேன், லேட் ஆயிடுச்சு, இப்ப உங்க பொண்ணு வேற ஃபோன் பண்ணிடுச்சு அதுதான் ஓடிவந்துட்டேன்” என்று சம்மந்தி சொல்லிக்கொண்டிருந்தார் ஆனால் வாத்தியாரின் முகத்தில் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது.

உள்ளே இருந்து வாத்தியாரின் மனைவி வேகமாக வந்து “வாங்க வாங்க” என்று அழைத்துவிட்டு, “இருங்க தண்ணீர் எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள்.

“சம்மந்தி நடந்தது நடந்து போச்சு, இப்பவும் அதைப்பத்தி நினைச்சுகிட்ட மனசப்போட்டு குழப்பிகாதிங்க, இப்ப ஒண்ணும் பண்ணமுடியாது, போனது வரவா போகுது?..... நீங்க சும்மா மனச வருத்தி உடம்ப கெடுத்துகாதீங்க...” என்று வாத்தியாருக்கு சம்மந்தி ஆறுதல் கூறனார்.

சில நிமிட மௌனதிற்க்கு பிறகு வாத்தியார் சம்மந்தியின் முகத்தைப் பார்த்து “என்னதான் இருந்தாலும் நான் இருக்கும்போது இது நடந்திருக்கக் கூடாது” என்றார்.

“அட, விடுங்க நீங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க கடைசில காப்பத்த முடியல என்ன பண்ணுறது” என்றார் சம்மந்தி.

சட்டென்று திரும்பிய வாத்தியார் “நீங்க நம்ம ஊராட்சி மன்ற தலைவரு தானே? உங்களுக்கு வருத்தமில்லையா?” என்று கேட்டார்.

அதே நேரம் மனைவியும் தண்ணீருடன் அங்கு வந்தாள் பாவம் சம்மந்தி என்ன பண்ணுவாரு? “எல்லாம் இந்த MLAவை சொல்லனும், அவரு சிபாரிசு செஞ்சிருந்த நாம காப்பாத்தி இருக்கலாம்”

உடனே சம்மந்தி சிறிய நகைப்புடன், “நம்ம MLA மேல ஒன்னும் குத்தஞ்சொல்ல முடியாது, தலைவரும் எவ்வளவு முயற்ச்சி பண்ணினாரு தெரியுமா, எல்லாம் இந்த அதிகாரிகங்க பண்ணுனதுதான்” என்று முடித்தார்.

“சரி விடுங்க எல்லாத்தையும் தல  முழுகியாச்சு” என்றார் வாத்தியார் விரக்தியுடன் “அது” என்று ஆரம்பித்த சம்மந்தியின் பேச்சை நிறுத்திய வாத்தியார், “நாங்க முடிவு பண்ணிட்டோம்! இதை சற்றும் எதிர்பாராத சம்மந்தி ஆச்சிரியத்துடன் “நீங்க என்ன சொல்றீங்க?”.

வாத்தியார் கணத்த குரலில் “நாங்க ஊர விட்டு போறோம்” என்றார்.

“என்னங்க யாராவது இதுக்கெல்லாம் ஊரவிட்டு போவாங்களா?” என்று வாத்தியாரை  பார்த்த  சம்மந்தி, “என்ன பெருசா நடந்திடுச்சு? நீங்க வேலை பார்த்த கவர்மென்ட் பள்ளிக்கூடத்தை மூடிட்டாங்க? இப்ப என்ன வேலையா போச்சு? பத்து கிலோமீட்டர்ல இருக்கிற இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு மாத்தியிருக்காங்க அவ்வளவு தானே?” வாத்தியார் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

சம்மந்தி பேச்சைத் தொடர்ந்தார், “நாங்களும் எவ்வளவு முயற்சி பண்ணிப் பார்த்தோம், உங்களுக்கும் தெரியும் இல்ல? இந்த அதிகாரிங்க யாரும் கேட்கவே இல்ல, எத்தன வருஷம் தான் ஆறு குழந்தைக்கும் அஞ்சு குழந்தைக்கும் பள்ளிக்கூடம் நடத்துறதுன்னு கேட்கிறாங்க”.... என்றார்.

மீண்டும் வாத்தியார் அமைதியாகவே இருந்தார்.

சம்மந்தி மீண்டும் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார், “அதிகாரிங்க கேக்குறதுல ஒரு நியாயமும் இருக்குல்ல? அஞ்சு குழந்தைகளுக்கு மூணு வாத்தியார்கள் தேவையான்னு கேட்குறாங்க..... ஒரு வாத்தியார் மட்டும் குடுத்தா ஒத்த வாத்தியார் பள்ளிக்கூடம் நம்ம மாவட்டத்தில இருக்குனு பேப்பருல்ல போடுவாங்கன்னு அதிகாரிங்களும் பயப்படுறாங்க.

வாத்தியாரின் மனைவி அமைதியாக என்ன நடக்கின்றது என்பதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். சற்று நேரம் அந்த அறையே மயான அமைதியாக இருந்தது. வாத்தியார் மெல்ல பேச ஆரம்பித்தார், “பள்ளிக்கூடத்தை மூடுறது கோயில இடிக்கிறதுக்கும் மேலான பெரிய பாவம், அது நான் தலைமையாசிரியரா இருக்கும்போதுதான் நடக்கணுமா?” என்று புலம்பினார்.

என்ன சம்மந்தி இந்த கவர்மென்ட் பள்ளிக்கூடத்தை மூடினா, நம்ம ஊரு குழந்தைங்களுக்கு வேற ஸ்கூலே இல்லையா? அதுதான் நாலு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் இருக்குல்ல, அதுமட்டும்மில்லே பக்கத்துக்கு டவுண்ல இருக்கிற  எல்லா ஸ்கூல்ல இருந்தும் ஸ்கூல் பஸ் நம்ம ஊருக்கே வருது” என்று கூறிய சம்மந்தி, “வீட மாத்திர வேலைய விட்டிட்டு, இங்கிருந்தே போயிட்டு வாங்க... எல்லாம் ரெண்டு வாரத்துல சரியாயிடும், சின்னவன் வேற பத்தாவது படிக்கிறான், அங்கேயும் இங்கேயும் வீட்ட மாத்தி எதுக்கு சும்மா அவனுக்கு தொந்தரவு கொடுக்குறீங்க, எங்க மாப்பிள்ள ஸ்கூல் போயிட்டானா?” என்றார்.

அங்கே நின்றுகொண்டிருந்த வாத்தியாரின் மனைவி “அவனும் ரெண்டு நாளா ஸ்கூல் போகல, அவனும் அவங்க அப்பாவ பாத்து உம்முன்னே இருக்கான்” என்றாள்.

“சரி எல்லாம் சரியாகிடும், இட்லி இருக்கு... நீங்க போய் சாப்பிடுங்க, நான் வேற உங்கள லேட்பண்றேன், நான் ஒரு மீட்டிங்கு போயிட்டு மத்தியானம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு வாத்தியாரின் சம்மந்தி புறப்பிட்டுவிட்டார்.

வாத்தியார் மெல்ல எழுந்து குளியலறைக்குச் சென்று பல்துலக்கி மீண்டும் சோபாவிலே வந்தமர்ந்தார்.

“என்னங்க வாங்க சாபிடலாம்” என்று மனைவி அழைத்தார்.

ஹாலில் இருந்தது டைனிங் ரூமை நோக்கி மெல்ல நடந்த வாத்தியார் “சின்னவன் எங்கே” என்றார்.

“இப்பதான் பல்லு விளக்கிட்டு இருக்கான்” என்று மனைவியிடம் இருந்து பதில் வந்தது.

“சரி அவனும் வரட்டும்” என்று நாற்காலியில் அமர்ந்தார்.

வாத்தியாரின் மனைவி சற்று சந்தோஷப் பட்டுக் கொண்டாள், மூன்று நாள் எதுவும் பேசாமல் இருந்த வாத்தியார் இன்றாவது மெல்ல மௌனத்தை களைத்து பேசினார் என்று.

சின்ன மகன் வந்ததும் மூன்று பேரும் தரையில் அமர்ந்தார்கள், இட்லியை எடுத்து தட்டுகளில் பரிமாறினார் வாத்தியாரின் மனைவி.

அனைவரும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“என்னங்க தம்பி ரெண்டு நாளா உம்முன்னே இருக்கான், ஸ்கூலுக்கும் போகல” என்றாள்.

“என்னப்பா உடம்பு முடியலையா?” என்று மகனைப் பார்த்துக் கேட்டார் வாத்தியார்.

“ஒன்னும் இல்ல” என்று மகனிடம் இருந்து பதில் வந்தது, ஆனால் வாத்தியார் மகனின் முக வாட்டத்தைக் கண்டு ஏதோ பிரச்சனை என்று எண்ணினார்.

“என்னப்பா பத்தாவது கஷ்டமாஇருக்கா?” என்றார்.

“இல்லை”

அருகில் இருந்த வாத்தியாரின் மனைவி “நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன் அவன் ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிறான்”.

“என்னப்பா உனக்கு பிரச்சனை, ஸ்கூல்ல எதாவது, ம்ம்... சொல்லு நான் பிரின்சிபால்கிட்டே பேசிறேன்” என்றார்.

“ஒண்ணுமில்ல என்ன விடுங்க” என்று சத்தமாக் கூறினான். தன் மகன் இவ்வளவு கோபப்பட்டு  வாத்தியார் பார்த்ததே இல்லை. வாத்தியாரும் அவரின் மனைவியும் மகனின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் .

அவன் குனிந்த தலையை மேலே தூக்கமால் அப்படியே இருந்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த வாத்தியார், மகனின் தலையை மெல்ல தூக்கினார், தன்னிடம் அவ்வளவு கோபமாக பேசிய ஆசை மகனின் முகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக, அப்போது மகனின் கண்கள் குளமாய் காட்சி அளித்தது.

“என்னப்பா என்னாச்சு “ என்று கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவன் கண்கள் பதில்  சொன்னது.... தாரைத்தாரையாக கண்ணீர் வழிந்தது .

இதை காண பொருக்காத தாயும் அழுதுவிட்டாள், “என்ன ஆச்சு உனக்கு சொல்லுப்பா சொல்லு”

இதை பார்த்த வாத்தியாருக்கு கோபம் அதிகமானது, “ஏண்டா அழுகிற இப்ப சொல்லுரைய இல்லையா” என்று அதட்டி கேட்டார்.

அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை, தனது அழுகையை அதிகப்படுத்தினான்.

வாத்தியாருக்கு கோபம் மேலும் அதிகமானது “ஏய் நீ சொல்லப் போரையா இல்ல நான் உங்க ஸ்கூலுக்கு ஃபோன் போடவா?” என்றார்.

அவன் “வேணாம்பா வேணாம்பா நானே சொல்றேன்” என்று அழுதுகொண்டே ஆரம்பித்தான்.

“எங்க ஸ்கூல பசங்க எல்லாம் உங்க ஸ்கூல் மூடினதுக்கும் நீங்கதான் காரணமுன்னு சொல்லி கேலிபண்றாங்க” என்று கூறி அழுதான்.

இதை சற்றும் எதிர்பாரத வாத்தியார் அதிர்சியில் உறைந்தார்.

“யாருடா சொன்னது உங்க அப்பாதான் காரணமுன்னு, கழுதைங்க அவனுங்களுக்கு என்ன தெரியும் உங்க அப்பாவை பத்தி, இப்பவே உங்க ஸ்கூலுக்கு போயி அவனுங்கள நாலு கேள்வி கேக்கணும்……” “…..உங்க அப்பாகிட்ட படுச்சவங்க எத்தன பேரு நல்ல வேலையில இருக்காங்க தெரியுமா, உங்க அப்பா தெருவில நடந்த இந்த ஊருல வணக்கம் வைக்காத ஆளே இல்ல, இப்ப இருக்கிற அந்தப் பொடிப்பசங்களுக்கு என்ன தெரியும்?” என்று முடித்து கணவனின் முகத்தை பார்த்தார்.

வாத்தியாரின் முகம்  படபடப்பாய் இருந்தது .

“நானும் இதெல்லாம் சொன்னேம்மா, அப்பா நல்லாசிரியர் அவார்ட் வாங்கினவருன்னும் சொன்னேன், அதுக்கு அவனுங்க அப்ப எதுக்கு உங்க அப்பா உன்னைய இந்த பள்ளிகூடத்தில படிக்க வைகிறாரு, அவரு நல்ல வாத்தியாருன்னா உன்னையும் அவர் ஸ்கூல தானே படிக்க வச்சிருக்கனும்னு கேக்குறாங்க” என்றான்.

வாத்தியாரின் முகம் வேர்க்கத் தொடங்கியது, கைகள் நடுங்கத் தொடங்கின தண்ணீரை எடுத்து வேகமாக குடித்தார் .

“உன்ன இங்கிலீஷ் மீடியம் படிக்க வைக்கணுனுதான் அந்த ஸ்கூல சேத்துவிட்டோம்”. என்று கூறிவிட்டு கணவனைப் பார்த்தார், வாத்தியாரின் முகம் வேர்த்து மெல்ல கண்கள் சொக்கி அப்படியே தரையில் சரிந்துவிட்டார்.

“என்னங்க என்னங்க, ஐயோ! நான் என்ன பண்ணுவேன்” என்று பதட்டத்துடன் “தண்ணிய எடுத்து அப்பா முகத்துல தெளி” என்று மகனிடம் சொன்னாள்.

கணவனை தனது மடியில் பிடித்து வைத்துக்கொண்டாள், மகன் அழுவதை நிறுத்தி தண்ணீர் எடுத்து அப்பாவின் முகத்தில் இரண்டு முறை தெளித்தான்,

“அந்த ஃபேன போடுப்பா” என்று மகனிடம் கூறிவிட்டு,

“என்னங்க என்னங்க முழுச்சு பாருங்க” என்று எழுப்பினாள்.

அடுத்த கணமே வாத்தியார் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.

“ஃபேன இந்த பக்கமா திருப்பி வைச்சிட்டு, அப்பா மாத்திரையை எடுத்திட்டு வா” என்றாள்.

ஐந்து நிமிடத்திற்குள் வாத்தியார் எழுந்து உட்கார்ந்துவிட்டார். “BP மாத்திர போடாதால மயக்கம் வந்துடுச்சு” என்று மனைவி கூறிக்கொண்டே, கணவனிடம் இந்த மாத்திரையை சாப்பிடுங்க சரியாகிவிடும்” என்றாள்.

வாத்தியார் மாத்திரையை விழுங்கிவிட்டு “நான் நல்ல வாத்தியார் இல்ல, இந்த பள்ளிக்கூடம் மூடுறதுக்கு நானும் ஒரு காரணம், நானும் ஒரு காரணம்” என்று புலம்பினார்.

“நீங்க சும்மா இருங்க, அந்த பொடியனுங்க எதோ தெரியாம கிண்டல் பண்ணிருக்காங்க, உங்களைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்” என்று சமாதனப்படுதினாள்.

“இல்ல இல்ல நானும் ஒரு காரண மாயிட்டேன், இந்த பாவத்தை எங்கேபோய் சரிபண்ணுவேன், நான் நல்ல ஆசிரியரா இருந்த நம்ம மகனேயும் நம்ம பள்ளிகூடத்தில தானே படிக்கவச்சிருக்கணும்? நானும் ஒரு காரணம்” என்றார்.

“இல்லங்க நம்ம பொண்ணுங்க ரெண்டுபேரையும் உங்க பள்ளிக்கூடத்தில தானே படிக்கவைச்சீங்க, நீங்க  சும்மா மனசைப்போட்டு குழப்பிகாதீங்க, உங்கலுக்கு BP வேர இருக்கு” என்றாள்.

மீண்டும் வாத்தியார் மயங்கி மடியில் சாய்ந்து விட்டார்.

“என்னங்க என்னங்க என்று கூறிக்கொண்டே, தம்பி மாமா வீட்டுக்கு போய் அத்தைய அழைச்சிட்டு வா என்று மகனிடம் கூறினாள்.

“சரிமா....” என்று மகன் கிளம்பினான்.

“டே அங்கே எதுவும் சொல்லாதே, அம்மா கூப்பிடறாங்கனு மட்டும் சொல்லிட்டு வா” என்று மகனிடம் சொல்லிவிட்டு, தனது முந்தைனையில், கணவனின் முகத்தை துடைத்துவிட்டாள்.

வாத்தியார் மெல்ல கண்களைத் திறந்தார், “நானும் ஒரு காரணம் காரணமாயிடேன்ல்ல.... நானும் ஒரு காரணமாயிடேன்ல்ல...” என்று சொல்லிக்கொண்டே மெல்ல எழுந்தார்.

“என்னக்கு ஒரு மாதிரியா இருக்கு, என்ன பெட்ரூம்முக்கு கூட்டிட்டுபோ” என்றார்.

கணவரை இரண்டு கையிலும் தாங்கிப் பிடித்தவாரு படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கட்டில்லில் படுக்க வைத்துவிட்டு, “ஃபேன போடவாங்க” என்றாள்.

“பள்ளிக்கூடம் மூடுனதுக்கு நானும் ஒரு காரணமாயிடேன்ல்ல?, ச்சே எனக்கு எங்கபோச்சு புத்தி” என்று புலம்பினார்.

“நான் ஃபேன போடுறேன், நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, எதையும் நெனைக்காதீங்க” என்று ஃபேன போட்டுவிட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் கண்ணீர் ததும்பும் கணங்லோடு அங்கும் இங்கும் கைபேசியேத் தேடினாள். கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது, மகனும் ஓடிவந்தான்.

“அம்மா... அத்தை இப்போ வாரங்க, அப்பா எப்படி இருக்காரு?”

“அப்பா படுதிருக்காரு தொந்தரவு பண்ணாதே!, அங்கே ஒன்னும் சொல்லேல்ல? இந்த ஃபோன்ல சின்னகவுக்கு கூப்பிடு...”

வேகமாக ஃபோனை வாங்கியவன், அக்காவின் நம்பரை தேடி அழுத்தினான். வாத்தியாரின் சின்ன மகள் பக்கத்துக்கு டவுனில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறாள். அவள் விடுதியில் தங்கி படிக்கிறாள்.

“ச்சே ஃபுல் ரிங் போகுது... எடுக்க மாட்டேன்க்கிரா’

“ஏய் மெசேஜ் பண்ணு, கொஞ்சம் நேரத்தில அவ ஃபோன் பண்ணுவா”, “கால் மீனு மட்டும் மெசேஜ் பண்ணு...”

“அம்மா அதோ அத்தை வாரங்க”

உடனே ஒரு துண்டை எடுத்து முகத்தை துடைதுகொண்ட வாத்தியாரின் மனைவி.

“என்னாச்சு? என்னமோ தம்பி அவசரமா வரசொன்னான்?”

“அது ஒண்ணுமில்ல, அவரு BP மாத்திர சாபிடாம மயங்கி விழுந்துட்டாரு”

“அய்யோ! ஏதாவது அடிபட்டிருச்சா?”

“இல்ல இல்ல....சாப்பிடும்போதுதான்... தாங்கிப் பிடிச்சிட்டோம்”.

“சரி எங்க அவரு?’ மாத்திர சப்பிடாரா?”

“உள்ள கட்டிலுல படித்திருக்காரு”

“இருக்கட்டும் டாக்டருக்கு ஃபோனே போடுவோமா?”

“வேணாம் இப்பதான் மாத்திர போட்டாரு, சம்பந்தி ஏதோ மீடிங்ன்னு சொல்லிட்டு போனாரே”

“இவருக்கு ஊரு நாட்டாமை பாக்கிறதுக்கே நேரம் சரியாய் இருக்கும்.... அவர பாத்துகோங்க, நான் தோட்டத்துக்கு ஆளை அனுப்பிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அவர் போனவுடன் கதவை அடைத்து விட்டு வந்து, மகனை கூபிட்டாள்.

“தம்பி வா, நீ சாப்பிடு”

“எனக்கு வேணாமா”

“நீ சாப்பிடுப்பா, ஏன் எல்லாரும் சேர்ந்து என்னை பாடுபடுத்துறீங்க”

மகன் உடனே அழுதுவிட்டான்.

“என்னலத்தான் அப்பாவுக்கு இது மாதிரி ஆச்சா?”

“அழுகாம வந்து ஒழுங்க சாப்பிட்டு” சற்று கோபத்துடன் அதட்டினாள்.

அவன் மெல்ல எழுந்து வந்து சாப்பிட தொடங்கினான்.

“அம்மா நீங்களும் சாப்பிடுங்க”

பதில் ஒன்றும் கூறாமல் தரையில் அப்படியே படுத்துவிட்டாள், அவள் கண்களில் கண்ணிர் வழிந்தோடி தரையை ஈரமாக்கின.

ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு அவன் சோபாவில் போய் படுத்துவிட்டான். அவன் சிந்தனைகள் எல்லாம் அவன் பள்ளியிலே இருந்தது, அவனை கேலி செய்தவர்களை ஏதாவது செய்யவேண்டும், அவர்களை எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான். திரும்பி அம்மாவைப் பார்த்தான், அவர் ஹாலில் தரையில் படுத்திருந்தார். அவன் பழிவாங்குவாங்குவதற்கான பல்வேறு வழிகளை வகுத்துக் கொண்டிருந்தான். நேரம் வேகமாகவே போயிற்று.

திடிரென வீட்டுக்குள் ஏதோ சப்தம் கேட்டது. அவன் மெல்ல திரும்பிப் பார்த்தான், அம்மா தரையில் படுத்திருந்தாள், இப்போது சப்தம் இல்லை.

சற்று நேரம் கழித்து மீண்டும் சப்தம் கேட்டது, அவன் மெல்ல படுக்கை அறையை நோக்கிப் போனான் சப்தம் அதிகமானது.

“ஏய் யாருடா நீங்க? என்ன பண்ணுறேங்க? போங்கடா” அப்பாவின் புழம்பல் சப்தம் கேட்டு அவன் பயந்து அம்மாவை எழுப்பினான்.

“அம்மா அம்மா”

அவள் “என்னாச்சு என்னாச்சு...” பதட்டத்துடன் எழுந்தாள்.

“ஷ்ஷ்ஷ்... அப்பா”

“ஏய் நான் விடமாட்டேன், நான் விடமாட்டேன், கீழ போடு, சொல்றேன் கீழபோடு” வாத்தியாரின் புழம்பல் அதிகமானது.

பயம் கழந்த பதட்டத்துடன் இருவரும் படுக்கை அறைகுள் எட்டிப் பார்த்தார்கள். வாத்தியார் கைகளை அசைத்துக்கொண்டு தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்.

உள்ளே சென்ற வாத்தியாரின் மனைவி, “என்னங்க என்னங்க” என்று வாத்தியாரை எழுப்பினார்.

அவர் அமைதியானார் ம்ம்... ம்ம்... என்று மட்டும் முனங்கினார்.

வாத்தியாரின் நெற்றியை மெல்லத் தொட்டுப் பார்த்தாள், ஜுரம் அடிதுகொண்டிருந்தது.

“ஐய்யோ நல்ல ஜுரம் அடிக்குதே! தம்பி பெரிய அக்காகவுக்கு ஃபோன் போட்டுக் கொடுப்பா....”

அவன் ஃபோனை எடுத்து வேகமாக கொடுத்தான்.

“அம்மா ரிங் போகுது”

“கொடு”

மறுமுனையில். “அப்பா”

“நான் அம்மா பேசுறேன், அப்பா தூங்கிகிட்டு இருக்காரு”

“சாப்பிடச்சா?”

“ம்ம்... அப்புறம், அப்பாவுக்கு லேச ஜுரம் அடிக்குது.. மாத்திர ஏதாவது கொடுக்கனுமா?”

“ஏன் என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல சும்மா படுத்திருந்தாரு... லேசாதான் ஜுரம் அடிக்குது”

“அப்படின மாத்திர ஒன்னும் வேணாம்மா... BP டேபிலேட் சாபிடரா?”

“ம்ம்.. யாரோ கால் பண்றாங்க, நீ கட் பண்ணுப்பா, அப்புறம் கால் பண்றேன்”

“தம்பி யாரோ கால் பண்ணுனாங்க பாரு”

அவன் கைபேசியை வாங்கினான். உடனே மீண்டும் அழைப்பு வந்தது.

“அம்மா சின்ன அக்க கால் பண்றா, இந்தாங்க”

“ஹலோ”

“நான் அம்மா பேசுறேன்”

“நான் கிளாஸ்ல இருந்தேன் அதுதான் எடுக்க முடியல, என்ன சொல்லுங்க”

“சும்மா தான்”

“நான் என்னமோ பயந்துட்டேன், அப்பா எங்க ஸ்கூலுக்குப் போகல”

“இல்ல”

“சரிமா நான் இவினிங் கால் பண்றேன்.. இப்போ ஃபோனை வைக்கிறேன்”

சின்ன மகளுக்கு இங்கு நடந்த நிகழ்வுகள் ஒன்றும் தெரியாது.

மகன் “அம்மா நான் போய் டாக்டரே கூட்டிட்டு வரவா?”

“வேணாம் அதுதான் அக்காகிட்ட பேசிட்டோம்மில்ல... விடு ஜுரம் சரியாயிடும்”

என்ன செய்யவது என்று ஒன்றும் புரியாமல் வாத்தியாரின் மனைவி அங்கே தரையில் உட்கார்ந்து விட்டாள்.

மகன் அமமாவின் மடியில் படுத்துக்கொண்டு சொன்னான், “அம்மா எனக்கு எண்ணமோ பயமாயிருக்கு”.

அவளால் எதுவும் சொல்லமுடியவில்லை அடுத்து என்ன செய்வது என்று யோசித்துகொண்டிருந்தாள். சுமார் அரைமணிநேரம் ஆகியிருக்கும் சம்பந்தியும் அவரின் மனைவியும் வந்தார்கள்.

“அவருக்கு எப்படியிருக்கு?”

“ம்ம் படுத்திருக்காரு, ஜுரம் வேர அடிக்குது”

“அப்ப ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாமா? இல்ல டாக்டரை இங்க கூட்டிக்கிட்டு வரவா?”

“இருக்கட்டும் மதினி, உங்க மருமககிட்ட இப்பதான் போன் போட்டு கேட்டோம்”

“இந்த இதுல சாப்பாடு இருக்கு” என்று ஒரு தூக்குபத்திரத்தை கொடுத்தார்கள்.

“அவரையும் எழுப்பி சாப்பிட்ட சொல்லங்க”

“இருக்கட்டும் மதினி, நாங்க என்ன பாவம் பண்ணினோமோ இந்த பள்ளிகூடத்தை மூடி இவரை இப்படி பண்ணிட்டாங்களே”

“அத விடுங்க இப்ப பேசி ஒன்னும் பண்ணமுடியாது, அவருக்கு பிடிக்கலேன்ன வேலை ராஜினாமா பண்ணிட்டு இங்கேயே இருக்கட்டும், அவரு வேலைக்குப் போய்தான் கஞ்சி குடிக்கனுமா?” என்று சம்பந்தி மனைவி சொன்னார்.

“நீங்க வேர மதினி இதை சொன்னா அவ்வளவுதான். வாத்தியார் வேலை வந்ததும், மத்திய சர்க்கார் வேலையேவே விட்டுப்போட்டு வந்தவரு, பள்ளிக்கூடம்ன அவரருக்கு உசிரு”.

அமைதியாக இருந்த சம்பந்தி பேச ஆரம்பித்தார். “அவருக்கு கஷ்டமாதான் இருக்கும், இருந்தாலும் எதார்த்தத்தை ஏத்துகனுமில்லையா? எல்லாம் சரியாயிடும் அவரை எழுப்பி சாப்பிடுங்க”.

அவர்கள் பேசிகொண்டிருக்கும்போது படுக்க அறையில் இருந்து சப்தம் வந்தது. வாத்தியார் மீண்டும் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

“ஏய் நான் விடமாண்டேன், யாருடா நீங்க? நான் விடமாட்டேன்”

வாத்தியாரின் மனைவியும் மகனும் படுக்கை அறையை நோக்கி ஓடினார்கள், சம்பந்தியும் அவரது மனைவியும் என்ன நடக்கின்றது என்று புரியாமல் பின்தொடர்ந்தார்கள்.

“இடிக்கதீங்க இடிக்கதீங்க”

வாத்தியாரின் மனைவி அழுதுகொண்டே கணவனை எழுப்பினாள்.

 “என்னங்க என்னங்க”

சட்டென்று விழித்த வாத்தியார் “அங்க பள்ளிக்கூடத்தை யாரோ இடிகிறாங்க, நீங்க இங்க என்ன பண்றீங்க, என்ன விடுங்க நான் போய் தடுக்கனும், நான் போறேன்... நான் போறேன்...”.

மனைவி அவரை இருக்க பிடித்துக்கொண்டாள், மகனும் “அப்பா அப்பா” அவரை பிடித்துக்கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டான்.

சம்பந்திக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் வாத்தியாரை பிடித்து ஒரு உலுக்கினார். வாத்தியார் மெல்ல அமைதியானார், உடம்பில் ஜுரம் அதிகமா இருந்தது. வாத்தியார் சில நிமிட அமைதிக்கு பிறகு சம்பந்தியின் முகத்தைப் பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.

“நானும் ஒரு காரணம், என்னாலதான் பள்ளிக்கூடம் மூடினாங்க, என்னலதான் மூடினாங்க” 

வாத்தியார் சுயநினைவில் இல்லை என்பதை உணர்ந்த சம்பந்தி, “இவரைபிடிங்க” என்று மனைவியிடம் கொடுத்துவிட்டு தனது கைபேசியில் ஆம்புலன்ஸ்க்கு போன் செயதார்.

“ஆம்புலன்ஸ் இப்ப வந்திரும், நீங்க பழைய மாத்திர சீட்டு, மாத்திர எல்லாம் எடுக்காங்க ஆஸ்பத்திரிக்கு போகலாம்”

வாத்தியார் ம்ம்... ம்ம்ம்..... என்ற முனங்களுடன் நடுங்க ஆரம்பித்துவிட்டார். ஜுரம் அதிகமாகவே இருந்தது.

ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்திலே வந்துவிட்டது. வாத்தியாரை ஏற்றிக்கொண்டு, வாத்தியாரின் மனைவி மற்றும் மகன் அவர்களுடன் சம்பந்தியும் ஏறிக்கொண்டார்.

சம்பந்தி மனைவிடம் சொன்னார் “நாங்க போன் போடுறோம், நீ அப்புறம் வா”

ஆம்புலன்ஸ் வேகமாக நகர்ந்தது. ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் ஒரு காட்டன் துணியில் தண்ணீர் நனைத்து வாத்தியாரின் நெற்றியல் வைத்தார்.

“சார் எந்த ஹாஸ்பிட்டல் போகணும்”

“பெரிய ஆஸ்பத்திரிக்கு போங்க”

வாத்தியாரின்  மனைவி கண்ணீரோடு கணவனின் தலையை தனது மடிமீது வைத்து பிடித்துக்கொண்டாள்.

சம்பந்தி தனது கைபேசியில் மகனுக்கு பேசினார்.

“மாமாவுக்கு ஜுரம் அதிகமாயிடுச்சு நாங்க இப்ப ஆஸ்பத்திரிக்கு கூடிட்டு போறோம், நீங்க வரமுடியுமா? மருமககிட்ட சொல்லவேண்டாம்! பயப்படபோகுது!”

“என்னாச்சு... இப்படி திடீருன்னு”

“அது ஒன்னும் இல்ல நீங்க வாங்க”

“எந்த ஆஸ்பத்திரிக்கு கூடிட்டுபோறேங்க?”

“பெரிய ஆஸ்பத்திரிக்கு”

“வேணாம் நீங்க, மதுரையில தனியார் ஆஸ்பத்திரிக்கே கூட்டிடுபோங்க நான் வீட்டுக்கு போய் அவள கூட்டிட்டு கிளம்புறேன்”.

ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆஷ்பத்திரிக்கு தகவல் கொடுத்தார், வாத்தியார் ஜுரம் அதிகமானதால் நடுங்க ஆரம்பித்துவிட்டார். ஆம்புலன்ஸ் அங்கே சென்றதும் தயாராக இருந்த மருத்துவ உதவியாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள்.

“நான் ஆம்புலன்ஸ அனுப்பிவிட்டு வர்றேன் நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கேட்டார் “எவ்வளவு தம்பி”.

“பணம் ஒன்னும் இல்ல சார், இதுல ஒரு கையேழுத்து போடுங்க”

கையேழுத்து போட்டுவிட்டு “நன்றி தம்பி, கரெக்டா வந்து உதவி பண்ணுநீங்க”

அவசர சிகிச்சை வெளியில் வாத்தியாரின் மனைவியும் மகனும் காதிருந்தார்கள். உடனே ஒரு செவிலியர் ஒரு கையில் பெரிய சீட்டுடன் வந்தார்.

“இப்ப 108 ஆம்புலன்ஸ்ல வந்தா ஃபேசண்டோட யாரு இருகாங்க?”

“என்ன மேடம் வேணும்” என்று வாத்தியாரின் மகன் கேட்டான்.

“ஃபேசண்டோட பேரு பதிவு பண்ணனும் வாங்க, அப்புறம் இதை மெடிக்கல்ல வாங்கிட்டு வரணும்”

அதே சமயம் சம்பந்தியும் அங்கு வந்தார்.

“நீங்க ட்ரீட்மெண்ட் பண்ணுங்க ATMல பணம் எடுத்துட்டு வந்திடுறேன்” என்றார் சம்பந்தி.

செவிலியர் சொன்னார் “சார் பணம் அப்புறம் கட்டிக்கலாம். பேரு, அட்ரஸ் சொல்லுங்க”

வாத்தியாரின் மனைவி சொன்னார் “வீட்டுகாரு பேரு இரகுபதி, வயசு 54

“அட்ரஸ் சொல்லுங்க”

அனைத்தையும் எழுதிக்கொண்டு, படிவத்தில் கையெழுத்து போடசொன்னார்.

கையெழுத்து போட்டவுடன் நர்ஸ் கேட்டார் “இன்னொருத்தரும் கையெழுத்து போடணும்”

உடனே சம்பந்தி நான் போடுறேன் என்று பேனாவை வாங்கினார். அந்த படிவத்தை படித்துப் பார்க்க நேரமில்லால் உடனே கையெழுத்துப் போட்டார்.

“உங்க பேரே சொல்லுங்க”

சம்பந்தி சொன்னார் “ இவங்க பேரு வசந்தி, நான் மாரிமுத்து”

“தாங்க்ஸ்”

“அவரு எப்படி இருக்காரு”

“ஒன்னும் பயபடாதீங்க” என்று சொல்லிவிட்டு செவிலியர் வேகமாக உள்ள சென்றார்.

சம்பந்தி “வா கேண்டீனுக்கு போயிட்டு வரலாம்” என்று வாத்தியாரின் மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

வசந்தியம்மாவின் கண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாமல் வாடின. அருகிலும் இதே நிலைதான், அழுகையும் ஆறுதலும் என நிறைய பேர் இருந்தார்கள். அருகில் இருந்த ஒரு பெண் கேட்டாள் “உங்க வீட்டுகாருக்கு என்ன ஆச்சு?”

“BPயும் ஜூரமும்”

“இப்ப யாரக் கேட்டாலும் BPதான்... அந்த காலத்துல நம்ம தாத்தா பாட்டி எல்லாம் இந்த மாதிரி எந்த தொந்தரவுமே இல்லமா நல்ல இருந்தாங்க, இப்ப என்னடான்னா புதுசு புதுசா சொல்றாங்க”

இதை  கேட்க ஆர்வமில்லாமல் தலையை கீழே குனிந்தபடியே இருந்தார் வசந்தி. ஆனால் அந்த பெண் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.

“நேத்து இப்படித்தான் ஒரு நாப்பது வயசுதான் இருக்கும் ஒருத்தரை BP அதிகமாகி ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க...”

அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய வசந்தியின் மனம் முற்ப்பட்டது.

“இப்ப எப்படி இருக்காரு”

“அத ஏன் கேக்குறீங்க, BP அதிகமாகி தலையில இரத்த நரம்பு வெடுச்சு ஒரு பக்கம் கையும் காலும் அசைய மாட்டேங்குதாம்.. அந்த சிகப்பு கலரு சேலை கட்டிருக்குல அவங்க வீட்டுகாரு... பாவம் சின்ன வயசு”.

இதை கேட்டதும் வசந்தியினால் கண்ணீரை கட்டுபட்டுத்த முடியவில்லை, வாயை சேலையால் மூடிக்கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டார். இதை கேட்டதிலிருந்து வசந்தியின் மனம் தேவையற்றதை சிந்திக்கத் தொடங்கியது. ஆனாலும் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு தனக்குத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டார்.

சற்று நேரத்திலேயே மாரிமுத்துவின் மனைவி மற்றும் நிறைய உறைவினர்கள் வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வசந்திக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

பல்வேறு பரிசோதனைகள் இரத்தம், சிறுநீர், MRI ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஒரு இரண்டு மணிநேரம் கழித்து ஒரு செவிலியர் வந்து “இங்க வசந்தி யாரு, வாங்க பெரிய டாக்டரு கூப்பிடுறாங்க”

இதை எதிர் பார்த்து காத்திருந்த வாத்தியாரின் மனைவி வேகமாக ஓடினார், கூடவே மாரிமுத்துவும் பின்தொடர்ந்தார்.

“வாங்கம்மா, உட்காருங்க”

“சார் அவருக்கு எப்படியிருக்கு”

“ஒன்னும் பயப்பட தேவையில்ல, BPயும் ஜூரமும் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு, இப்ப ட்ரீட்மெண்ட் பண்ணுன பிறகு கொஞ்சம் கம்மியாயிருக்கு, நாளைக்கு இருதய டாக்டரு வந்து செக்பண்ணுப் பிறகு அடுத்து என்ன பண்ணலாமுன்னு சொல்றோம், இப்ப அவரு ICUதான் இருக்கணும்”

மாரிமுத்து சொன்னார் “அவரோட பொண்ணும் டாக்டருதான்”

“அப்படியா? எந்த ஹஷ்பிட்டல இருக்காங்க? நீங்களும் உட்காருங்க சார்”

“இப்பதான் MBBS முடுசாங்க, என்னோட பையான கல்யாணம் பண்ணிகிட்டு பெங்களுருல இருகாங்க”

“ஓ அப்ப உங்க பையனும் டாக்டரா?”

“இல்ல சாப்ட்வேர் இன்ஜினீரா இருக்கான்”.

“ஸ்பெஷல் வார்ட்ல ரூம் இருக்கு, நீங்க அங்க போங்க”

சார் அவருக்கு ஒன்னும் இல்லயில?” வசந்தி பதட்டத்துடன் கேட்டார்.

“பயபடாம போங்க, நீங்க விசிடர் டைமில அவர பார்க்கலாம் ” என்று சொல்லிவிட்டு எழுந்து அவர்களை அனுப்பி வைத்தார்.

வெளியில் காத்திருந்த உறவினர்கள் கூட்டம் “எப்படி இருக்காரு”

“நல்ல இருக்காரு” வாங்க ரூமுக்கு போகலாம் என்று அழைத்துக்கொண்டு போனார்.

பெரிய மகளிடம் இருந்து போன் வந்தது, அவள் அழுதுகொண்டே கேட்டாள் “அப்பாவுக்கு என்னாச்சு”.

“ஒன்னும் இல்ல நாங்க ரெம்ப பயந்து ஆஸ்பத்திரிகு கூட்டிட்டு வந்திட்டோம்”

“நீங்க ஃபோன அப்பாகிட்ட கொடுங்க நான் பேசணும்”

“இப்ப ஊசி போட்டுகிட்டு தூங்குறாரு, டாக்டரு தொந்தரவு பண்ணவேண்டாம்முன்னு சொன்னாங்க”

ஃபோன இங்க கொடுங்க என்று மாரிமுத்து வாங்கினார் “உங்க அப்பாவுக்கு ஒன்னும் இல்ல, நாங்க எல்லாம் இங்கதான் இருக்கிறோம், பயப்படாம வாங்க”

நலம் விசாரிப்புகள் ஆறுதல்கள் சோகம் என அன்று இரவு கழிந்தது. ஒருமுறை மட்டும் வாதியாரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். சில உறவினர்கள் அங்கேயே தங்கிவிட்டனர், மாரிமுத்துவும் அவரது மனைவியும் காலையில் வருவதாக சொல்லிவிட்டு சென்று விட்டனர். வசந்தியும் மகனும் நீண்ட நேரத்திற்க்கு பிறகு தூங்கிவிட்டனர்.

மறுநாள் காலை மணி ஐந்து மகளிடம் இருந்து ஃபோன் வந்தது.

“அம்மா நாங்க ஹாஸ்பிட்டல் வந்தாச்சு எந்த வார்டு”

“ஸ்பெஷல் வார்டு நான்காவது மாடி”

சில நிமிடங்களில் மகளுன் மருமகனும் வந்துவிட்டார்கள். வந்தவுடன் மகள் கேட்டாள். “அப்பா எங்கே”.

“அப்பா ICUல இருக்காரு”

கேட்டுதும் அழுதுவிட்டாள். “என்னம்மா ஆச்சு எதுக்கு என்கிட்டே சொல்லல்ல அப்பாவை எதுக்கு ICU அட்மிட் பண்ணிருகாங்க..”

“ஒன்னும் இல்ல இப்ப நல்ல இருக்காரு இன்னைக்கு வார்டுக்கு மாத்திருவாங்க”

சற்று நேரத்திலேயே அனைவரும் சகஜநிலைக்கு திரும்பினார்கள். வசந்திக்கு புது பலம் கிடைத்துவிட்டது. மாரிமுத்துவும் அவரது மனைவியும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருந்தார்கள். அனைவரும் சாப்பிட்டுவிட்டு மகளும் மருமகனும் களைப்பில் சிறிது தூங்கிவிட்டார்கள்.

சுமார் பத்து மணி அளவில் ஒரு செவிலியர் வந்து வசந்தியை அழைத்தார் “டாக்டரு உங்கல வரசொல்ற்றாங்க”.

உடனே மகள், மருமகன் மற்றும் வசந்தி டாக்டரின் அறைக்குப் போனார்கள்.

“வாங்கம்மா” மருத்துவர் அழைத்தார்.

மகள் முதலில் உள்ளே போனாள் “ஐ ஆம் டாக்டர் தர்ஷிணி”

“கம் டேக் யுவர் சீட், அம்மா சொல்லிருந்தாங்க... நீங்களும் உட்காருங்க...”

“ஹி ஷ் ஆல் ரைட், கார்டியோலோஜிஷ்ட் பாத்துட்டுப் போனாரு, ஒன்னும் பிரச்சனை இல்ல, BP மட்டும் கொஞ்சம் அதிகமா இருக்கு, டேப்லேட் மாத்திருகோம், பட் ஹி நீட்ஸ் ICU கேர் ஃபார் டூ மோர் டேய்ஸ்”.

“ஓகே சார்.... எப்ப அப்பாவைப் பார்க்கலாம்”

11.30 AM விசிட்டர் டைம் யு கேன்”

நன்றி சொல்லி விடைபெற்றார்கள். இரண்டு நாள் கழிந்தது... ஊரில் இருந்து நிறைய சொந்தங்கள் நண்பர்கள் என்று நாள் போயிற்று. சின்ன மகள் நந்தினியும் வந்துருந்தாள். என்ன நடந்தது என்பதை யாரும் பெரிதாக கேட்கவில்லை, BP அதிகமாய் அட்மிட் ஆகிருக்கிறார் என்றும் மட்டும் தெரியும். மருமகன் தனக்கு ஆபீஸ் போக வேண்டும் என்று கிழம்பிவிட்டார்.

நந்தனி தம்பியிடம் கேட்டாள் “பிரவீன் நீ ஸ்கூலுக்கு போகலையா? மாமாவீட்டுல இருந்து போகலாமில்ல?”

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். வசந்தி குறுக்கிட்டு

“அதுதான் ரெண்டு நாளுல வீட்டுக்கு போயிருவோம்ல, அப்புறம் போகட்டும்”

வாத்தியாரின் உடலில் நல்ல முன்றேற்றம் அடைந்திருந்தது. மருதுவர் அழைக்க என்றும் போல் இன்றும் வசந்தியும் தர்ஷினியும் போனார்கள். மருத்துவர் வசந்தியை வெளியில் இருக்க சொல்லிவிட்டு தர்ஷினியிடம் ஏதோ சொல்லிவேண்டும் என்றார்.

வசந்திக்கும் தர்ஷனிக்கும் மனசு படபடடுத்தது,

வசந்தி “டாக்டர் சும்மா சொல்லுங்க ஒன்னும் இல்ல”

தர்ஷனியும் சொன்னாள் “நீங்க சொல்லுங்க சார் நோ ப்பிரஃப்லம்”

“நத்திங் டு ஃவொரி, அவரோட BP நார்மல் ஆயிடுச்சு, ஹி இஸ் ரெடி டு ஷிப்ட் டு வார்டு”

சற்று இடைவெளிக்கப் பிறகு “பட் அவரு மனசு ஒருமாதிரி ரெஷ்டா இல்ல, எப்பவுமே எதையோ நினைச்சுகிட்டே ரெஷ்ட்லேஸ்ஸ இருக்காரு, சோ நீங்க வார்ட்ல பத்திரமா பாத்துகோங்க, வேர எதையும் அவருக்கு டென்ஷன் படுத்திற மாதிரி எதுவும் பேசாதீங்க”.

இரகுபதி வார்டுக்கு மாற்றப்பட்டார் அனைவருக்கும் மழிச்சியான தருணம், அனைவரின் முகத்திலும் ஆனந்தம் தெரிந்தது, உறவினர்கள் யாரும் வரவேண்டாம் நாளைக்கு ஊருக்கு வருவார்கள் என்ற செய்தி மாரிமுத்துவின் வழியாக ஊரைச் சென்றடைந்தது. வாத்தியார் அமைதியாவே படுத்திருந்தார், யாருடனும் பேசவில்லை அரை மயக்கத்தில் இருந்தார். மத்தியான உணவுக்குப் பிறகு வாத்தியார் தூங்கிவிட்டார், மற்றவர்களும் சற்று ஓய்வெடுப்போம் என்று படுத்துவிட்டனர். நந்தினி மட்டும் படித்ததுக் கொண்டிருந்தாள். சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருக்கும், இரகுபதி வாத்தியார் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

“ஏய் யாருடா நீங்க, நான் விடமாட்டேன் நான் விடமாட்டேன்”

இதை கேட்ட நந்தினி பயந்து அம்மாவையும் அக்காவையும் எழுப்பினாள். அதற்குள் வாத்தியாரின் புலம்பல் அதிகமானது.

தர்ஷிணி எழுந்தவுடம் “அப்பா அப்பா என்று ஒலுக்கினாள்”

உடனே விழித்துப்பார்த்த இரகுபதி மீண்டும் கண்களை மூடி புலம்ப ஆரம்பித்துவிட்டார் “நானும் காரணம்... நானும் காரணம்” என தனக்குத் தானே புலம்பினார்.

வசந்தி ரகுபதியின் நெற்றியில் தொட்டுப்பார்த்து “ஜுரம் அடிக்குது”

தர்ஷினி கழுத்தில் கை வைத்து பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

“நான் நர்ஸ் கூப்பிட்டு வரேன்” என்று நந்தினி வேகமாக போன அவள் ஒரு செவிலியரை கூட்டிவந்தாள். செவிலியர் இரகுபதியை தொட்டுப்பார்த்து விட்டு, “ஜுரம் அடிக்குது” இந்த மாத்திரைய போடுங்க என்று மாத்திர கவரில் இருந்து எடுத்து கொடுத்தார்.

நேரம் நேரம் ஆக ஆக ஜுரம் அதிகமானது அதோடு வாத்தியாரின் புலம்பலும் அதிகமானது. தர்ஷிணி மருத்துவருக்கு போன் போட்டு ஆலோசனை கேட்டார். மருத்துவர் நானே வந்து பார்க்குறேன் என்று, அவரே வந்துவிட்டார்.

BPயை பார்த்தார் அதிகமாக இருந்தது வாத்தியார் புலம்பலும் குறையவில்லை. “பெட்டெர் இஸ் அட்மிட் ஹிம் இன் ICU” சொல்லிவிட்டு பதிலுக்காக எதிர்பாக்காத மருத்துவர் செவிலியரிடம் சொன்னார் “நர்ஸ் அட்மிட் இன் ICU”

மறுநாள் தர்ஷினி தலைமை மருத்துவரிடம் கேட்டார் “டாக்டர் அவருக்கு என்னதான் ஆச்சு”

“சரியாடுச்சு BP நார்மல்... நாங்க இப்ப வார்டுக்கு ஷிப்ட் பன்றோம்...., பட் ஒரு சைகியரிஸ்ட் கன்சல்ட் தேவை, ஈவ்னிங் அப்பாய்ன்ட்மென்ட்”

“எதுக்கு”

“அவரு மனசல என்னமோ நினைச்சிட்டு இருகாரு, அதுனாலகூட BP இப்படி ஆகலாம்”

“ஓகே டாக்டர்... தாங்க்ஸ்”

வார்ட்க்கு இரகுபதி மாற்றப்பட்டார், ஆனால் இன்று குடும்பமே ஒரு சோகத்தில் தான் இருந்தது. தர்ஷினி அம்மாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“அம்மா வீட்ல என்ன நடந்துச்சு, ஏதாவது சண்டை போட்டிங்ல, உண்மையே சொல்லுங்க”

“நாங்க ஏன் சண்டை போடுறோம்” சற்று இடைவெளி விட்டு அன்று காலையில் சாப்பிடும்போது நடந்ததை சொன்னாள்.

“சின்ன பசங்க ஏதோ பேசிருகாங்க, அதுனால இதுமாதிரி ஆகுமா?”  BP டேப்லேட் ஒழுங்கா எடுத்திருக்க மாட்டரு....”

மாலையில் இரகுபதியை அழைத்துகொண்டு கொண்டு ஐந்தாவது தளத்தில் உள்ள சைகியரிஸ்ட் அறைக்கு போனார்கள்.

ஒரு பணிப்பெண் உள்ளே சென்று “சார் இரகுபதி பெசன்ட்”

“வரச்சொல்லுங்க.... ம்ம்.... அவங்க ரிலேடிவை பர்ஸ்ட் கூப்பிடுங்க”

தர்ஷினியும் வசந்தியும் உள்ளே போனார்கள். பிரவினும் நந்தினியும் தந்தையிடம் உட்கார்ந்திருந்தார்கள்.

வாங்க உட்காருங்க “ஃபிஷிசியன் சொன்னாரு நீங்களும் டாக்டர்தான்னு”

“யெஸ் சார்”

சற்று சாதரணமாக பேச்சு தொடர்ந்தது. இரகுபதி மற்றும் அவரது குடும்ப நிலவரங்களை தெரிந்து கொண்டார். இரகுபதியின் பள்ளிக்கூடம் மூடியதையும் அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் தர்ஷினி சொன்னாள்.

“அது ஒரு காரணமாக இருக்குமா? மே பி லேட் மீ டாக் டு கிம். இப்போ நீங்க போகலாம் நான் அவருகிட்டே பேசுறேன்”.

“நான் புரோஃபஸர் கார்த்திகேயன், உங்க பேரு”

“இரகுபதி”

“Mr இரகுபதி நீங்க டீச்சரா வேலை பார்க்குறீங்க... இல்லையா?”

“ம்ம்”

ஒரு மிக சிறந்த நண்பரைப் போன்று சைகியரிஸ்ட் பேசினார். அவர்களுடைய உரையாடல் சுமார் அரைமணி நேரத்திற்கும் அதிகமானது. பிறகு மெல்ல ஆரம்பித்தார் கார்த்திகேயன்.

“நீங்க ஏன் டீச்சர் வேலையை இவ்வளவு நேசிக்கிறீங்க”

இரகுபதிக்கு யாரோ நீண்ட நாள் பழகிய ஒரு நண்பர் கேட்பது போன்ற மன நிலையில் இருந்தார். தன்னுடைய மனசில் உள்ள அனைத்தையும் கொட்டிவிடவேண்டும் என்று எண்ணினார்.

“சார் எனக்கு சின்ன வயசுல இருந்தே வாத்தியாராகனும்... அதுதான் கனவு, ஒரு இலட்சியமாவே இருந்துச்சு...”

“ஏன் உங்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இந்த வேலையில”

“நான் ஒரு வசதியில்லாத குடும்பதில பொறந்தேன், எங்க அப்பா கூலி வேலைக்கு போனாதான் சாப்பாட்டு, அவ்வளவு கஷ்டம், எங்க ஊருல பள்ளிக்கூடம் இல்ல..”

“ம்ம் அப்புறம்”

“இப்ப என்னுடைய சம்பந்தி மாரிமுத்து இருக்காருல்ல அவரோட அப்பா தன் சொந்த பணத்துல ஒரு இடமும் ஒரு சின்ன கட்டிடமும் கட்டிக் கொடுத்தாங்க, அரசாங்கம் அதுல பள்ளிக்கூடம் ஆரம்பிசாங்க... நானும் மாரிமுத்தும் ஒரே வகுப்பு. நான் படிக்கும்போது சீனிவாசஅய்யருனு ஒரு வாத்தியார் இருந்தார், அவர எனக்கு ரெம்ப புடிக்கும்... நான் எவ்வளவோ நாள் பட்டிணிய பள்ளிக்கூடம் போயிருக்கேன்.... வீட்டு கஷ்டத்துகாக நான் நாலாவதுல படிப்ப நிறுத்திட்டு ஆடுமேய்க்க போயிட்டேன். அப்ப அந்த சீனிவாச வாதியருதான் என்ன வந்து கூட்டிட்டுபோய் படிக்கச்வைச்சாரு, அதுமிட்டும் இல்ல எனக்கு தினமும் அவங்க வீட்டில இருந்துதான் மத்தியான சாப்பாடும் வரும்... சீனிவாச வாத்தியார் மட்டும் இல்லேன்ன நானும் எங்க குடும்பமும் இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாது....”

“ம்ம்.... அதுக்கும் நீங்க டீச்சரானதுக்கும் என்ன தொடர்பு”

“சார் அவர மாதிரியே நானும் வாத்தியார வரணும் இலட்சியமாவே எடுத்துகிட்டேன், அதனால தான் வாத்தியார் வேலை வந்தவுடன் என்னுடைய மத்திய அரசாங்க வேலைவிட்டிட்டு வந்திட்டேன்”

“நீங்க சென்ட்ரல் கவர்மெண்ட்ல வேலையில இருதீங்கலா!”

“நான் ரிசர்வ் பேங்க்ல ஆபிசரா பம்பாயில மூணு வர்ஷம் வேலை பார்த்தேன்”

“அப்ப உங்களுக்கு ஹிந்திகூட தெரியுமா?”

“நல்லாவே பேசுவேன், எழுத கூட பழகிட்டேன்”

“நீங்க ப்ரில்லியன்ட் தான்”

அவர்களுடைய உரையாடல் பரஸ்பரம் நீடித்தது. புரோஃபஸர் கார்த்திகேயன் மெல்ல கேட்டார். “இப்ப நீங்க கடைசியா வேலை பார்த்த ஸ்கூல மூடிடாங்க்ல”

வாத்தியாரின் முகம் வேர்க்கத் தொடங்கியது, “ஆமாம் என்னாலதான் மூடினாங்க, நானும் ஒரு காரணம், நானும் ஒரு காரணம், நான் தான் காரணம்”

வாத்தியாரின் கண்கள் சிகப்பனது, கோபம் அவரது முகத்தில் தெரிந்தது. உடனே புரோஃபஸர் கார்த்திகேயன் “நான் சும்மா தான் கேட்டேன், அப்புறம் இந்த சீனிவாச அய்யர் இப்ப எங்க இருக்காரு”

சற்று அமைதிக்குப் பிறகு “அவர் எங்க இருக்காருன்னு தெரியல”

வாங்க நம்ம ரூமுக்கு போகலாம் என்று எழுந்து வாத்தியாரின் மேலில் ஒரு கையை போட்டுக்கொண்டு வெளியே அழைத்து வந்தார்.

“நீங்க அவரா கூட்டிட்டு போங்க, Mr இரகுபதி, குட் நைட்”

“தர்ஷிணி பிளீஸ்” என்று தர்ஷினியையும் வசந்தியையும் புரோஃபஸர் கார்த்திகேயன் அழைத்தார்.

“வாங்க உள்ளே போய் பேசலாம்”

தர்ஷினியும் வசந்தியும் உள்ளே சென்றார்கள்.

“அவரு மனசு பாதிச்சிருக்கு, கொஞ்சம் கவுன்சிலிங் தேவைப்படும், நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம், கவுன்சிலிங்க்கு எழுதிக் கொடுக்குறேன் ரெண்டு நாளைக்கு ஒருநாள் இங்க வந்து கவுன்சிலிங் எடுத்துக்கனும், என்ன பத்து நாள் கழிச்சு பார்த்தால் போதும், டேப்லேட் இந்த சீட்ல இருக்கு, ஆனா இனி யாரும் அவருடைய ஸ்கூலப் பத்தியோ, இல்ல வேலையப் பத்தியோ பேச வேண்டாம், அப்படி ஏதாவது நடந்துச்சுன்னு BP அதிகமாகிடும்”

“டாக்டர் நாங்க இங்கே இருக்கோம் ஊருக்கு போனா ரிலேடிவ் எப்பவுமே வருவாங்க தொந்தரவுதான், நாங்க குணமான பிறகு போறேம்.

“தட் இஸ் தி பெஸ்ட் ஐடியா”

நந்தினி கல்லூரிக்குச் சென்றுவிட்டாள், பிரவீனையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் அவன் மாமாவின் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றான். தர்ஷினியும் வசந்தியும் இங்கே ரகுபதியுடன் இருந்தார்கள். மாரிமுத்து தினமும் சாப்பாட்டு கொண்டிவந்து கொடுத்தார். உறவினர்கள் வருகை மட்டும் குறையவில்லை. தினமும் கவுன்சிலிங்க்கு வாத்தியாரை அழைத்துச் சென்றார்கள், அவருடைய வேலையேயும் பள்ளிக்கூடத்தைப் பற்றியும் யாரும் கேட்கவில்லை. வாத்தியாரின் உடலில் நல்ல முன்னேற்றம் கண்டது. பழைய நிலைக்கு மெல்ல  திரும்பி வந்துகொண்டிருந்தார்.

இன்று சைகியரிஸ்டிடம் போகவேண்டும். தர்ஷினிக்கு போதும் என்றாகி விட்டுது கணவன் பெங்களூரில் தனியாய் கஷ்டப்படுகின்றார்.

மாலை ஐந்து மணி புரோஃபஸர் கார்த்திகேயனின் அறைக்கு வெளியே அமர்திருந்தார்கள்.

அப்போதுதான் புரோஃபஸர் கார்த்திகேயன் வந்தார், வந்தவுடன் “வாங்க Mr இரகுபதி எப்படி இருக்கீங்க”

“ம்ம் நல்ல இருக்கேன், நீங்க டாக்டர்”

“ஐ ஆம் ஃபைன், கம் கம்”. உள்ளே அழைத்துச் சென்றார்.

“நீங்க வீட்டுக்கு போலாம்”

“ஓகே டாக்டர் அப்ப நான் வர்ரேன்”

“இருங்க இரகுபதி கொஞ்சநேரம் பேசிட்டு போலாம்”

“என்ன பேசுறது டாக்டரு”

“அப்புறம் எப்ப டுடி ஜாயின் பண்றீங்க?”

“என்ன டுடி டாக்டரு”

“அதுதான் டீச்சராதான்”

“என்னாலத்தான் பள்ளிக்கூடத்தை மூடினாங்க அந்த பாவத்தை எங்க போய் சரிபண்ணுவேன்.... ச்சே நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்... நானும் ஒரு காரணமாயிட்டேன்....!”

“இரகுபதி நீங்க கோபபடதீங்க நான் ஒரு ஃபிரண்டா கேட்டேன்”

“என்னாலதான் பள்ளிக்கூடம் மூடினாங்க நான்தான் காரணம்”

“சார் நீங்க எப்படி காரணம்?, எத்தனையோ பள்ளி மூடுறத பேப்பர்ல வருது, எல்லாத்துக்கும் நீங்கதான் காரணமா”

“டாக்டர் மத்த பள்ளிக்கூடம் எதுக்கு மூடினாங்கனு எனக்குத்  தெரியாது, ஆனா என்னோட பள்ளிக்கூடம் மூடினதிற்க்கு நானும் ஒரு முக்கிய காரணம் ஆயிட்டேன்”

“எனக்கு புரியல்ல Mr இரகுபதி” என்று கேட்டார்

“நான் என்னோட குழைந்தையை வேர பள்ளிகூடதில்ல படிக்க சேர்த்துவிட்டது தப்புதானே? நீங்கலே சொல்லுங்க”

“சார் நீங்க உங்க மகனை மட்டும் தானே வேர ஸ்கூல படிக்கவைச்சிங்க ஸ்கூலுக்கு யாரேயும் வரவிடாம தடுக்கல்ல தானே, அப்புறம் எப்படி உங்க மேல தப்பாகும்”

“டாக்டர் நான் வந்து மத்தவங்களுக்கு ஒரு முன்உதாரணமா இருக்கணும் ஆனா என்னோட மகனுக்கு நல்ல கல்வின்னு சொல்லி தப்பான ஒரு முன்உதாரணமாயிட்டேன் அதுதான் மிக பெரிய தப்பு...”

“நீங்க உங்க பையான உங்க ஸ்கூலயே படிக்க வச்சிருந்தாலும் மத்தவங்க அவங்களுக்கு விருப்பமான ஸ்கூலதானே சேத்துவிடுவாங்க அது அவங்களோட விருப்பம். இன்னைக்கு நாடு நல்ல டேவலப் ஆகியிருக்கு எல்லாருகிட்டேயும் பணம் இருக்கு, நல்ல ஸ்கூல பணம் கட்டி படிக்கவைகிறாங்க  இதுல என்ன இருக்கு”.

“டாக்டர் மத்தவங்க எப்படியோ தெரியாது நான் பண்ணினது பெரிய பாவம்”

“சார் நீங்க புரியாம பேசுறீங்க, நான் கவர்மெண்ட் ஸ்கூல படுச்சேன் ஆனா என் பசங்கள இங்கிலீஷ் படிக்க வைக்க தனியார் ஸ்கூல படிக்கவைச்சேன், இப்ப கூட பொண்ணு MBBS படிக்கிறா.. தனியார் காலேஜுல நாப்பது இலட்சம் டோனேஷன், இது தப்பா”

“டாக்டர் இது உங்களுக்கு தப்பா தெரியல, விடுங்க தப்பில்லை, ஆனா உங்க வீட்ல யாருக்காவது உடம்பு முடியலேன நீங்க இருக்கும்போதே வேர டாக்டரா பார்க்க போனா தப்பு தானே?, அதுதான் என்னோட பிரச்சனையும்”

அவரால் பதில் ஒன்றும் கூற முடியவில்லை. சற்று அமைதிக்கு பிறகு.

“Mr இரகுபதி நான் உங்களை நினைச்சு பெருமைப்படுறேன், ஆனா நீங்க பழச நினைச்சு இப்ப உங்க மனசைப்போட்டு குழப்பிகாதீங்க”

“சார் நீங்க எனக்கு ஆறுதல் சொல்லுறது புரியிது, எனக்கும் தெரியும் சார் நான் டென்சன் ஆகுறேன்னு ஆனா பள்ளிக்கூடத்தைப் பத்தி நினைச்ச நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு சார்” என்று சொல்லிகொண்டிருந்த வாத்தியார் முகம் வேர்க்கத் தொடங்கியது. உடனே புரோஃபஸர் கார்த்திகேயன் எழுந்து வந்து “ இரகுபதி உங்க பெரிய பொண்ணு டாக்டர் சின்ன பொண்ணு என்ன பண்ணறாங்க” என்று பேச்சை திசை திருப்பினார்.

“நந்தினி என்ஜினீரிங் படிக்குது”

“ம்ம் எல்லாரையும் நல்ல படிக்க வைச்சுருகீங்க, நாளைக்கு நாம திரும்பவும் சந்திப்போம் இப்போ ரூம்க்கு போகலாம்”

“ஓகே டாக்டர் குட் நைட்”

“குட் நைட் ரகு”

வாத்தியார் வெளியே போனவுடன் தர்ஷினியை புரோஃபஸர் கார்த்திகேயன் அழைத்தார்.

“இப்ப அப்பா கொஞ்சம் பரவயில்லை ஆனாலும் இன்னும் அவரு மனசுல தான் தப்புபண்ணினதா நினைச்சுகிட்டு இருக்காரு, அதை தெளிவு படுதினதான் திரும்ப அதுமாதிரி வாராது, கவுன்சிலிங் கொடுத்த தேரபிஷ்டும் இததான் நினைக்கிறாங்க”

“இப்ப அப்பா முன்ன மாதிரி அதிகமா டென்ஷன் ஆகுறதில்ல டாக்டர்”

“அது மெடிசின், கவுன்சிலிங் அண்ட் இங்க யாரும் பழச அதிகமா நினைவு படுதுறதில்ல அதுதான் காரணம்”

“டாக்டர் இப்ப என்ன பண்ணலாம்”

“அததான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கேன், நான் எத்தனையோ கேஸ் பாத்திருக்கேன் அவங்க எல்லாம் மத்தவங்க மேல பழிசுமத்துவாங்க ஆனா இவரு தேவையே இல்லமா தன் மேல பழியசுமத்திக்கிறாரு, எனக்கே என்ன பண்ணுறதுன்னு தெரியல... வெயிட் நான் நாளைக்கு வந்து சொல்றேன்”

“ஓகே தாங்க்ஸ்” நன்றி சொல்லி விடைபெற்றாள் தர்ஷினி.

அன்று இரவு அம்மாவிடம் சைகியட்ரிஸ்ட் சொன்னதை சொன்னாள் தர்ஷினி. இருவருக்கும் தூக்கமே வரவில்லை.

மறுநாள் மரிமுத்துவும் சைகியட்ரிஸ்டைப் பார்க்க இருந்தார். புரோஃபஸர் கார்த்திகேயன் இன்று வார்டுக்கே வந்தார்.

“இரகுபதி எப்படி இருக்கீங்க”

“ம்ம்” வாத்தியார் அரை தூக்கத்தில் இருந்தார். உடனே தர்ஷினி “டாக்டர் நாங்களே அங்க வர்றோம்.... அப்பா எழுதிருச்ச பிறகு வரலாம்ன்னு இருந்தோம்”

“இட் இஸ் ஓகே, நான் வந்தது உங்கல பார்க்கத்தான்”

“இது இன்னோட மாமனார்” என்று மாரிமுத்துவை அறிமுகம் செய்தார்.

“இரகுபதியோட கிளாஸ் மேட் தானே?”

“டாக்டர் அது எப்படி உங்களுக்கு தெரியும்”

“எல்லாம் உங்க அப்பா சொன்னதுதான், பை த வே வாங்க என்னோட ச்சேம்பர்ல போய் பேசுவோம்”

மாரிமுத்துவும் தர்ஷினியும் புரோஃபஸர் கார்த்திகேயானுடன் சென்றார்கள்.

“நானும் எவ்வளவோ யோசிச்சு பார்த்தேன், ஒரு ஐடியா... என்னோட ஸ்கூல் ஃபிரண்டு IITல படிச்சுட்டு இப்ப ஒரு ஸ்கூல் வச்சு நடத்துறான், அவனுக்கு சமூகசேவையில அதிகமா ஈடுப்பாடு இருக்கு, அவன் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரதுக்கு ஒரு முக்கியாமான காரணமா இருந்திருக்கான், அவன் பேருகூட பேப்பர் டிவின்னு வரும் நீங்களும் கேள்வி பட்டிருக்கலாம், பேரு இலட்சுமிநாராயணன், சென்னைக்கு பக்கத்தில ஒரு கிராமத்தில அவனோட ஸ்கூல் அவனும் அங்கேதான் இருப்பான், நீங்க விருப்ப பட்டீங்கான அங்க ஒருதடவ இரகுபதியை அழைச்சிட்டுபோய் வாங்க”

“டாக்டர் அங்க கூட்டிட்டு போன எப்படி சரியாகும்”

“நான் என்னதான் ஆறுதல் சொன்னாலும், இப்ப இருக்கிற யதார்த்தமான கல்விதுறையில என்ன நடக்குது அதன் நிலமையைப் என்ன, அத பத்தி அதுல இருக்கிற ஒருத்தர் விளக்கிச் சொன்ன இரகுபதிக்கு நல்ல புரியும்- இது என்னோட கணிப்பு, நீங்க தான் டிசைடு பண்ணணும்”

“நீங்க நல்லதுன்னு சொன்னா போயிட்டு வர்றோம் டாக்டர்” என்று மாரிமுத்து சொன்னார்.

“இது இலட்சுமிநாராயனோட போன் நம்பர் அண்ட் அட்ரஸ், நான் பேசிருக்கேன் அவனுக்கும் சரியாய் புரியல்ல ஆனா ஒருதடவ வரச்சொல்லு பார்க்கலாம்ன்னு சொன்னான்”

தர்ஷினியும் மாரிமுத்துவும் நன்றி சொல்லி விடைபெற்றார்கள். மாரிமுத்து தர்ஷினியிடம் சொன்னார் “அப்பாவை இந்த நிலையில ஊருக்கு அழைச்சிட்டுப் போறது நல்லதில்ல ஊருல்ல வாத்தியாருக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு பேசுறாங்க”

“மாமா நீங்க என்ன சொல்றீங்க! அய்யோ இந்த பாவமெல்லாம் அவங்கள சும்மா விடாது” என்று சொல்லிய தர்ஷினியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

“நீ வருதபடாத... உங்க அம்மாவுக்கு இந்த விஷயம் சொல்ல வேணாம் பாவம் மனசு உடைஞ்சுபோயிடும்... நாலு மாசம் மெடிக்கல் லீவ் போட்டிருக்குல அதனால அங்க ஒருதடவ  கூட்டிட்டுபோய் வர்றதுதான் சரின்னு எனக்கு தோனுது”.

“சரிங்க மாமா அப்பாவை சென்னைக்கு கூட்டிட்டுபோவோம்”

“நானும் உங்க கூட வர்ரேன், நம்ம காரையே எடுத்துட்டு போயிட்டுவருவோம்”

“உங்கலுக்கு எதுக்கு மாமா வீண் சிரமம், உங்க மகனுக்கு சண்டே லீவ் இருக்கு நாளைக்கு அவரு வாராரு, அவரு எங்க கூட அழைச்சுட்டுபோறேம்”

“சரிமா, வா வசந்திகிட்ட பேசிடலாம்”

தர்ஷினி  அம்மாவிடம் சொன்னாள் “டாக்டர் சென்னைக்கு ட்ரீட்மென்ட்க்கு போயிட்டுவர சொன்னார், நாளைக்கு போறோம்”

வசந்தியும் சரி சொல்லிவிட்டாள். தர்ஷினி இலட்சுமிநாராயணனிடம் பேசி முழு விபரத்தையும் சொன்னாள், நாளைக்கு இவர்கள் அங்கே செல்ல இருப்பதையும் சொன்னாள்.

இலட்சுமிநாராயனுக்கு ஆச்சிரியம்மாக இருந்ததது “நீங்க வாங்க, என்னால என்ன பண்ணமுடியுமுன்னு தெரியல்ல, உங்க அப்பாவை நினைச்சா ஒரு பக்கம் பெருமையா இருக்கு இன்னொருபக்கம் வருத்தமாவும் இருக்கு”.

தர்ஷினி தலைமை மருத்துவரைச் சென்று பார்த்திவிட்டு வந்தாள். அன்று நாள் முழுவதும் டிஸ்சார்ச் பண்ண அனைத்து வேலைகளையும் மாரிமுத்து உடன் உதவிசெய்தார், மகன் வந்ததும் மாரிமுத்து வீட்டுக்கு போய்விட்டார்.

அதிகாலை நான்கு மணிக்கு மாரிமுத்துவின் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் வந்தது, அதில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். போகும் வழியில் இரண்டு முறை இலட்சுமிநாராயனிடமும் அழைபேசியில் பேசி வழியைத் தெரிந்து கொண்டார்கள்.

மத்தியானம் சுமார் இரண்டு மணிக்கு இலட்சுமிநாராயணனின் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். சென்னையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒருகிராம். இன்று ஞாயிற்றுக்கிழமை அதனால் இலட்சுமிநாராயன் வீட்டில் தான் இருந்தார். ஸ்கார்பியோ கார் உள்ளே சென்றதும் ஒரு ஐம்பது வயதுமிக்க ஒருவர் ஜிப்பா அணிந்து நின்றிருந்தார், அவர் “வாங்க வாங்க” என வரவேற்றார்.

“நான் தர்ஷினி, இது அம்மா, இது அப்பா அண்ட் திஸ் இஸ் மை ஹஸ்பண்ட் ஜானகிராமன்”

“நான் இலட்சுமிநாராயணன், ரெம்ப சந்தோஷம்.... நீங்க வாங்க, ட்ராவல் எப்படி இருந்துச்சு....”

“ஒன்னும் பிரச்சினை இல்ல சார்.....”

இரகுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. புதிய இடம் ஒரு சிறு காடு எங்கு பார்த்தலும் மரங்கள் அதனுடே சிறிய வீடுகள். அனைவரையும் மத்தியான சாப்பாட்டிற்க்கு இலட்சுமிநாராயனன் அழைத்துசென்றார்.

“நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி ஒரு வீட்டில் விட்டார். அது அளவான கெஸ்ட்  பங்களா, பழைமையும் புதுமையும் ஓன்றுசேர்த்து ஒரு கலைநயத்துடன் கட்டப்ட்டு இருந்தது. மாலை ஆறு மணிக்கு ஒரு பெண் வந்து அம்மா காப்பி சாப்பிட வாங்க என்று அழைத்தாள். தர்ஷினி அம்மா, அப்பா, கணவன் மற்றும் வாகன ஓட்டுனருடன் இலட்சுமிநாராயணனின் வீட்டிற்கு சென்றார். இலட்சுமிநாராயணன் புத்தகம் படித்துக்கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார்திருந்தார். இவர்கள் வருவதைப் பார்த்துவிட்டு எழுந்து “வாங்க வாங்க” என்று அழைத்தார்.

இரகுபதிக்கு ஆச்சிரியமாக இருந்தது இந்த புது இடமும் புது மனிதர்களும்.

காப்பி அருந்திக்கொண்டே உரையாடலைத் தொடர்ந்தார்கள்.

தர்ஷினி கேட்டாள் “சார் நீங்க எப்படி இங்கே தனிய இருக்கீங்க”

“நான் தனியாவா?, இங்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கு, முப்பது ஆசிரியர்கள் இங்கேயே குடும்பத்தோட இருக்காங்க”

“ஸ்கூலா?”

“ம்ம்... இது பத்து ஏக்கர் இடம், இதுல மரங்கள் அதிகமா வளர்கிறோம் அதுனால கட்டிடங்கள் வெளியில தெரியல, அப்படியே நடந்து போனால் தெரியும்... எல்லா வசதிகலையும் இருக்கு.... இது என்னோட கனவு பள்ளிக்கூடம்”.

“அப்ப இன்டர்நேஷனல் ஸ்கூலா?”

இதை கேட்ட இலட்சுமிநாராயணனுக்கு சிரிப்பு வந்தது.

“நோ.. நோ.... பக்கத்துல இருக்கிற கிராமத்து குழந்தைகள் படிக்கின்ற ஒரு சாதாரண ஸ்கூல்”

“ரெம்ப ஆச்சிரியமா இருக்கு” என்று ஜானகிராமன் சொன்னார்.

ஜானகிராமன் கேட்டார் “சார் இந்த ஸ்கூல் ஆரமிச்சு எவ்வளவு வருடங்கள் ஆகுது?”

“இது ஒரு பழைய ஸ்கூல் யாரோ இன்டர்நேஷனல் ஸ்கூல் நடத்திகிட்டு இருந்தாங்க...  சரியாய் போகல அதனால வித்துட்டாங்க...  2௦௦5ல இந்த ஸ்கூல் நாங்க வாங்கினோம்”

தர்சினி கேட்டாள் “உங்களுக்கு ஏன் ஸ்கூல், முன்னாடி நடத்திட்டு இருந்தீங்கல?”

“நோ நோ... நான் பேசிகலி ஒரு என்ஜினியர், ஆனா என்னக்கு ரெம்ப நாளாவே கனவு பள்ளிக்கூடம் கட்டனுமுன்னு ஆசை, அது இப்பதான் முடிஞ்சுது”

ஜானகிராமன் கேட்டார் “இது இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலா?”

“ம்ம் இங்கிலீஷ் மீடியம் தான், ஆனா செவன்த் வரைக்கும் தமிழ் அடுத்து இங்கிலீஷ், நாங்களும் சமச்சீர் சிலபஸ்தான் யூஸ் பண்றோம்”.

இரகுபதி கேட்டார் “வித்தியாசம இருக்கே”

“ரகு சார், இன்னும் நிறைய வித்தியாசம் இருக்கு, இங்க ஸ்கூல் பீஸ் இல்ல, குழைந்தைகளை அடிக்க மாட்டோம், ஏன் திட்ட கூட மாட்டோம்”

ஜானகிராமன் உடனே கேட்டார் “அப்ப ஸ்கூல் நடத்துறதுக்கு பணம்?”

“நான் இந்த ஸ்கூல் வாங்கினேன் அவளவுதான்... என்னோட நண்பர்கள் உதவி பண்ணுறாங்க, குழைந்தைகளோட பாரேண்ட்ஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணறாங்க”

தர்ஷினி “பெருமையா இருக்கு சார், இப்படி ஒரு ஸ்கூல் இருக்கிறத இவ்வளவு நாளா நாங்க கேள்விகூட பட்டதில்ல”

“அய்யோ இது மாதிரி நிறைய ஸ்கூல் நடத்துறாங்க, பொதுவா வெளியல அதிகமா தெரியுறதில்ல அவ்வளவுதான்”

இரகுபதி “வசதியான பசங்க படிக்குற பள்ளிக்கூடம் போல....”

“ரகு சார்... இங்க படிக்கிற குழந்தைகள் எல்லாம் பக்கதில்ல இருக்கிற சுனாமி காலனியில் இருந்துதான் வாரங்க, ஒரு சில வசதியான பசங்களும் இருக்காங்க, ஆனாலும் அவங்க கிட்டையும் ஸ்கூல் பீஸ் வாங்குறதில்ல....”

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த வசந்தி கேட்டாள் “சார் உங்க வீட்ல...”

“என்னோட வீட்டுகாரம்மவா?... அவங்களும் இங்கே தான் இருக்காங்க, என்னோட ஒரு பொண்ணு அப்புறம் மகன் எல்லாம் இங்கே தான் இருக்கோம்”

ஆவலுடன் தர்ஷினி “அவங்கள காணோம்...”

“வீட்டுகாரம்மா கீர்த்தி சென், கல்கத்தா போயிருக்க, அவ குழந்தை தொழிலாளர் மீட்பு பணியில இருக்கின்றாள், இன்னும் ரெண்டு மாசம் ஆகும், பசங்க டூர் போயிருகாங்க ஈவினிங் வந்திருவாங்க”

இரகுபதி சொன்னார் “சார் எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு இந்த இடம்”

“ரகு சார் நீங்க என்னை பேரைச் சொல்லியே கூபிடலாம், பிடிச்சிருந்தா எங்க ஸ்கூல வாத்தியார ஜாயின் பண்ணிடுங்க”

இரகுபதி மனைவியின் முகத்தையும் மகளின் முகத்தையும் திரும்பிப் பார்த்தார். தர்ஷினி சொன்னாள் “அப்பா அதுதான் இன்னும் நாலு மாசம் லீவ் இருக்குல ஓகேன்னு சொல்லுங்க”

“அது வந்து” என்று இரகுபதி இழுத்தார்.

உடனே இலட்மிநாராயணன் “அவர் இங்கேதான் இருக்கபோறாரு, உங்கலுக்கு பிடிச்சா நீங்க கிளாஸ் எடுங்க இல்ல என்னோட வாங்க நான் வாரத்துல மூணு நாள் வேர ஸ்கூகலுக்கு போவேன்... நீங்களும் என்கூட வாங்க போலாம்....”

ஜானகிராமன் கேட்டார் “வேர ஸ்கூலுக்கு டீச் பண்ணவா?”

“நோ... நோ.. நாங்க பாட புத்தகத்திற்கு துணையா கொஞ்சம் வொர்க் புக் தாயர் பண்ணுவோம், அத மத்த ஸ்கூல்களுக்கும் கொடுப்போம், அதுக்காக வெளியில போவேன்”

“இதுமாதிரி இருக்கிற ஸ்கூலுக்கு மட்டுமா?”

“நாங்க எல்லா ஸ்கூலும் போவோம், எங்க நோக்கம் நல்ல தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கணும், அய்யோ லேட் ஆயிட்டுச்சு நீங்க ரூமுக்கும் போங்க, நைட் டிஃபன் கொண்டு வரச்சொல்றேன்”

தர்ஷினி சொன்னாள் “நானும் அவரும் புறப்படலாம்னு இருக்கோம்”

“இப்ப லேட் ஆயிடுச்சு, நீங்க காலையில போகலாம், அப்பா அம்மாவும் இங்க இருக்காட்டும், நீங்க போயிட்டு வாங்க எனக்கு வெயிட் பண்ணா வேணாம் நானும் நாளைக்கு வெளியில போறேன் ரெண்டு நாள் வந்துவிடுவேன். ரகு சார் நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம் நான் எல்லாம் சொல்லிட்டு போறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க”

தர்ஷினியும் ஜானகிராமனும் நன்றி சொல்லிவிட்டு, தர்ஷினி மூன்று நாள் கழித்து வருவதாக சொல்லி விடைபெற்றார்கள். மறுநாள் காலையில் மகளும் மருமகனும் ஊருக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். இரகுபதி காலையில் எழுந்து குழித்துவிட்டு வந்தார், வந்தவுடன் காலை உணவு ஒரு பணிப்பெண் வந்து கொடுத்தாள்.

மணி பத்து இரகுபதி வசந்தியை அழைத்தார் “வா அப்படியே போய் ஒரு ரவுண்ட் சுத்தி எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு வரலாம்”

“வாங்க போலாம் எனக்கும் ஆசையா இருக்கு”

அந்த காடுகளுக்கு நடுவே நடந்தனர். குருவிகளின் சப்தம், அணிலின் கீச்சல், தேனீக்களின் ரீங்காரம் என புது அனுபமாக இருந்தது. சுமார் ஐம்பது மீட்டர் தொலைவிலே ஒரு பெரிய கட்டடிடம், ஒரு சிறிய விளையாட்டு மைதானம் தென்பட்டது. ஒரு இளைஞர் வந்து கூப்பிட்டார் “HM உங்களை வரச்சொன்னாங்க”

“ம்ம் எங்க இருகாரு”

“வாங்க” அந்த இளைஞர் பக்கத்தில் உள்ள ஒரு அறையை காண்பித்தார். உள்ளே ஒரு நடுத்தர வயது ஆள் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவர் ரகுபதியை பார்த்ததும் வேகமாக வெளியே வந்து “ரகு சார் வணக்கம், நான் லாரான்ஸ், நாராயணன் உங்களைப் பத்தி சொல்லிட்டுப் போனார், வாங்க உள்ள” என்று உள்ளே அழைத்தார்.

ஒரு தயக்கத்துடன் இரகுபதியும் வசந்தியும் உள்ளே போனார்கள். என்ன பேசுவது என்று அமைதியாகவே இருந்தார்.

“சார் ஏதாவது குடிக்க”

வசந்தி உடனே “இப்பதான் சார் காப்பி சாப்பிட்டு வர்றோம்”

“எப்படி இருக்கு சார் எங்க ஸ்கூல் பிட்டுசிருக்கா”

இரகுபதி கேட்டார் “குழைந்தகள் யாரேயும் காணோம்”

“ஸ்கூல் பில்டிங் பின்னால் இருக்கு இங்க பெரிய கிளாஸ் மட்டும்தான் அதுதான் சத்தமில்லாம இருக்கு, வாங்க நான் கூட்டிட்டு போறேன்”

“இல்ல உங்கலுக்கு ஏன் சிரமம்.. நாங்களே சுத்திப் பாத்துக்கிறோம்”

“வாங்க சார் நான் கூட்டிட்டு போறேன்”

லாரான்ஸ் இரகுபதியையும் வசந்தியையும் அழைத்துக்கொண்டு சென்றார். சற்று இடைவெளி விட்டு விட்டு வகுப்பறைகள் இருந்தது. ஒரு வகுப்பிற்கு உள்ளே அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

“இவரு நம்ம ஸ்கூலுக்கு புதுச வந்திருக்கிற டீச்சர்”

“வெல்கோம் சார்” அனைத்து குழந்தைகளும் சொன்னார்கள்.

இரகுபதிக்கு ஒரே வகுப்பில் இவ்வளவு குழந்தைகளைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது.
சில ஆண்டுகளாகவே ஒரு வகுப்பிற்கு ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் மட்டும்தான் இரகுபதியின் பள்ளியில் இருந்தனர். அறிமுகப்படுத்திவிட்டு வெளியே வந்தார்கள். இரகுபதி லாரான்ஸிடம் கேட்டார் “ஒரு வகுப்புக்கு எத்தனை குழந்தை இருக்காங்க”

“முப்பது தான்...அவ்வளவு தான் இந்த பக்கத்துக்கு கிராமத்துல இருந்து வருவாங்க, இப்ப புதுச ஒரு சுனாமி காலணி கட்டிருக்காங்க மூணு வர்ஷம் ஆச்சு அதனால அறுபது குழந்தைகள் சேர்த்துக்குவோம், ரெண்டு செக்க்ஷ்ன்”

அவரிடம் விடைபெற்று அறைக்கு வந்தார்கள். மூன்று நாள் போனதே தெரியவில்லை. தினமும் கலையிலும் மாலையிலும் பள்ளிக்கூடத்தையும் அந்த காடுகளுளையும் சுற்றி வருவது மனதிற்கு ஆறுதலகா இருந்தது. மூன்று நாள் கழித்து  இலட்சுமிநாராயணனும் வந்துவிட்டார். அன்று மத்தியானம் தர்ஷினி, மாரிமுத்து மற்றும் மாரிமுத்துவின் மனைவியும் ஊரிலிருந்து வந்தார்கள். இரகுபதியின் முகத்தில் புதிய பொழிவு, உடலில் நல்ல முன்னேற்றம். இரகுபதிக்கு இந்த இடம் பிடித்திருந்தது.

இரகுபதி சகஜமாக அனைவருடனும் பேசினார். தர்ஷினி அம்மாவிடம் சொன்னாள் “அம்மா நான் பெங்களுருக்கு போகணும் பாவம் அவரு தனிய கஷ்டப்படுறாரு...”

“நீ போயிட்டு வா....”

இலட்சுமிநாராயணன் அப்போது அங்கு வந்தார். இரகுபதி மாரிமுத்துவையும் அவரது மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.

“சார் என்னோட சம்பந்தி ஊராட்சித் தலைவர், நாங்க ரெண்டுபேரும் ஒன்னாபடுச்சோம்”

“அப்ப சின்ன வயசுல இருந்தே பழக்கமா”

“நாங்க ரெண்டுபேரும் அப்பஇருந்தே சிநேகிதர்கள்”      

சற்று நேர உரையாடலுக்கு பிறகு தர்ஷினி “சார் நாங்க புறப்படுறோம்”

“இன்னைக்கேவ?... ஓகே போயிட்டு வாங்க”

இரகுபதி சொன்னார் “அம்மாவையும் கூட்டிட்டு போங்க நான் தனியா இருந்துக்குவேன்”

“இல்லப்பா அம்மா வேணும்முன்ன அடுத்தவாரம் வரட்டும்”

மாரிமுத்துவின் கண்கள் கழங்க இலட்சுமிநாராயணனுக்கு நன்றி சொன்னார். அவர்கள் ஊருக்கு கிழம்பிவிட்டார்கள். இரகுபதி தினமும் பள்ளிக்கூடத்திற்கு போவார் அங்கு வேலைபார்க்கும் அனைத்து ஆசிரியர்களுடனும் பேசுவார், சில வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவார். இரகுபதி அனைத்தும் ஆச்சிரியமாகவே இருந்தது. குழந்தைகளின் தைரியத்தைப் பார்த்து வியந்து போனார். ஒரு நாள் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் வந்து “இரகுபதி சார் காபாடி விளையாடலாம் வாங்க” என்று அழைத்தான். இரகுபதி சொன்னார் இல்லப்பா எனக்கு தெரியாது, நீ போய் விளையாடு , உடனே அந்த பொடியன் “சார் நாங்க சொல்லிக் கொடுக்குறோம் வாங்க”. வேறு வழியில்லாமல் இரகுபதி நகைத்துக்கொண்டே விடைபெற்று வந்தார். இந்த பள்ளியில் தான் குழைந்தைகள் கேள்விக்கு பதில் தெரியாது என்பதை தைரியமாக சொல்வதை இரகுபதி பார்க்கின்றார். ஒருவாரம் உருண்டோடியது, தினமும் இலட்சுமிநாராயணனுடன் அவரது வீட்டில் மாலையில் ஒரு அரைமணிநேரம் உரையாடல் நடக்கும். வசந்திக்கு இலட்சுமிநாராயணனின் மகள் காவ்யாவும் மகன் விஷ்ணுவும் தான் பொழுதுபோக்கு. காவ்யா பத்தாவது படிக்கின்றாள், விஷ்ணு ஆறாம் வகுப்பு.

 

இரகுபதி இங்கு வந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது, இன்று இலட்சுமிநாராயணன் இரகுபதியின் வீட்டிற்க்கு வந்தார்.

“சார் வாங்க வாங்க, நானே அங்க வரலாமுன்னு இருந்தேன்”

“பொண்ணு ஃபோன் பண்ணுனாங்கலா? ஊருல உங்க நண்பர் எப்படி இருங்காரு?”

வசந்தி உடனே “எல்லாம் நல்ல இருக்காங்க சார்”

“நாராயணன் உங்களுக்கு எப்படி இந்த மாதிரி பள்ளிக்கூடம் கட்டலாமுன்னு ஐடியா யார் சொன்னது?”

“ரகு சார் இது பதுச ஒன்னும் இல்ல, மரியா மண்டோஸ்சரி, ஜான் ஹோல்ட், கிருஷ்ணகுமார், கமலா முகுந்தன் இப்படி எத்தனையோ பேர் எழுதிருக்காங்க ஒரு நல்ல பள்ளிக்கூடம் எப்படி இருகனும், குழந்தைங்க எப்படி புது விஷயங்களை கத்துக்குவாங்க, நல்லகற்றலுக்கு எந்தமாதிரி சூழல் வேணும், ஒவ்வொருத்தரும் ஒரு புது விஷயத்த தந்திருக்காங்க அததான் நாங்க நடைமுறை படுத்துகின்றோம்”

“இங்க பசங்கள அடிக்கிறதில்லை திட்டறதில்லை, அப்புறம் வகுப்புல குழந்தைங்க எப்படி அமைதியா இருக்காங்க?”

“பசங்க ஏன் வகுப்புல சத்தம் போடுறாங்க, ஒன்னு அவங்களுக்கு எதவும் வேலை இல்லை, இல்லன வாத்தியார் எடுக்குற பாடம் அவங்களுக்கு பிடிக்கின்ற மாதிரி இல்லை, இந்த ரெண்டுதானே காரணமா இருக்கணும்”

“ம்ம்....”

“வகுப்புல பசங்கள சும்மா உட்கார வைக்குறது இல்லை... ஏதாவது சின்ன சின்ன வேலைகள், அவன் பாடம் சம்பந்தம கொடுப்போம். அதாவது ஒரு கதை எழுதிறது, சின்ன கட்டுரை இந்த மாதிரி ஏதாவது இருக்கலாம். அடுத்து பாடம் பசங்களுக்கு பிடிக்குற மாதிரி பாடம் எடுப்போம்”

“இது ஒரு நாலாவது இல்ல அஞ்சாவது படிக்குற பசங்களுக்கு ஓகே, ஒண்ணாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு பசங்கள என்ன பண்ணுவீங்க?”

“சின்ன வகுப்பு பசங்களுக்கு படம் வரைய சொல்லாம், ஒரு குழந்தையை கதை சொல்ல சொல்லிட்டு மத்தபசங்கள கவனிக்கச் சொல்லாம் இப்படி எத்தனையோ பண்ணலாம்”

“இது நடைமுறையில சாத்தியம்மாகுதா?”

“ரகு சார் இது இங்க சாத்தியம் ஆகுது, எங்கேயும் சாத்தியம் ஆகும். பொதுவ இதை நடைமுறைபடுத்தி யாரும் பாக்குறதில்லை அதுதான் காரணம். நடைமுறை படுத்திறத விடுங்க, பெரும்பாலனோர் இதை முயற்சி பண்ணி பாக்குறதே இல்லையே!”

“அப்புறம் பசங்களுக்கு பிடிக்குற மாதிரி பாடம் எடுப்போமுன்னு சொன்னிங்களே, அது எப்படி?”

“நாம பாடம் எடுக்கும்போது பசங்க தேவையே இல்லமா பேசுறாங்க அப்படின்ன நாம எடுக்குற பாடம் அவங்களுக்குப் பிடிகலைன்னு அர்த்தம். இதுக்காக வாரம் வாரம் நாங்க ஆசிரியர்களோடு கலந்து ஆலோசனை செய்யவோம். அதுமாதிரி வகுப்புல பாடம் எடுக்கும்போது பசங்க என்ன பண்ணுறாங்கன்னு கவனிப்போம், ஒரு பையன் தேவையே இல்லமா மத்த பசங்களையும் வகுப்பையும் தொந்தரவு செய்யறான்னு தெரிஞ்சுதுன அந்த பையன் ஏன் அதுமாதிரி பண்ணுகின்றான் அதுக்கு என்ன காரணம் இதை முதல தெரிஞ்சுக்குவோம். ஏன்னா அவனுக்கு வேர ஏதோ பிரச்சனைகளும் இருக்கலாம், அவங்க வீட்ல ஏதாவது இல்ல நண்பர்களுக்குள் பிரச்சனை இல்ல உடல் ரீதியா, சோ இதை சரிபண்ணாம அவனா அடிச்சாலோ திட்டுனாலோ முடியாது”.

“எல்லா ஆசிரியர்களும் நீங்க சொன்னதை கடைப்பிடிகுறாங்கள”

“கண்டிப்பா... அந்தமாதிரி ஆசிரியர்கள் நாங்க எடுக்கிறோம். குழந்தைகளுக்கு அடிக்கமா திட்டமா கத்துக்குவாங்க இதை எல்லாரும் நம்புறாங்க அதனால தான் அவங்க குழந்தைகளும் இங்கேயே படிக்கவைக்குறாங்க”

“ச்சே என்னோட பையனுக்கு நல்ல தரமான கல்வியின்னு சொல்லிக்கிட்டு நான் அவன வேர ஸ்கூல்ல சேர்த்துவிட்டு நான் வேலைபார்த்த பள்ளிக்கூடம் மூட காரணமாயிட்டேன்”

“ரகு சார் நீங்க மட்டுமே காரணம் இல்ல.... நீங்க இருந்த சமூகம் அதாவது உங்கள சுத்தி இருந்த மக்கள் மற்றும் அரசோட கொள்கை இதையெல்லாம் சேர்ந்தது காரணமாகும்”

“என்னோட பையன வேர ஸ்கூல்ல சேர்தத்துக்கும் சமூகமும் அரசும் எப்படி காரணமாகும்”

“நீங்க என்ன பண்ணுனாலும் சமூகத்தின் பாதிப்பு இருக்கும், அதை அவ்வளவு ஈசியா பிரிச்சுப் பார்க்கமுடியாது”

“நீங்க எனக்கு ஆறுதல் சொல்றீங்களா? இல்ல உண்மைய சொல்றீங்களா?”

நாராயணன் சிரித்துகொண்டே “எப்படி உங்களுக்குப் புரியவைக்க முடியுமுன்னு யோசிக்கிறேன், ஓகே நான் கேக்குறதுக்கு பதில் மட்டும் சொல்லுங்க, நீங்க ஏன் உங்க பையன தனியார் ஸ்கூல்ல சேர்த்துவிட்டீங்க”

“இங்கிலீஷ் மீடியம்”

“எதுக்கு இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்”

“தரமான கல்வி, அங்க படுச்ச இங்கிலீஷ் நல்ல பேசலாம்”

“யாரு சொன்னது இங்கிலீஷ் மீடியம் தரமான கல்வி.... தாய்மொழி கல்வி தரமில்லாததுன்னு”

“அதுதானே எல்லாரும் அங்க போறாங்க”

“ரகு சார், அரசாங்கம் வியாபார நோக்கம்முடைய தனியார் பள்ளிகளை கல்வித்துறையில் நுழைய விட்டுட்டாங்க, இனி அவங்க சொன்னதுதான் தரம், அவர்களுடைய வியாபார யுக்திதான் இந்த இங்கிலீஷ் மீடியம், அதுல மக்கள் மயங்கி தன் குழந்தை இங்கிலீஷ் மீடியததுல்ல படிகிறதுதான் தரமான கல்வின்னு நினைச்சு அனுப்புறாங்க. அதுமட்டுமில்லாம ஒரு சிலரால் ஆரம்பிக்கிற இந்த பழக்கம் கொஞ்ச நாளுக்குப் பிறகு சமூகத்தின் பழக்கமாக மாறுகின்றது. ஒரு சமூக பழக்கமாக ஆகிவிட்ட பிறகு மத்தவங்களையும் அதையே நம்புகின்றார்கள்”

“ஒரு சமுகம் பகுத்தறிவுடைய மனிதனைக்கூட கண்மூடிதனமான முடிவை எடுக்கவைச்சிடுமா?”

“சமூகத்தின் சக்தி மிகப்பெரியது... நீங்க பகுத்தறிவா தான் சிந்தனை செய்வீங்க! ஆனா சமூகம் கடைசியா முடிவெடுக்கும் போது அதனுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும். இதை எமில் டுர்க்கிம் (Emile Durkheim), தல்கோட் பார்சன் போன்ற சமூகவில் அறிஞ்சர்கள் ஆராய்ச்சிபண்ணி சொல்லிருக்காங்க. இதுல எமில் டுர்க்கிம் அதிகமான ஆராய்ச்சிபண்ணியிருக்கார், நாம பண்ணுகின்ற ஒவ்வொரு செயலும் சமூகத்தின் ஆதிக்கத்துக்கு உட்படுகின்றது”

“அப்படியா?...” என்று இரகுபதி ஆச்சிரியத்துடன் கேட்டார்.

“ஆமாம், உங்கலுக்கு உதாரணம் ஏதாவது வேணுமா?”

“கண்டிப்பா”

“அப்ப நம்ம வாழ்கையில நடகின்ற ஏதாவது ஒரு விஷயம் சொல்லுங்க, அதுல நம்முடைய முடிவு ஒரு முக்கியமானதாக இருக்கணும்”

சற்று நேர யோசனைக்குப் பிறகு இரகுபதி சொன்னார் “திருமணம்”

“இது ஈசியானா உதாரணமா இருக்கு. பரவாயில்லை... நாமெல்லாம் திருமணம் பண்ணலாமுன்னு முடிவெடுத்ததே சமூகத்தால்தான்”

“எனக்கு புரியல... திருமணம் செய்துகொள்வதற்கு பாலுணர்வு தானே முக்கியமான காரணம் அதுல எப்படி சமூகத்தை காரணமுன்னு சொல்லலாம்?”

இலட்சுமிநாராயணன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டார்.

“சார் உடல்ரீதியான பாலுணர்வுக்கு ஒரு சிறு பங்கு மட்டும்தான் திருமணத்துல இருக்கு, நம்ம வாழக்கைதுணையை நாம ஏன் நம்ம மதத்துல, ஜாதியில, நம்ப தகுதிக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுகின்றோம். இதெல்லாம் சமூகம் தான் முடிவு பண்ணுது. அப்புறம் நம்ம அரசு (State) திருமணத்தை வழிமுறை படுத்துது, இதுவும் ரெம்ப முக்கியமானது. நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க அப்ப புரியும்.”

சற்று நேரம் இரகுபதி வாத்தியார் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார் “ம்ம்... நீங்க சொன்னது சரிதான்”.

“இதுமாதிரிதான் நம்முடைய முடிவுகளை ஆய்வு செய்துபார்க்கணும், அப்பொழுதுதான் உண்மை தெரியவரும்”. 

“அப்ப தனியார்பள்ளிகள் சேவை மனப்பான்மையுடன் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபடுறாங்க என்பது ஒரு பொய்யானதா?”

“அப்படி வேகமா முடிவெடுக்க வேணாம். இன்னைக்கு இந்தியாவில் கல்விதுறையில இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சதுக்கும் நம்முடைய கல்வியறிவு உயரத்துக்கும் தனியாரின் பங்கு மிகமுக்கியமானது, குறிப்பாக சேவை இயக்கங்கள் அதிலையும் குறிப்பா கிறிஸ்துவ சேவை அமைப்புகள் பெரும் பங்கு உண்டு. ஆனா, இப்போ இருக்கிற பெரும்பாலுமான

தனியார் பள்ளிகள் இலாபம் நோக்கம் உடையது. அதனுடைய தோற்றமும் வளர்ச்சியையும் பார்த்தாலே சொல்லிவிடலாம்".



"நீங்க இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லுங்க" என்று இரகுபதி வாத்தியார் மிக ஆர்வத்துடன் கேட்டார்.

"எத்தனையோ ஆய்வு கட்டுரைகள் சொல்லுது குழந்தை தாய் மொழியில தான் நல்ல கற்றுகொள்கின்றது என்று. யுனெஸ்கோ (UNESCO) 1953-ல ஒரு ஆய்வறிக்கையில சொல்லியிருந்தாங்க குழந்தைகள் தாய் மொழியில்தான் வேகமாக கற்கும், இதையேதான் இவங்க சுமார் ஐம்பது வருஷத்துக்கு அடுத்து 2௦௦3-ல வெளியிட்டுள்ள அறிகையிலையும் சொல்லியிருகாங்க. இதே கருத்தைதான் யுனிசெப் (UNICEF) 1999-ஆம் வெளியிட்ட குழந்தைகளின் கல்வியின் நிலையைப் பற்றிய அறிகையிலும் ஒப்புக் கொண்டுள்ளர்கள். உலகத்தில பள்ளிக் கல்வியில முதல் இடத்துல இருக்கிற பின்லாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளில் ஆரம்ப கல்வி அவர்களின் தாய்மொழியில் தான் இருக்கு. எவ்வளவோ ஆய்வுகள் தாய்மொழிக் வழியான கல்வியின் முக்கியத்துவத்தை சொன்னாலும் நாம ஏன் ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுகின்றோம்?"



"ஆங்கில வழி கல்விக்கும் தனியார் பள்ளிகளுக்கும் என்ன சம்பந்தம்"

"வியாபார நோக்கம் உடைய தனியார் பள்ளிகள் தான் இந்த நிலைக்கு ஒரு முக்கியமான காரணம். நாம இப்போ இந்தியாவில் வியாபார நோக்கமுடைய தனியார் பள்ளிகளில் தோற்றமும் வளர்ச்சியையும் பார்போம். இந்தியா வேணாம் ரொம்ப பெரிசு, நம்ம தமிழ்நாட்ட பார்போம், அப்பதான் ஈசியா புரியும். இங்கே கிழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்த்தால் தெரியும், எந்தெந்த வருடதில் எத்தனை தனியார் சுயநிதி (அரசு உதவிபெறாத) பள்ளிகள் தொடங்கப்பட்டது என்று. இது DISE 211-12 ல் இருந்து எடுக்கப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாதிரிதான் வியாபார நோக்கத்தோடு இந்த பள்ளிகளும் தொடங்கப் பட்டுள்ளது. இதுல பெரும்பாலுமான பள்ளிகள் மெட்ரிகுலேசன் முறை பாட புத்தகங்களை பயன்படடுத்தும். இதுதான் நல்ல பாட முறை, ஆங்கில வழி கல்வி அப்படி இப்படின்னு சொல்லி விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைச்சாங்க".


வரைபடம் 1


தமிழ் நாட்டில் அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளிள் ஆரம்பித்த வருடம் மற்றும் எண்ணிக்கை





 



 
"உண்மையாவா" என்று இரகுபதி கேட்டார்.

"உண்மைதான் அதுனாலதான் பெரும்பாலுமான மெட்ரிகுலேசன் பள்ளிகளும் அவங்க சங்கங்களும் சமச்சீர் கல்வியை அமல் படுத்துறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அடுத்து வந்த அரசு இந்த தனியார் பள்ளிகளுக்கு சாதகமா மீண்டும் பழையமுறைக்கே மாற்றமுற்பட்டு நீதிமன்றம் வரை போய், நீதிமன்றம் சமச்சீர் கல்வியை முழுமையா அமல்படுத்த உத்தரவு போட்டுச்சு, இந்த கதையெல்லாம் உங்களுக்கும் நல்லாத் தெரியும்.

"ம்ம்....எனக்கு நல்லாவே தெரியும்"


"இப்ப இந்த தனியார் அரசு உதவிபெறாத பள்ளிகள் மக்களைக் கவர்வதற்காக நாங்க குதிரையேற்றம் சொல்லிக் கொடுகின்றோம், நீச்சல் கற்றுத்தருகின்றோம் ஸ்போக்கன் இங்கிலீஷ் அப்படி இப்படின்னு விளம்பரப்படுத்துறாங்க. அதுமட்டுமில்ல கடந்த ரெண்டு வருஷமாக CBSE பள்ளிகள் தமிழ்நாட்டில் அதிகமா திறக்கப்பட்டுள்ளது, நாங்க CBSE சில்லபஸ் யூஸ் பண்ணுறோம் அதுதான் உயர்வானது, இதுவும் ஒரு வியாபார யுக்திதான்".


"அப்ப தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது" அப்படியா?

"ஆமாம். அப்புறம் இந்த தாய்மொழி வழிக் கல்வி அப்படின்னா என்னனு ரொம்பபேருக்கு குழப்பமாவே இருக்கு"
"எனக்கும் ஒரு சின்ன குழப்பம்தான் இந்த தாய்மொழிக் கல்வி அப்படினா, ஏன்னா எங்க ஊருல தெலுங்கு பேசுறவங்க, கன்னடம் பேசுறவங்க, அப்புறம் சௌராஷ்ட்ரம் பேசுறவங்கனு இருக்காங்க, இப்ப இந்த குழந்தைகள் எல்லாம் ஒரே பள்ளிக்கூடத்துக்கு தான் வாரங்க, எங்களால் எப்படி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவங்கலுடைய மொழியிலேயே சொல்லிக்கொடுக முடியும்?" என்று இரகுபதி கேட்டார்.
“ரகு சார், தாய்மொழி கல்வின்ன அந்த குழந்தையின் வீட்டில என்ன மொழியில் பேசுறாங்க, அப்புறம் அந்த குழந்தையின் தினசரி வாழ்வுல எந்த மொழி அதிகமாக பயன்படுத்தப் படுகின்றது அப்படின்னு பார்த்துதான் முடிவுபண்ண முடியும். ஒரு குழந்தையின் வீட்டுல தெலுங்கு பேசுறாங்க, ஆன அந்த குழந்தையின் சுற்றுப்புறம் அதாவது பக்கத்துவீடு, நண்பர்கள், திரைப்படம், பாடல்கள் அப்படியின்னு தினசரி தமிழ் மொழி பழக்கம் அதிகமா இருதது என்றால் அந்த குழந்தைக்கு தமிழும் நல்ல புரியும், அதனால இந்த மாதிரியான குழந்தைக்கு தமிழ் மொழியிலையே கற்றுக்கொடுக்கலாம்”.
“ம்ம்... இப்பதான் புரியுது”
“குழந்தைங்க அதிகமான வார்த்தைகள் இந்த பழக்க மொழியில தெரிஞ்ச்சு வைச்சுருப்பாங்க அதனால நமக்கும் ஈசியா இருக்கும் அவங்களுக்கும் வேகமாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். அப்புறம் குழந்தைகளுக்கு புதுசா ஒன்னு ரெண்டு இல்ல எத்தனை மொழி வேண்டும்மென்ற்றாலும் கற்றுக்கொடுக்கலாம்”.
“இருந்தாலும் இந்த தனியார் பள்ளிக்கூடங்களில் தானே பசங்க நல்லா படிக்குறாங்க, நல்லா ஆங்கிலத்துல பேசுறாங்க” என்று இரகுபதி கேட்டார்.
“ஆமாம் ஒருசில பெரிய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்கின்ற குழந்தைகள் நல்லா இங்கிலீஷ் பேசுவாங்க, இதுக்கு அவங்க வீட்ல பேசுற இங்கிலீஷ் மற்றும் அவங்களுடைய சுற்றுபுறம் முக்கிமான காரணம அமையுது. அதாவது அப்பா அம்மா படிச்சிருப்பாங்க, அந்த குழந்தைகளோட நட்பு வட்டாரமும் அதேமாதிரி இருக்கிறதால அவங்களால் அப்படி பேச முடியுது. ஆனா பெரும்பாலுமான இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்கின்ற குழந்தைகள் இங்கிலிஷ்ல பேச ரெம்பவே கஷ்டப்படறாங்க. நான் இங்கிலீஷ்  மீடியம் தப்புன்னு சொல்லவில்லை, இங்கிலீஷ் உலக அதிகமா பேசப்படுற மொழிகளில் ஒரு முக்கியமானதாக இருக்கு, இதுலதான் அதிகமா புத்தகங்களும் இருக்கு, உயர்கல்வி படிக்குறதுக்கு இந்த இங்கிலீஷ் ரொம்பவே உதவியிருக்கு”.
“அப்ப ஆங்கிலவழிக் கல்வி சரியா?”
“இன்னும் உங்களுக்குப் புரியலேன்னு நினைக்கின்றேன்!... குழந்தை நல்லா இங்கிலீஷ் பேசவேண்டுமென்றால் இங்கிலீஷ் மீடியம் படிக்க வைக்கணும்மா இல்ல நல்லா இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கும் ஸ்கூல்ல படிக்க வைக்கணும்மா?, சொல்லுங்க சார்”
“நல்லா ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடத்தில தான் படிக்க வைக்கணும்”
“ம்ம்... இப்ப புரியுதா?... நாம இங்கிலிஷ நல்லா சொல்லிக்கொடுகிறது இல்ல, பத்து வர்ஷம் அவன் இங்கிலீஷ் படிச்சாலும் ஒரு அப்ப்ளிகேசன் அவனால ஒழுங்கா எழுத முடியல, இது நம்ம கற்றுத்தருகின்ற முறையின் பிரச்சனை”
 “தனியார் பள்ளிகளில் தானே அதிக மதிப்பெண் வாங்குறாங்க...”
“இந்த விஷயத்துல நான் ஒத்துக்கிறேன். அரசுப் பள்ளிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அதிகமா மார்க் வாங்குறாங்க, அங்கேதான் அதிகமா ரேங்க் வாங்குறாங்க, பெரும்பாலுமான பள்ளிகள் 1௦௦ சதவிகித தேர்ச்சியிருக்கு. இதை பண்ணுறதுக்கு அவங்க என்னெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா?... இந்த தனியார் பள்ளிகள் நிறுவனங்களைப் போன்று செயல்படும், அம்மா அப்பா குறைந்தது டிகிரி படித்திருந்தால்தான் குழந்தைக்கு பள்ளியில் இடம், பெற்றோர்களுக்கு நிரந்தர வருமானம் இருக்க வேண்டும், குழந்தைகளை கண்டிப்பாக டியூஷன் அனுப்ப வேண்டும், இன்னும் எத்தனையோ விதிமுறைகள் சேர்க்கைக்கு முன் விதிக்கப் படுகின்றது. அதுமட்டுமல்லாமல் எத்தனையோ விதிமுறை மீறல்கள், இந்த தனியார் பள்ளிகள் ‘மந்தமாக’ உள்ள குழந்தைகளை பொதுத் தேர்வு எழுத விடுவதில்லை[1], 100 சதவிகித தேர்ச்சிகாக ஆசிரியர்களை இங்கே வாட்டிவதைத்து எடுகின்றனர் இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை வதைகின்றனர்[2],  பல தனியார் பள்ளிகளில் ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் 1 படிக்கும் போதே நடத்திவிடுகின்றனர்[3].”
ஓ.... இதெல்லாம் தனியார் பள்ளிகளில் நடக்குமா?” என்று ஆச்சிரியப்பட்டார் இரகுபதி.
“இதை விடுங்க நம்ம தமிழ்நாட்டில இப்ப அதிகமா ரேங்க் வாங்குற மாவட்டத்துல இருக்கிற பள்ளிகளின் நிலைமையே பத்தி தெரியுமா?... இங்கே கொழிப் பண்ணைகளைப் போன்று பள்ளிப் பண்ணைகள் இருகிறதா சொல்றாங்க, இதைப் பத்தி அவள் விகடன்ல ஒரு கட்டுரை படிச்சிட்டு அழுதுவிட்டேன். எந்தனையோ பெற்றோர்கள் அதிகமான பணத்தைக் கட்டி பிள்ளைகளை இந்த படிக்குறதுக்கு அனுப்புறாங்க ஆனா இந்த ஸ்கூல்ல கொடுக்கிற மன அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள்[4].”
“இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடந்தாலும் தெரிஞ்சேதான் பெற்றோர்கள் இந்த மாதிரி தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுறோம், ஏன்னா நல்ல மதிப்பெண் வாங்கிடுவாங்க என்ற நம்பிக்கையில, அப்படி நல்ல மதிப்பெண் வாங்கிட்ட நம்ம குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வந்திடும் என்கிற எண்ணதிலதான்”.
“சார் நீங்க பள்ளிக் கல்வியை நல்ல மதிப்பெண், நல்ல வேலை, நம்ம குழந்தைகளின் எதிர்காலம் இப்படின்னு குறுகிய கண்ணோடதிலேயே பார்த்திட்டு இருக்கீங்க, இதையெல்லாம் தாண்டி இந்த சமூகத்திற்கு, நம்ம மொழிக்கு, கலாசாரம்திற்கு, மேலும் இந்த நாட்டிற்க்கு எவ்வளவோ நன்மைகள் இருக்கு, இதையெல்லாம் ஒரு நல்ல சமச்சீரான பள்ளிக் கல்வியினால மட்டும்தான் கொடுக்கமுடியும்.”
வசந்தி அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள், “என்னங்க நேரம் பணிரெண்டுக்கு மேல ஆகுதுங்க”
இரகுபதி திரும்பி மனைவியைப் பார்த்து “ம்ம்..” என்று சொல்லிவிட்டு, “அப்படியா!....” என்று இலட்சுமிநாராயணனிடம் கண்களை விழித்தவாறு கேட்டார்.
இலட்சுமிநாராயணன் சொன்னார் “ரகு சார் இன்னொரு நாளைக்கு இதைபத்தி பேசலாம், இப்ப நேரம்மாச்சு நீங்க போய் தூங்குங்க, நானும் நாளைக்கு ஸ்கூலுக்கு வெளியில போனும், குட் நைட்”
“நாராயணன் நானும் உங்ககூட நாளைக்கு வரலாமா”
சற்று நேர யோசனைக்குப் பிறகு, இலட்சுமிநாராயணன் சொன்னார் “வரலாம், ஆனா நான் கார் எடுத்திட்டுப் போகமாட்டேன் பஸ்தான், அப்புறம் ரொம்ப நேரம் அலையணும்”
“அதை விடுங்க....உங்களுக்குப் பிரச்சனை இல்லையில்ல அப்ப நான் நாளைக்கு உங்ககூட வருவேன்”
இலட்சுமிநாராயணன் விடைபெற்று அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டார். இரகுபதி வாத்தியார் மனைவியிடம் சொன்னார், “ச்சே நமக்கு தெரியாம எவ்வளவு விஷயம் இருக்குல”.
மனைவி சொன்னாள் “நீங்க தூங்குங்க... காலையில அவருகூட போகணும்ல”
இரகுபதியும் சரி என்று சொல்லிவிட்டு தூங்கச்சென்றுவிட்டார். அவர் காலையில் வேகமாக எழுந்து இலட்சுமிநாராயணனுடன் வெளியில் போக ரெடியானார். இருவரும் போகுபோது பேசிக்கொண்டே போனார்கள். இலட்சுமிநாராயணன் எந்ததெந்த பள்ளிகளுக்குச் செல்வது என்பதை இரகுபதியிடம் சொன்னார். இருவரும் காலை ஒன்பது மணிக்கு சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய தனியார் பள்ளியின் வாசலில் காவலாளியிடம் உள்ளே போக அனுமதி கேட்டுக் கொண்டிருன்தனர்.
காவலாளி கேட்டார் “சார் நீங்க பிரின்சிபாலுக்கிட முன்னாடியே பெர்மிசன் வாங்கியிருகிங்களா”.
இலட்சுமிநாராயணனன் சொன்னார் “சார் நாங்க போன மாசம் வந்தோம், அவங்க தான் இப்போ வரச்சொன்னங்கா”
“அவங்க எழுதிகொடுத்த சீட்ட காட்டுங்க”
“சீட்டு எதுவும் இல்ல, ஆனா வரச்சொன்னாங்க”
இதை பார்த்துக்கொண்டிருந்த இரகுபதி காவலாளியிடம் “சார் இது பள்ளிக்கூடம் தானே, ஏன் உள்ள விடுறதுக்கு இவ்வளவு பண்ணுறீங்க”
“சார் எதுக்கு ஏன் மேல கோபப்படுறீங்க இது இந்த ஸ்கூலோட ரூல்ஸ், பேரேன்ஸ் வந்தாலே நாலுமணிக்கு மேலதான் பிரின்சிபால பாக்கவிடனும்”
இலட்சுமிநாராயணனன் இரகுபதியை கையைபிடித்து கண்களால் அமைதியாய் இருக்கும்படி சொல்லிவிட்டு காவலாளியிடம் சொன்னார் “சார் நீங்க கோபப்படதீங்க, ரெம்ப தூரம் இருந்து வந்திருக்கோம் அதுதான்”
“எனக்கு ஒன்னும் இல்ல சார்... டெய்லி நாலுபேர் இது மாதிரிதான் என்கிட்டே கோபப்டுவாங்க, சரி நீங்க ரெம்ப தூரத்துல இருந்து வந்திருக்கதால, இந்த போனுல பிரின்சிபாலுகிட்டே பேசுங்க, அவங்க விடசொன்ன அனுபுறேன்” என்று ஒரு இண்டர்காம் போனில் அவர் நம்பரை அழுத்தினார். அந்த அழைப்பை எடுக்க ஆழ் இல்லாமல் துண்டித்துக்கொண்டது.
காவலாளி சொன்னார் “சார் எடுக்கல, நான் ஆப்பிஸ்க்கு போன் போட்டு கேட்குறேன்”
“ஓகே சார்”
காவலாளி போன் போட்டுக் கேட்டுவிட்டு சொன்னார் “சார் ஏதோ மீடிங்க்கு போயிருகாங்க, மூணு மணி ஆகுமாம், நீங்க நாளைக்கு வாங்க இல்லேன்னா இவினிங் வாங்க”
காவலாளிக்கு நன்றி கூறிவிட்டு ஈவினிங் வருவதாக சொல்லி விடைபெற்றனர்.
“ரகு சார் வாங்க பக்கத்து ஹோட்டல்ல போய்  ஏதாவது சாப்பிட்டு வரலாம்”
இருவரும் இட்லி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார்கள். இரகுபதி கேட்டார் “இந்த பள்ளிகூடத்துல ஏன் யாரேயும் உள்ளே விடுறதில்ல, எங்க ஊருல இருக்கிற தனியார்
 
 
 





[1] பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க வாய்ப்பு: அதிகாரிகளுக்கே தெரியாத அரசு உத்தரவு, Wn.com, Retrived from http://article.wn.com/view/WNATc7c48ad083bffe18cfcc3099885eca15/


[2] யார் செய்த தவறு , இந்நேரம்.காம், Retrived from http://www.web-archive.inneram.com/opinion/news-opinions/whos-fault-2990.html on 15th Febraury 2014.


[3] காதைக் கொண்டு வாங்க.... தனியார் பள்ளிகளின் 1௦௦% தேர்ச்சி ரகசியம் தெரியுமா?, One India Tamil, Retrived from http://tamil.oneindia.in/news/2013/06/14/tamilnadu-this-is-the-secret-top-schools-100-percent-success-rate-177118.html on 15th Febraury 2014


[4] பள்ளிப் பண்ணைகள், ஆனந்த விகடன், ௦5 Febraury 2014, Retrived from http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91672 on 15 Febraury, 2014

பள்ளிகள் இப்படி ஒன்னும் இல்ல, அங்க நான் என் பையான பார்க்க எப்பபோனாலும் விடுவாங்க”

இலட்சுமிநாராயணனின் உதட்டில் ஒரு சின்ன சிரிப்பு.

இரகுபதி கேட்டார் “நீங்க ஏன் சிரிக்குறீங்க”

“சார் உங்க ஊருல இருக்கிறது சின்ன ஸ்கூல இருக்கலாம், இல்ல நீங்க கவர்மெண்டு ஸ்கூல் HMன்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்”

“அது சின்ன ஸ்கூல்தான்”

“எல்லா பெரிய பள்ளிகளிலும் இதுமாதிரிதான், இந்த மாதிரி ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணும்போது உங்க மகன் படிக்குற ஸ்கூல் மாதிரிதான் இருப்பாங்க... இந்த ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணி இருபது வர்ஷதுக்கு மேலேயே ஆகுது இப்ப இது பெரிய ஸ்கூல், பெரிய நீச்சல் குளம் கூட இருக்கு...”

“என் வாழ்கையில ஒரு பள்ளிக்கூடத்து வாசலில் இதுமாதிரி நிக்குறது இதுதான் முதல்தடவை”

“எனக்குப் பழகிப்போச்சு”

இருவரும் சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு அரசுத் தொடக்கப்பள்ளிக்குச் சென்றார்கள். மணி ஒரு பத்து இருக்கும், இருவரும் நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு போனார்கள். இலட்சுமிநாராயணனைப் பார்த்தவுடன், அவர் “சார் வாங்க வாங்க.... என்றழைத்தார்”. இருவருக்கும் இருக்கைகள் கொடுத்து அமர்த்தினார். இலட்சுமிநாராயணன் இரகுபதி வாத்தியாரை தன்னுடன் வேலைபார்பவர் என்று அறிமுகம் செய்துவைத்தார். சற்று நேர நலம் விசாரிப்புகள் முடிந்தபிறகு, இலட்சுமிநாராயணன் கேட்டார் “சார் நான் டீச்சர்ஸ பார்க்கணும்”

“ஓகே சார் நீங்கே அவங்களப் பார்த்துட்டு வாங்க”

அது ஒரு சிறிய பள்ளி, இவர்கள் தலைமை ஆசிரியரின் அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு போனார்கள். அந்த வகுப்பில் இருந்த ஆசிரியர் இவர்களை பார்த்துவிட்டு “வாங்க சார்...” என்றார். இவர்கள் உள்ளே போனவுடன் மாணவர்கள் அனைவரும் “வணக்கம் சார்ர்ர்..., வணக்கம் சார்ர்.” இரண்டு முறை கூறினார்கள். இலட்சுமிநாராயணன் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தார், இரகுபதி வகுப்பை நோட்டம் இட்டார், வெறும் ஏழு மாணவர்கள். மாணவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர், உடனே ஆசிரியர் “ஏய் மணி இங்க வா பேசுறவங்க பேரேழுது” என்று ஒரு மாணவனைகூபிட்டு கட்டளையிட்டார். இலட்சுமிநாராயணன் அந்த ஆசிரியரிடம் கேட்டார் “சார் உங்களுக்கு இந்த புக் எத்தனை காபி வேணும்”

ஆசிரியர் சொன்னார் “சார் நான் போனதடவ நீங்க கொடுத்திட்டுபோனத புக்க பார்த்தேன், நல்லா இருக்கு, இது பசங்களுக்கு யூஸ இருக்கும்....இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து இவனுங்க வாங்க மாட்டனுங்க”

“இல்ல நீங்க அவங்க பேரெண்ட்ஸ்கிட்ட சொன்ன”

“சார் இவனுங்கள பத்தி ஒன்னும் உங்களுக்கு தெரியல, பேரெண்ட்ஸ் மீட்டிங் போட்டாலே வரமாட்டங்க....”

“மாசம் பத்து ரூபா தானே சார்”

“ம்ம்.... இருந்தாலும் ஒத்த ரூபா செலவுபண்ண மாட்டனுங்க, ஸ்காலர்ஷிப் வருதுன மட்டும் ரேஷன் கடையில காத்திருக்கிற மாதிரி கலையிலே வந்திருவாங்க...” என்று சொல்லிக்கொண்டே ஒரு மாணவனை அதடினர் “கஸ்மாலம்... நாங்க பேசினு இருக்கோம்... அமைதியா இருக்கிறது இல்ல”. மீண்டும் அவர் தொடர்ந்தார் “நாங்க உயிரகொடுத்து சொல்லிதந்தலும் ஒன்னும் யூஸ்ல்ல, சரி நெக்ஸ்ட் டைம் வரும்போது பார்க்கலாம் சார்”

இலட்சுமிநாராயணன் அடுத்த மாசம் வருவதாக சொல்லி விடைபெற்று, அடுத்த வகுப்பிற்கு சென்றார். இந்த வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்தனர் அவர்கள் மூன்று குழுவாக அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தனர். ஆசிரியர் ஏதோ வேலையில் மூழ்கிருந்தார், மாணவர்கள்  பேசிக்கொண்டு இருந்தனர். இலட்சுமிநாராயணன் “சார்...” என்று அழைத்தார். ஆசிரியர் எழுந்து “வாங்க சார்... வாங்க” என்று அழைத்துவிட்டு அவர் தன்பேச்சைத் தொடர்ந்தார் “சார் உங்க புக் ரொம்ப யூஸ்ப்புல்ல இருக்கு, பசங்க சயின்ஸ் ப்ராஜெக்ட் அதில இருதுதான் எடுத்துக் கொடுத்தோம்”.

“சார் உங்களுக்கு கிளாசுக்கு எத்தனை புக் வேணும்”

ஆசிரியர் உடனே “பீட்டரு... அந்த லிஸ்ட் கொண்டுவா” என்று ஒரு மாணவனை அழைத்தார்.

அவன் கொண்டுவந்தவுடன் வாங்கிப் பார்த்துவிட்டு “சார் மூணு கிளாஸ்க்குயும் ரெண்டுரெண்டு வொர்க் புக்கு கொடுங்க, இது மூணு வகுப்பும் ஒன்னா இருக்குது அதனால சரியாய் பசங்கள கவணிக்க முடியல, அடுத்த மாசம் பாரேன்ஸோட பேசுறேன், அப்புறம் சயின்ஸ் ப்ராஜெக்ட் சம்பந்தமா புதுசா ஏதாவது இருந்த சொல்லுங்க சார்”

இலட்சுமிநாராயணன் அவரிடம் கொடுத்துவிட்டு அவருக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி சொல்லி விடைபெற்றனர். அடுத்தது ஒரு சிறிய வளர்ந்து வரும் ஆங்கில பள்ளி, இங்கு ஒன்பதாவது வகுப்பு வரை உள்ளது. இவர்கள் போனவுடன் காவலாளி இவர்களை பிரின்சிபால் அறைக்கு அழைத்துச் சென்றார். சற்று நேரம் கழித்து பிரின்சிபால் இவர்களை உள்ளே அழைத்தார். பிரின்சிபாலுக்கு இவர்களைப் பார்த்தவுடன் சந்தோஷத்துடன் சொன்னார் “சார் உங்க வொர்க் புக் ரெம்பவே நல்ல இருக்கு அதனால நாங்க எல்லா குழந்தைகளுக்கும் வாங்குறத முடிவுபண்ணிட்டோம்”

“என்னக்கும் ரொம்ப சந்தோஷம்”

“சார் உங்களுக்கு டீயா காபிய இல்ல கூல் ட்ரிங்க்ஸ்”

“இல்ல அதஒன்னும் வேணாம் மேடம், நாங்க இப்பதான் இளநிர் குடிச்சுட்டு வந்தோம்”

“அப்புறம் இந்த விலையை நீங்க கொஞ்சம் குறைச்ச நல்ல இருக்கும், இந்த ஸ்கூல் படிக்குறது எல்லாம் லோவர் மிடில் கிளாஸ்”

“மேடம் இதுல எங்களுக்கு லாபம் ஒன்னும் இல்ல, பத்து ரூபா மெட்டிரியல் வாங்குறதுக்கே செலவாயிடும்... உங்களுக்கே தெரியும் மேடம்”

சற்று நேர வியாபார பேரத்திற்கு பிறகு விலையில் எதுவும் குறைக்காமல் 25 பிரதிகள் ஆர்டர் வாங்கிகொண்டு, புறப்பட்டார்கள். மதிய உணவுக்குப் பிறகு காலையில் சென்ற அதே பள்ளியின் வாசலில் சரியாக மூன்று மணிக்கு போய் நின்றுவிட்டார்கள். காவலாளி இவர்கள் வந்தவுடன் போன்போட்டு கேட்டான், பிரின்சிபால் உள்ளே வரச்சொன்னார். இவர்கள் பிரின்சிபால் அறைக்கு வெளியே ஒரு அரைமணிநேரம் காத்துஇருந்தார்கள், அதன் பிறகு உள்ளே வரும்படி அழைப்பு வந்தது. இவர்கள் உள்ளே போனவுடன் முகத்தில் புன்னைகயுடன் வரவேற்றார் பள்ளியின் முதல்வர் “வாங்க உட்காருங்க...சாரி சார் உங்கள காக்க வைச்சுட்டேன்”

“இட்ஸ் ஓகே மேடம்...”

“நீங்க இந்த வொர்க் புக் விஷயமா தானே”

“யெஸ் மேடம்”

“ஓகே நான் மீட்டிங் போட்டு டீசெர்ஸ்கிட்ட பேசியாச்சு, வொர்க் புக் நல்ல இருக்குன்னு அவங்களும் சொன்னாங்க, அப்புறம் ஒரு புக்கோடா விலை என்ன?”

“டென் ருபீஸ் மேடம்”

“அது MRP தானே? எங்களுக்கு எவ்வளவு”

“மேடம் இதுல எங்களுக்கு எந்த லாபமும் இல்ல, நாங்க உற்பத்தி பண்ணுறவேலைக்கே கொடுக்குறோம் அவளவுதான்”

“சார் அப்ப ஒன்னு பண்ணுங்க, எங்கலுக்கு 2௦௦௦ காபி வேணும், நீங்க MRP 2 ருபீஸ்ன்னு புக்ல பிரிண்ட் பண்ணி மட்டும் கொடுங்க, நீங்க சொன்ன ரேட் இருக்கட்டும்”

சற்று யோசனைக்குப் பிறகு இலட்சுமிநாராயணன் சொன்னார் “மேடம் நான் எங்க ஆபீஸ்ல பேசிட்டு உங்கலுக்கு போன் பண்ணுறேன்”

“ஓகே இந்தாங்க இன்னோட கார்ட்”

இருவரும் இன்றைய வேலையை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள். இரகுபதி கேட்டார் “நாம காலையில அரசுத் தொடப்பள்ளியில ஆரியர் ஏன் அப்படி பேசினார், இப்படித்தான் எல்லா அரசுப் பள்ளிகூடத்திலையும் இருப்பங்களா”

“இல்ல இல்ல... இப்படி ஒருசில ஆசரியர்கள் தான், நீங்க இந்த ஸ்கூல பார்த்து முடிவுபண்ணாதீங்க”

“அப்புறம்... நம்ம கடைசியா பார்த்த பள்ளிகூடத்தில ஏன் அவ்வளவு பெரிய ஆர்டர் எடுக்கமா போன் போடுறேன்னு சொல்லிட்டு வந்தீங்க”

“சார் நான் இதை பிசினஸ் பண்ணல... அவங்க பிசினஸ பாக்குறாங்க அதனால அங்கேயே பிடிகல சொன்ன நல்லாயிருக்காது அதுதான் அப்படி சொல்லிட்டு வந்தேன். அந்த ஸ்கூல் பெரியது அங்க படிக்கிற பசங்களும் பெரிய இடத்து பசங்க, அதனால் அவங்க வாங்கவில்லையினாலும் கவலைபடுறது இல்லை”.

இருவரும் வீட்டிற்க்கு வந்தார்கள். இரகுபதி கேட்டார் “நம்முடைய உரையாடல் நேத்து பாதியிலே முடிஞ்சிடுச்சு”

“ரகு சார் எனக்கு கொஞ்சம் டயேர்ட இருக்கு, நாம இன்னொரு நாளைக்கு பேசலாம் அப்பதான் உங்களுக்கும் பல்வேறு விஷயங்கள் தெரியவரும். நாம இதுமாதிரி ஸ்கூலுக்கு டெய்லி போன நீங்களே புரிஞ்சுக்குவீங்க. நாளைக்கும் நீங்க ஸ்கூல் விசிட்டுக்கு வாரீங்கள?”

“கண்டிப்பா நீங்க விட்டிட்டு போய்டாதீங்க” என்று நகைத்துகொண்டே சொல்லிவிட்டு இரகுபதி விடைபெற்றார்.

வீட்டிற்கு சென்றவுடன் வசந்தி கேட்டாள் “என்னங்க இன்னைக்கு அலைச்சல் அதிகமா இருந்துச்சா?”

“ம்ம்... ஆனா மனசு நிம்மதியா இருந்திச்சு, இத்தனை நாளும் வெளியில என்ன நடக்குதுன்னு தெரியமேயே வாழ்ந்துடேன்... நான் வாத்தியார இருந்தும் கல்விதுறையில என்ன நடக்குதுன்னு அறியாமலே இருந்துட்டேன்”

இருவரும் உரையாடிவிட்டு தூங்கச் சென்றனர். மூன்று நாட்கள் தொடர்ந்து இதுபோன்று சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று வந்தனர். தினமும் பள்ளி சமபந்தமான பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி இலட்சுமிநாராயணனும் இரகுபதியும் பேசுவார்கள். ஒருவாரத்திற்கு பிறகு வாத்தியாரின் மனைவியும் ஊருக்குச் சென்றுவிட்டார். இரகுபதி இலட்சுமிநாராயணனின் பள்ளிக்கு போவார் அல்லது அவருடன் வெளியில் போவர்கள். ஒவ்வொருநாளும் ஏதாவது பிரச்னையை இருவரும் ஆராய்ந்து உரையாடுவார்கள்.

இன்றும் இலட்சுமிநாராயணனும் இரகுபதியும் பள்ளிகளுக்கு செல்ல காலையிலையே பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள். இரகுபதி கேட்டார் “இன்னைக்கு எந்த பள்ளிக்கூடத்துக்குப் போறோம்”.

“பிளான் ஒன்னும் இல்ல ஒரு ஆறு இல்ல ஏழு ஸ்கூல் கவர் பண்ணணும்”

இருவரும் முதலில் ஒரு அரசு தொடக்கப்பள்ளிக்கு போனார்கள். பள்ளியின் கட்டடங்கள் வர்ணம் பூசப்பட்டு சுத்தமாக இருந்தது, உள்ளே மரங்கள் அங்கங்கே ஓவியங்கள் என ஒரு புதுவிதமாக இருந்தது. இரகுபதி கேட்டார் “இது அரசுப் பள்ளியா இல்ல தனியார் பள்ளியா?”

“என்ன சார் போர்ட் பார்த்தீங்களா, நம்ம கவர்மெண்ட் ஸ்கூல்தான்”

“நம்மவே முடியல சார் இவ்வளவு அழக, சுத்தமா வைச்சிருக்காங்க...”

“உள்ள வாங்க இன்னும் ஆச்சிரியமா இருக்கும்”. இருவரும் தலைமையாசிரியாரின் அறைக்குப் போனார்கள். இவர்களைப் பார்த்தவுடன் தலைமையாசிரியர் “சார் வாங்க...என்ன எங்கள மறந்துடீங்கல...”

“அதலாம் இல்ல....கொஞ்சம் வேலை அதிகம் அவ்வளவுதான்... அப்புறம் இது இரகுபதி சார்” என்று இரகுபதியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இரகுபதிக்கு இந்த பள்ளியைப் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவலானது. இரகுபதி தலைமையாசிரியரிடம் சொன்னார் “உங்க பள்ளிக்கூடத்தை பார்க்க சந்தோஷமா இருக்கு”

“சார் இந்த ஸ்கூல தனியார் பள்ளிகளுக்கு நிகர நாங்க வைச்சிருகோம்... இங்க கம்ப்யூட்டர் பர்ஸ்ட் ஸ்டாண்டர்டல இருந்தே சொல்லிக்கொடுப்போம், இப்போ இங்கிலீஷ் மீடியம மாத்தியாச்சு, டாய்லட் சுத்தமா இருக்கும், இந்த ஸ்கூல் பெஸ்ட் ஸ்கூல் அவார்ட் வாங்கிச்சு, பேப்பர்ல பார்திருபீன்ங்களே?”

இலட்சுமிநாராயணன் சொன்னார் “எல்லாம் இவரு இந்த ஸ்கூலுக்கு வந்தபிறகுதான் இப்படி மாறிச்சு...”

“சார் நான் என்ன பெரிசா பண்ணிட்டேன் வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்றோம், இல்லன மேல இருக்கிற சாமி நம்மல சும்மா விடாது”

“அப்புறம் வொர்க் புக் நல்ல இருக்க சார்?”

“ரொம்ப நல்ல இருக்கு... டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப யூஸ இருக்குன்னு சொன்னாங்க...”

“ஓகே சார் அப்ப நாங்க கிளம்புறோம்... இன்னும் நிறைய ஸ்கூலுக்கு போகணும்... இந்த ஸ்கூல இன்னும் நல்ல கொண்டுவாங்க”

“ம்ம்... கண்டிப்பா... ஆனா இப்ப தேவையான டீச்சர்ஸ் இல்ல அதுதான் பிரச்சனையா இருக்கு, இங்க மூணு டீச்சர்ஸ்தான் இருக்கோம், அஞ்சு கிளாஸ் அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு”

இரகுபதி கேட்டார் “ஏன் சார்”

“ஸ்ட்ரேன்த் கம்மியின்னு டிபார்ட்மெண்டல கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“இவ்வளவு நல்ல பள்ளிக்கூடத்தை வச்சுக்கிட்டு... பசங்க அதிகமா வரதில்லையா?”

“சாருக்கு ஒன்னும் தெரியல... நாங்க என்ன பண்ணுனாலும் இந்த பிரைவேட் ஸ்கூல் முன்னாடி தோற்றுபோறோம்... அவங்க எப்படி எப்படியோ ஐடியா பண்ணி பசங்கள சேர்த்துகிறாங்க”

“சார் இங்கதான் எல்லாமே இருக்கே” என்று இரகுபதி சொன்னார்

“சார் பிரைவேட் ஸ்கூல புதுசு புதுசா விளம்பரப் படுத்துறாங்க... ஒரு குழைந்தைய சேர்த்த இன்னொரு குழந்தைக்கு ப்பிரீ அட்மிசன்... டோனஷன் இல்லன்னு சொல்லி சேர்துகுறாங்க பஸ் பீஸ்ல சேர்த்து புடிங்கிருவாங்க.... இதுனால இந்த ஸ்கூல இங்கிலீஷ் மீடியமா மாத்தின பிறக்கும் பெரிய ஒன்னும் அட்மிசன் அதிகமா வரல....”

இருவரும் அந்த பள்ளியை ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்த பள்ளிக்குச் சென்றார்கள். இதுவும் அரசுத் தொடக்கப்பள்ளி. இவர்கள் போனபோது அங்கு தலைமையாசிரியர் இல்லை, அவர் கல்வி அதிகாரியைப் பார்க்க போயிருப்பதாக சொன்னார்கள். சரி ஆசியர்களையவது பார்த்துவிட்டுப் போலாம் என்று ஒரு வகுப்புக்குப் போனார்கள். வகுப்பு ஆசிரியர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார், குழந்தைகள் அமைதியாக எழுதிக்கொண்டிருந்தனர். கைபேசியில் பேசிகொண்டிருந்த ஆசிரியர் இவர்களைப் பார்த்தவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு “நீங்க....” என்றார்.

“சார்.. நாங்க HM பார்க்கலாம்ன்னு வந்தோம்”

“HM டிபார்ட்மெண்க்குப் போயிருக்காரு... ஏதாவது அவருகிட்ட சொல்லனும்மா?”

“இல்ல... நாங்க ஒரு வொர்க் புக் விஷயமா பார்க்கலாமுன்னு வந்தோம்”

“ஓ... நீங்களா வாங்க வாங்க....” என்று இவர்களை உள்ளே அழைத்தார்.

“HM உங்ககிட்ட இந்த வொர்க் புக் பத்தி சொன்னாரா....”

“நானும் பார்த்தேன்... நல்ல இருக்கு சார்......, ஆனா இந்த பசங்க வாங்க மாட்டனுங்க....”

“பசங்களுக்கு இந்த புக் ரொம்ப யூஸ இருக்கும்...”

சார் நாங்க எங்க தொண்டகிழிய கத்தி சொல்லிக் கொடுக்கிறதயை  இவனுங்க படிக்க மாட்டனுங்க... வீட்டுக்கு போனா புக்க தொறக்க மாட்டனுங்க எல்லாம் வேஸ்ட் நீங்க பிரைவேட் ஸ்கூலா பாருங்க”

“HM வாங்குறத சொன்னாரு”

“சார் இந்த ஸ்கூலவே ஸ்ட்ரேன்த் கம்மியின்னு மூடப்போறாங்க... நீங்கே வேற”

இரகுபதிக்கு அவருடைய பள்ளியின் யாபகம் வந்தது. இலட்சுமிநாராயணன் கேட்டார் “சார் எதுக்கு மூடப்போறங்க..”

“இங்க பசங்க சரியாய் வரதில்ல..எல்லாம் இங்கிலீஷ் மீடியம் வேணுன்னு பிரைவேட் ஸ்கூலுக்கு போகுதுங்க அதுனால இந்த பசங்கள பக்கத்துக்கு ஸ்கூலுக்கு சேர்த்து ரெண்டு ஸ்கூலையும் ஒன்னா ஆக்காப் போறாங்க...”

“அய்யோ.. அப்ப இந்த பசங்க படிப்புக்கு தொந்தரவாகதா இப்படி மாத்தின..”                       

“சார் நீங்க வேர.. இதுங்க அங்க போன நல்ல படிசிருங்கள என்ன... எல்லாம் சும்மா சார்... இவனுங்க வீட்டுல யாரும் படிக்கல, இங்க எல்லா ப்ரீயா கொடுறாங்கன்னு வருதுங்க... எல்லாம் டைம் பாஸ் கேசுங்க.. பாருங்க நாம பேசிட்டு இருக்கோம் இதுங்க கத்திகின்னு இருக்குதுங்க.. இதுங்க நாலு பேரும் அஞ்சாவது ஆனா இன்னும் தமிழ படிக்கக்கூட தெரியாது...”

இலட்சுமிநாராயணனுக்கு அந்த குழந்தைகளைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தது, உடனே இரகுபதியை அழைத்து வாங்க நாம போலாம் என்று வெளியேறினார். இருவருரின் மனதும் சற்று கணமானது. பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தார்கள், இரகுபதிக்கு பல கேள்விகள் மனதில் வந்தது. இரகுபதி இலட்சுமிநாராயணனிடம் கேட்டார் “ஏன் சார் இப்படி இருகாங்க.. ச்சே எனக்கு மனசு ரெம்பவே கஷ்டமாயிடுச்சு”.

“இப்படிதான் யதார்த்தம் இருக்கு நம்ம காலையில பார்த்த ஸ்கூல பார்த்த பெருமையா இருக்கும், இப்ப பார்த்த ஸ்கூல பார்த்த கஷ்டம இருக்கும், இப்ப ஸ்கூலுகளை இணைகுறது அதிகமா நடக்குது”

“இந்த மாவட்டத்துல எத்தனை பள்ளிக்கூடங்களை இதுமாதிரி இணைக்குறாங்க”

“நான் சமிபத்துல பேப்பேர்ல படிச்சேன் 54 ஸ்கூல்களை இணைச்சு இருகாங்க[1], இப்ப புதுசா தனியார் வந்து நிர்வாகம் கொடுக்கப் போறதாக சொல்லுறாங்க”[2]

“இந்த பள்ளிக்கூடத்தை இணைகிறது பதிலா எல்லா பள்ளிக்கூடங்கைளையும் தனியார் பள்ளிக்கு நிகர ஆங்கில வழிக்கல்வியா மாத்திட்ட”

“சென்னையில கவர்மெண்ட் ஸ்கூல இங்கிலீஷ் மீடியம மாத்திகிட்டு இருகாங்க இன்னும் அதிகபடுத்த போறாங்களாம்[3].

இந்த மாதிரி மாத்தின எல்லாம் சரியாயிடுமா?”

“நாம காலையில பார்த்த ஸ்கூல என்ன சொன்னாரு, என்னதான் பண்ணுனாலும் பெரிய மாற்றம் வராது. ஆனா அரசு சொல்லுது இங்கிலீஷ் மீடியம மாத்துனதுக்கு பிறகு ஸ்கூல் ஸ்ட்ரேன்த் அதிகமாயிடுச்சுன்னு”[4]

“நீங்க என்ன நினைக்குறீங்க?”

“எனக்கு சந்தேகம்தான்... இதுக்கு முன்னாடி இதுமாதிரி இங்கிலீஷ் மீடியம மாத்தின மாநிலங்களில் என்ன நிலமையின்னு பார்த்து அதுக்கு அடுத்து இதுமாதிரி முடிவெடுத்த நல்லா இருக்கும். எனக்குத் தெரிஞ்சு புதுச்சேரியில இதுமாதிரி தமிழ் மீடியம் கவர்மெண்ட் ஸ்கூல்களை இங்கிலீஷ் மீடியம மாத்திருங்க, அதனால பெரிசா ஒன்னும் அட்மிசன் அதிகம் ஆகவில்லை[5]

“அப்ப இதுக்கு வேர வழியே இல்லையா”

“அரசு கொள்கையில ஒரு பெரிய மாற்றம் வரணும் அப்பதான் சரிபடுத்த முடியும்”

“அதுதான் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் வந்தாச்சுல்ல”

“ஆமாம் RTE வந்திடுச்சு நானும் கூட இதுக்கு போராடினேன், நாங்க போராடினத நெனைச்சுப்  இப்ப வருத்தப் படுறோம். 25 சதிவிகித இடம் தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைக்கு போய் சேரணும்னு நினைச்சோம், ஆனா நிறைய தனியார் பள்ளிகள் அதைப்பற்றி கவலையே படுறதில்ல. 2௦௦9-ம் ஆண்டு வந்த இந்த சட்டம் இன்னும் நிறையபேருக்கு குழப்பமாவே இருக்கு. இதுக்கு எதிரா தனியார் பள்ளிகள் நீதிமன்றம் போய் இப்பதான் முடிச்சிருக்கு. இப்பவும் தனியார் பள்ளிகள் எதிர்ப்ப தெரிவிச்சிட்டு தான் இருக்காங்க”.[6]

“அதுதான் நீதிமன்றல தீர்ப்பு வந்தாச்சு, அரசு முறைய அமல்படுத்தலாம். அப்ப எல்லாம் சரியாயிடும் இல்லையா?”

“அரசு முறைய அமல்படுத்தின சரியாயிடும், ஆனா படுதிறது இல்ல அதுதான் பிரச்சனை”

“ஏன் இதுமாதிரி”

“கல்வித்துறையின் முக்கிய பங்காளிகளின் குழந்தைகளுக்குப் பிரச்சனை இல்ல, அடுத்து இதனால அரசில் ரீதியா பெரிய நன்மை இல்ல அதுதான் முகியமான காரணம். கல்வித்துறையில் முக்கிய மூன்று நபர்கள் இருகாங்க, முதல கொள்கைகளை வகுத்து கொடுக்கிற பெரிய அதிகாரிகள், அடுத்து கொள்கைகளை முடிவெடுக்கிற அரசியல் தலைவர்கள் மற்றும் கடைசியா அரசுப் பள்ளிகள் சம்பந்தமான துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். இந்த மூன்று நபர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை. தமிழ் நாட்டுல அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 73 சதவிகித ஆசிரியர்கள் அவர்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகின்றார்கள்.[7] அதனால RTE நடைமுறைப்படுத்துன என்ன இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன? மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு கீழ் உள்ள CBSE சென்னை மண்டல அலுவலகத்தில் ஒரு தனி அதிகாரிகள் கூட 2௦௦3 வரை RTE பார்த்துகொள்ள நியமிக்கப் படவில்லை இதுனால ஒரு ஏழைக்குழைந்தகூட இந்த CBSE தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் பயன் பெறவில்லை”.[8]

கட்டாயக் கல்விச் சட்டம் வந்தபிறகு கல்வி வந்து அடிப்படை உரிமையாடுச்சு, அப்ப மக்கள் தானே போய் அநியாயத்துக்கு எதிரா கூறல் கொடுக்கணும். குழந்தைகளுக்கு இடஒதிகிட்டில் இடம் இல்லையின்னு எந்த பள்ளிக்கூடதில சொன்னாலும் உடனே புகார்பண்ணணும்”

“ரகு சார்... ஜனநாயக நாட்டுல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் ஆட்சியர்களுக்குதான் அதிகமா பலம் இருக்கும். ஒரு நாட்டின் இல்ல மாநிலத்தின் மொத்த பலனும் ஆட்சி பண்ணுறவங்ககிட்ட இருக்கும், அவங்க நினைச்சா மட்டும் தான் இது பொதுவான சட்டமா மாறும்.”

“நாட்டு மக்கள் அநியாயத்த கேட்காம... அரசே எல்லா இடத்துக்கும் வரமுடியுமா”

“கண்டிப்பா... இப்ப நீங்க தனிமனிதன ஒரு பள்ளியின் முன் பிரச்சனை பண்ணமுடியாது, அப்படி அதிகமா யாரும் பண்ணவும் மாட்டாங்க.. அவங்க அந்த பள்ளித்கூடத்தில அவங்களோட குழந்தையே படிக்கவைக்கணும். ஒரு தனிமனிதனின் சக்தி ஒரு பள்ளிக்கூடத்தின் முன்னால் தொற்றுபோகும். இதத்தான் நாம பொலிடிகல் பவர்ன்னு சொல்லுவோம். அதே சமயம் ஒரு குழுவ போய் போராடலாம் இது வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆனாலும் இதுமாதி ஒவ்வொரு பள்ளிகள் முன்னாடியும் குழுவா போராடுறது ரொம்ப கஷ்டமான காரியம். இதை அரசு ஈசியா பண்ணிடலாம் தெளிவான சட்டம், அதை ஒழுங்க அமல்படுத்துறது, சட்டத்தை மீறினால் உடனடி நடவடிக்கை இந்த மூன்றும் இருந்தால் மக்களுக்கு பயனும்போய் சேரும்”

“அதுதான் சட்டம்  இருக்குல்லே... இப்ப RTE சட்டமும் வந்திருக்கு, அத அமல்படுத்த அதிகாரிங்க இருகாங்க, ஆனா ஏன் விதியை மீறுறபள்ளிகள் மீது நடவடிக்கை எடுகுறதில்ல”

“அதைத்தான் நான் முதலில் சொன்னேன்... கல்வித்துறையின் மிக முக்கிய மூன்று பங்காளிகளின் குழந்தைகளுக்கு பிரச்சனையில்லை.... ஆதலால் நடைமுறைப்படுத்த ஆர்வமில்லை”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆடோ இவர்கள் முன்வந்து நின்றது ஆடோ ஓட்டுனர் “சார் எங்க போகணும்... இந்த ரூட்ல பஸ் இப்ப வராது... அங்க ஸ்ட்ரைக் நடக்குது பஸ திருப்பி விட்டுருகாங்க”

இலட்சுமிநாராயணன் கேட்டார் “தம்பி மீட்டர் போடுவீங்கல?”

“சார் நீங்க சென்னைக்குப் புதுசா?... இப்ப எல்லா ஆடோவும் மீட்டர் போட்டுத்தான் ஓட்டுறாங்க... வாங்க சார் எங்க போகணும்?”




[1] Corporation Plans to merge Schools with low Students Strenth, The Times of India, June 27, 2013, Retrived from http://articles.timesofindia.indiatimes.com/2013-06-27/chennai/40232113_1_chennai-corporation-low-student-strength-ripon-buildings on 17th Febraury 2014
[2] Private Players to be part of Chennai Schools Management, The Hindu, January 25, 2014, Retrived from http://www.thehindu.com/news/cities/chennai/private-players-to-be-part-of-chennai-schools-management/article5615148.ece on 17th Febraury 2014
[3] Shyam Balasubramanian, Corporation all set to increase English medium sections, October 05, 2012 retrived from http://ibnlive.in.com/news/corporation-all-set-to-increase-english-medium-sections/297310-60-120.html on 17th Febraury 2014
[4] Pratiksha Ramkumar, Enrolment up in English medium corporation Schools, The Times of India, Sep 29, 2012, Retrived from http://articles.timesofindia.indiatimes.com/2012-09-29/chennai/34163606_1_english-medium-corporation-schools-primary-schools on 17th Feb, 2014
[5] School Reportcard, DISE, 2005-06 to 2011-12
[6] Private Schools oppose education department’s orders, The Times of India, Feb 01, 2014, Retrived from http://timesofindia.indiatimes.com/city/jaipur/Private-schools-oppose-education-departments-orders/articleshow/29676574.cms on 17th Febraury, 2014
[7] Education in India, October 30, 2011, Retrived from http://prayatna.typepad.com/education/2011/10/where-do-govt-school-teachers-educate-their-own-children.html on 17 Febraury, 2014
[8] 81 TN CBSE school door shut to poor students, The New Indian Express, 23rd August, 2013, Retrived from http://www.newindianexpress.com/states/tamil_nadu/81-TN-CBSE-school-doors-shut-to-poor-students/2013/08/23/article1747347.ece#.UwCwPdHNvIU on 17th Feb, 2014


போகவேண்டிய இடத்தைச் சொல்லி இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்கள். இரகுபதி ஆட்டோ ஒட்டினரிடம் கேட்டார் “தம்பி அங்க எதுக்கு போராட்டம் பண்ணுறாங்க”

“ஏதோ தொடக்கப்பள்ளி ஆசியர்கள் பத்துஅம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் பண்ணுறாங்க, இவங்க ஒழுங்கா ஸ்கூல கிளாஸ் எடுக்கிறது இல்ல சும்ம எப்பவுமே ஏதாவது போராட்டம்தான், இவங்களுக்கு என்ன சார் மாசம் ஆனா சம்பளம் வீடுதேடி வரும்...”

இலட்சுமிநாராயணனும் இரகுபதியும் அமைதியாகவே இருந்தனர். ஆடோ ஓட்டுனர் மீண்டும் தனதுப் பேச்சைத் தொடர்ந்தார். “சார் நீங்க எங்காவது அவசரமா போணுமா?”

இலட்சுமிநாராயணன் சொன்னார் “மெதுவா போங்க... ஒன்னும் அவசரமில்லை”

ஆடோ ஒரு ஜெராக்ஸ் கடையின் முன்பு நின்றது. “சார் டூ மினிட்ஸ் நான் வாரேன்..” என்று ஆடோ ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு போனார்.

இலட்சுமிநாராயணன்  இரகுபதியிடம் சொன்னார் “இந்த ஆடோ டிரைவர்கள் இப்போ மீட்டர் ஒழுங்க போடுறாங்களே இதுக்கு காரணம் என்ன தெரியுமா?”

“இல்ல”

“இப்ப அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கு.... அதை மீறினால் அபதாரம் உடனே நடவடிக்கை, அதுக்கு பயந்துதான் இப்போ எல்லாரும் மீட்டர் போட்டு ஆடோ ஓட்டுறாங்க... இதுதான் ஜனநாயக அரசின் சக்தி... எவ்வளவோ மக்கள் இந்த ஆடோகாரங்ககிட்ட தனிய போராடித் தோற்துபோய்டாங்க... ஆனா அரசு இப்போ முறைய நடைமுறைப் படுத்துறதால இவங்க எல்லோரும் ஒழுங்க இருகாங்க.... இதுமாதிரித்தான் பள்ளிகளுக்கும் வரணும்.....”

ஐந்து நிமிடகள் கழித்து ஆடோ டிரைவர் கையில் ஒரு வீட்டின் மாதிரியுடன் வந்து அதை தனது இருக்கைக்கு அருகில் பாதுக்காப்பாக வைத்துவிட்டு வண்டியை எடுத்தார்.

இரகுபதி உடனே “இது என்னப்பா?” என்று ஆடோ டிரைவரிடம் கேட்டார்.

“சார் எங்க புள்ள இங்கிலீஷ் மீடியதில்ல படிக்குது.... அது ப்ராஜெக்ட் பண்ணிட்டு வரச்சொன்னாங்கல... நமக்கு ஒன்னும் தெரியாதுங்க அதுதான் இந்த கடையில சொல்லி பண்ணிக்கிட்டு போறேன்”

“அது குழந்தைகள் தானே பண்ணணும்”

“அவன் நாலாவதுதான் படிக்கிறான் அவனுக்கு என்ன சார் தெரியும் மழைநீர்சேமிப்பு வீடு... எல்லாரும் இதுமாதிரித்தான் பண்ணுவாங்க... அதுதான் ரெடியா இங்க செஞ்சு விக்கிறாங்க.... டூ ஹன்ட்றேடுதான்”

“எந்த ஸ்கூல்” என்று இலட்சுமிநாராயணன் கேட்டார்

“சார் எங்க ஏரியாவுல இருக்கிறாரா பிரைவேட் ஸ்ஸ்கூலு”

“ஏன் கவர்ன்மென்ட் ஸ்கூல இங்கிலீஷ் மீடியம் இருக்குல்ல அங்க அனுப்பலைய?”

“யாரு சார் இப்போ அங்க அனுப்புறாங்க... அங்க யாரும் சொல்லிகொடுக்க மாட்டாங்க... ஒரு கக்கூஸ் கூட நல்ல இருக்காது.. நம்ம கஷ்டப்பட்ட மாதிரி நம்ம குழந்தைகளும் கஷ்டப்படணுமா.... அவனுங்கல நல்ல படிக்கவைக்கணும் சார், நல்ல பிரிலியன்ட் அவன், மம்மி டாடின்னு தான் கூப்பிடுவான்”

“பீஸ் எவ்வளவு”

“சார் அட்மிஷன் அப்போ ஒரு பத்து வரும், அப்பறம் மாசம் சிக்ஸ் ஹன்ட்றேடு பிளஸ் ஆடோவுக்கு மாசம் அவ்வளவுதான்”

இரகுபதி கேட்டார் “அப்ப இங்க ஒரு  இருபதினாயிரம் வரை செலவு செய்றீங்களா?”

“ம்ம் வரும் சார்... நமக்கு அவனுங்ல நல்ல படிக்க வைக்கணும் அவ்வளவுதான்”

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. மீட்டரைப் பார்த்து பணத்தைக் கொடுத்துவிட்டு அருகில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் சென்றார்கள். அந்த பள்ளி அமைதியாக இருந்தது. இவர்களை தலைமையாசிரியரின் அறைக்கு சென்றார்கள். ஒருவர் வந்தார் “சார் நீங்க யாரைப் பார்க்கணும்”

“HM இருக்கறா”

“அவரு கிளாஸ்ல இருகாரு.. நீங்க இங்க உட்காருகாங்க, நான் கூப்பிட்டு வரேன்...”

“அது ஒன்னும் வேணாம் நாங்க இங்கேயே இருகோம்... அவரு கிளாஸ் முடிச்சிட்டு வரட்டும்”

இருவரும் அறிவிப்பு பலகையில் உள்ள அறிவிப்புகளைப் பார்த்துகொண்டிருந்தார்கள், அதில் சில பொறியியல் கல்லூரிகள் நன்கொடை இல்லாமல் அரசுப்பள்ளி மாணவர்களை சேர்த்துகொள்கின்றோம் என்று விளம்பரம் இருந்தது... ஒரு இந்திய தொழில் நிறுவனத்தின் விளம்பரமும் இருந்தது.

சற்று நேரத்தில் தலைமையாசிரியர் வந்துவிட்டார் “நாராயணன் சார் வாங்க... என்ன ஒரு போன்கூட போடாம வந்துடீங்க”

“நாங்க வேர வேலைய வந்தோம்... அப்படியே மீட்டிங் விஷயமா உங்களையும் பார்த்திட்டு போலாமுன்னு... அப்புறம் இது இரகுபதி சார்” என்று இரகுபதியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“ஐ ஆம் முகமது உசேன்” என்று தலைமையாசிரியர் தன்னை இரகுபதியிடம் அறிமுகம் அறிமுகம் செய்துகொண்டார்.

“சார் வாங்க உள்ள உட்காருங்க...” அவர்களை அமர்த்திவிட்டு உதவியாளரிடம் தேனீர் வாங்கிவர சொன்னர்.

“என்ன சார் ஸ்கூல் ரெம்ப அமைதியா இருக்கு”

“ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் அவேர்நெஸ் கேம்ப்க்கு போயிருகாங்கா... நான் இந்த டென்த் பசங்கள வைச்சு பாடம் நடத்திட்டு இருந்தேன்”

“என்ன அவேர்நெச்ஸ் கேம்ப் சார்”

“மாசத்துக்கு மூணு நாலு வரும்... இப்போ சுற்றுசூழல் அவேர்நெஸ் கேம்ப்... இதுல்ல டென்த் பசங்க ரிசல்டு கொண்டுவரணும் அதுதான் அவனுகள விட்டுட்டு மத்த எல்லாத்தையும் அனுபிருவோம்”

இரகுபதி கேட்டார் “டென்த் ரிசல்ட் நல்லாயிருக்கா”

“நாங்க எல்லாத்தையும் பாஸ் பண்ணவைக்குறதே பெரிய விஷயம்... ஒரு நாலு பசங்க நல்ல மார்க் எடுப்பாங்க மத்த எல்லாம் ஜஸ்ட் பாஸ்பண்ண வைக்கணும்”

இலட்சுமிநாராயணன் இரகுபதியிடம் சொன்னார் “சார் நல்ல வொர்க் பண்ணுவாரு, புதுசு புதுசா பசங்களுக்கு ஏதாவது சொல்லிக்கொடுப்பார்... இவரு வேலைபார்த்த ஸ்கூல் எல்லாம் ஒரு வித்தியாசமாக இருக்கும், பசங்களுக்கு இவர ரொம்பவே பிடிக்கும்”

“பசங்க சார் முக்கியம்... அதுதானே நமக்கு வேலை...” என்று தலைமையாசிரியர் சொன்னார்.

“அப்புறம் பள்ளிக்கூடத்தில புது அட்மிஷன் எப்படியிருக்கு?” என்று இரகுபதி கேட்டார்.

“ஹைஸ்கூல் இருக்கு அதுனால போயிட்டுஇருக்கு இல்ல எப்போவோ மூடிருப்பாங்கா.....”

இலட்சுமிநாராயணன் குறுக்கிட்டார் “சார் நோடீஸ் போர்ட்ல இன்ஜினியரிங் காலேஜு அப்புறம் ஐஐடியில இருந்தெல்லாம் விளம்பரம் வந்திருக்கு என்ன விஷயம்?”

“இங்க பக்கத்துல இருக்கிற இன்ஜினியரிங் காலேஜுதான், இந்த ஏரியா MLAவோட காலேஜ். இந்த ஐஐடியில இருந்துதான் எதுக்கு இங்க விளம்பரப் படுத்துறாங்கன்னுதான் தெரியல... உங்களுக்குக்குத் தெரியுமுல்ல அங்க கேட்குற கேள்விக்கும் நம்ம பசங்க படிக்குற சிலபஸ்க்கும் சம்பந்தமேயில்ல... இருந்தாலும் நாங்க பசங்ககிட்ட சொல்லிருக்கோம்”

“சார்....நாங்க கிளம்புறோம்... மீட்டிங் மறக்காமல் வந்துடுங்க....” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்கள். இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள், இரகுபதி கேட்டார் “நீங்க ஏதோ மீட்டிங்ன்னு ஜாகிர் சார்கிட்ட சொன்னீங்களே என்ன மீட்டிங்?

“ஓ!.... நான் உங்ககிட்ட சொல்லமறந்திட்டேன் அடுத்தவாரம் ஒரு மீட்டிங் வைச்சிருக்கோம் நம்ம ஸ்கூல் தான், எனக்குத் தெரிஞ்ச பழக்கமான டீச்சர்ஸ், சமூக சேவையில் பணியாற்றுபவர்கள் கூப்பிடுவோம்... ஒரு விவாத மேடை நடக்கும். இது மாதிரி அடிக்கடி நடக்கும். இந்தமுறை நம்ம ஸ்கூல்.”

“விவாத மேடையா... எதைப்பத்தி?”

“சமூக பிரச்சனைகளைப் பத்தி விவாதம் நடக்கும். ‘மாறிவரும் சமூக சூழலும் கல்வியில் மாற்றமும்’ இதுதான் இப்ப நடக்கபோற விவாதம்” 

“ம்ம்.. தலைப்பு ரொம்பவே நல்லாயிருக்கே...”

இருவரும் வீடு வந்தவுடன் உணவருந்திவிட்டு களைப்பில் நன்றாக உறங்கிவிட்டார்கள். இலட்சுமிநாராயணனின் பள்ளிக்கு ஒருவார விடுமுறை விடப்பட்டிருந்தது. இரகுபதி தினமும் நூலகம் சென்று பல்வேறு கல்வி சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பார். கல்வியைப் பற்றி மார்க்ஸ்வாதம் என்ன சொல்கிறது, காந்தியவாதம் என்ன சொல்கின்றது, நவீன வாதிகளின் கருத்துக்கள் என்ன, பெண்ணின வாதிகளின் வாதங்கள் என்ன என்று படிப்பார். காந்தியின் கல்விக் கோட்பாடுகளும் மார்க்ஸ்ன் கோட்பாடுகளும் இவரை கவர்ந்தது.

குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றன என்பதைப்பற்றியும் கல்விகேற்ற சூழல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்பற்றி பல்வேறு நூல்களைப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமலா முகுந்தன், ஜான் ஹோல்ட், காந்தி, தாகூர், ஜாகிர் உஷைன், வினோத் ரைனா, அரபிந்தோ, மரியா மண்டோச்சரி, விவேகானந்தர், ஜே பி நாயக், அரிஸ்டாட்டில், எமில் துர்கேம், கிருஷ்ணமூர்த்தி, ஜான் லாக், பிளாடோ இன்னும் பல கல்விச் சிந்தனையாளர்களைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டார். இரகுபதிக்கு இப்போது மனது ஒரு மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆழானது. யார் சொல்வது சரியானது? இன்றைய சமூக சூழளுக்கு ஏற்ற கல்வி எது? இன்றைய கல்வியினால் என்ன பயன்? நம்முடைய கல்விமுறை சரியானதா? இன்றைய கல்விமுறையில் எவ்வாறு மாற்றம் கொண்டுவரமுடியும்? இப்படி எண்ணற்ற கேள்விகளை மனதில் சுமந்துகொண்டு இலட்சுமிநாராயணனை அணுகினார். இலட்சுமிநாராயணனால் இரகுபதியின் பல கேள்விகளுக்கு விடைகொடுக்க முடியவில்லை. ஒரு வாரம் உருண்டோடியது. இன்று சனிக்கிழமை, மதியம் இரண்டு மணிக்கு விவாத மேடை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இலட்சுமிநாராயணன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடிதுவிட்டார். நிறைய நண்பர்கள் வந்திருந்தனர்.

இலட்சுமிநாராயணனின் பள்ளிக் கலையரங்கத்தில் இன்னும் சில வினாடிகளில் விவாத மேடை நடைபெறவுள்ளது. இலட்சுமிநாராயணன் வாழ்த்துரை வழங்கி பேச்சாளர்களை அறிமுகப்படுத்த வந்தார்.

“இங்கு வந்திருக்கும் அனைவரையும் நான் வாழ்த்தி வரவேற்கின்றேன், இன்றைய தலைப்பு ‘மாறிவரும் சமூக சூழலும் கல்வியில் மாற்றமும்’ அதற்காக இங்கு விவாதத்தில் தங்களது கருத்துகளை எடுத்துரைக்க வந்திருக்கும் எனது நண்பர்களை அறிமுகப் படுத்துவதில் நான் பெருமை கொள்கின்றேன் மேலும் அவர்களையும் இந்த இனிய சந்தர்ப்பத்தில் வரவேற்கின்றேன். முதலாவதாக எனது நீண்டகால தோழன் முகமது உசேன் அவர்களை வரவேற்கின்றேன், இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமாசியிரியராக பணிபுரிந்து வருகிறார். அடுத்ததாக மருத்துவர். வெங்கட் ராதாகிருஷ்ணன் அவர்களை வரவேற்கின்றேன், தனது மருத்துவ சேவையையும் கல்விச் சேவையையும் இருகண்கள் எனக்கருதுபவர், இவர் தாய் வீடு என்ற பள்ளியை நடத்தி வருகின்றார். அடுத்து முனைவர். பாஸ்கர் அவர்கள், இவருக்கு அறிமுகம் தேவையில்லை, ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர், ஆனால் ஓய்வே இல்லாமல் சமூக பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்ட சமூக சேவகர் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த சமூகவியல் ஆராய்சியாளர்களில் ஒருவர். அடுத்து நாகராஜ் அவர்கள், இந்திய ஆட்சிப் பணியில் உள்ளார், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தவர், இவர் சமூகப் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் எழுத்தாளரும் கூட. அடுத்து திருமதி கயல்விழி அவர்கள், ஒரு சிறந்த பெண்ணின வாதி, பெண்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் போராடும் ஒரு போராளி. இறுதியாக முனைவர் கோபி அவர்களை வரவேற்கின்றேன், இவர் கல்வியில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும், ஒரு சமுத்துவமான சமூகம் அமையவேண்டும் அதற்காக அயராது போராடுபவர், இவர் சிறந்த நாடக நடிகர், ஓவியர், புகைப்பட கலைஞர், கல்வியல் சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்டவர்”. இலட்சுமிநாராயணனின் அறிமுக உரை முடிந்தபிறகு, ஒரு மிகப்பெரியா கரகோஷம் வந்தது.

மீண்டும் இலட்சுமிநாராயணனே வந்து விவாத தலைமை மற்றும் தொடக்க உரையாற்ற வந்தார். “கல்வி என்பது ஒரு பரந்துவிரிந்த தலைப்பு, ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனது கற்றல் தொடர்கின்றது, ஆனால் நாம் இன்று விவாதிக்க இருப்பது பள்ளிக்கல்வியை மட்டுதான், தற்போதைய பள்ளிக்கல்வியின் நிலை என்ன, அதில் என்னென்ன மாற்றம்ங்கள் வேண்டும் என்பதைப்பற்றிய விவாதம். நான் ‘கல்வி’ என்ன என்பதை தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2௦௦5-ல் அதன் தலைவர் யஷ்பால் அவர்கள் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதைக் கூறி இந்த விவாதத்தை தொடங்க ஆசைப்படுகின்றேன்.

‘கல்வி என்பது, ஆசிரியர் மூலம் அல்லது தபால் மூலம் அளிக்கப்படும் பொருள் அன்று வளமான, மகிழ்வான கல்விக்கான வேர் குழந்தைகளின் பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. அவர்கள் பெற்றோர்களோடும், ஆசிரியகளோடும், சக மாணவர்களோடும், சமூகத்தோடும் கலந்துரையாடுவதின் மூலம் அக்கல்வி வளர்க்கப்படுகிறது”- யஷ்பால் அவர்கள் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2௦௦5.[1] முதலாவதாக உசேன் அவர்கள் தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்வார்.” என்று தனது உரையை முடிது, முகமது உசேன் அவர்களை அழைத்தார்.

உசேன் தனது உரையை ஆரம்பித்தார் “அனைவருக்கும் வணக்கம். நாராயணன் அவர்கள், கல்வியைப் பற்றி அழகாக எடுத்துரைத்தார், என்னுடைய முதல் கருத்து நம்முடைய இப்போதையை கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை. இன்றைய நம்முடைய கல்விமுறை ஆங்கிலேய ஆட்சியின்போது மேக்காலே அவர்கள் அறிமுகபடுத்திய கல்விமுறையின் அடிப்படையில் அமைந்தது. நம்மை அடிமைபடுத்த, காலனியாதிக்கவாதிகளின் சதியின் விளைவாக உருவான இந்த கல்விமுறை மாற்றப்பட வேண்டும், நம்முடைய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் உடைத்தெறியும் நோக்கத்தில் உருவானது மெக்காலேவின் கல்விமுறை, நம்முடைய பழமையான கல்விமுறையை உடைத்து நம்முடைய முதுகெலும்பை முறித்து நம்மை அடிமையாகிய இந்த கல்விமுறைய மாற்றப்பட வேண்டும். ஆங்கில ஆட்சியாளர்களுக்கு தேவையான குமாஸ்தாக்களை மட்டும் உருவாக்க நினைத்து உருவாக்கப்பட்ட இந்த கல்விமுறை தூக்கி எறியப்படவேண்டும்”. என்று முடித்தார்.

அடுத்து வெங்கட் அவர்கள் தனது கருத்தை தெரிவித்தார் “நான் உசேன் அவர்கள் சொன்னதை ஏற்றுகொள்கின்றேன், நம்முடைய கல்வியில் மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும், அரசு ஏன் தயங்குகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”.

வெங்கட் அவர்கள் கூறியதற்கு நாகராஜ் அவர்கள் சொன்னார் “அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது, பல்வேறு முறைகளில் மாற்றம் நடந்துள்ளது. நம்முடைய கல்வித்துறை சுகந்திரம் அடைந்தபிறகு மிகபெரிய மாற்றம் உண்டானது, இன்றைய கல்விமுறைக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய முறைக்கும் எவ்வளவோ மாற்றங்கள் உள்ளது”

அடுத்து கயல்விழியின் பேச்சு “நானும் ஒத்துக் கொள்கின்றேன் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும், இன்றைய கல்விமுறை நம்முடைய சமுதாயதிற்கு ஏற்ற வகையில் இல்லை.” என்று முடித்தார்.

அடுத்து பேராசிரியர் பாஸ்கர் அவர்கள் “மாற்றம் என்பது ஒருநாளில் வந்துவிடாது அது நம்முடைய நாட்டின் தேவையைப் பொருத்து சமுகத்தின் தூண்டுதலால் வரவேண்டியது. எந்த ஒரு சமூகமும் நிலையானதாக இருப்பதில்லை, காலம் முன்னோக்கிச் செல்ல செல்ல ஏதாவது ஒருவகையில் மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கும், ஆனால் நம்மால் அதை அவ்வளவு எழிதாக வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை. அதுபோல்தான் கல்வித்துறையில் எவ்வளவோ மாற்றங்கள் உண்டாகியுள்ளது, நாகராஜ் அவர்கள் சொன்னதைப்போல சுகந்திரம் அடைந்த பிறகு எவ்வளவோ மாற்றங்கள் நமது கல்வித்துறையில் வந்துள்ளது”. என்று தனது உரையை முடித்தார். இலட்சுமிநாராயணன் கோபியை அழைத்தார், “நீங்க என்ன நினைக்குறீங்க கோபி?”

சற்று நேர அமைதிக்குப் பிறகு கோபி தனது பேச்சை ஆரம்பித்தார் “எல்லாரும் சொன்னாங்க கல்வியில மாற்றம் கொண்டுவரணும்ன்னு, ஆனா யாரும் கல்வித்துறையில் என்ன மாற்றம் வேணுமுன்னு சொல்லல. எண்ணப் பொறுத்தவரையில் மூன்று முக்கியமான மாற்றங்கள் தேவை, முதலில் கல்வித்துறையின் நிர்வாகதில் மாற்றம், இரண்டாவது பாடப்புத்தகங்களில் மாற்றம் மூன்றாவது நம்முடைய இன்றைய கற்றல்-கற்பித்தல் முறையில் மாற்றம்.”

இலட்சுமிநாராயணன் “கோபி ரொம்ப நல்ல சொன்னீங்க, வெரி குட் வெரி குட்.....”

மீண்டும் கோபி பேச ஆரம்பித்தார் “சாரி... நான் உசேன் சார் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும், இது அவரிடம் மட்டும் அல்ல மெக்காலேவின் கல்விமுறையினால் தான் இந்தியாவின் கல்விதரம் குறைந்துவிட்டது, மெக்காலேயும் ஆங்கிலேய ஆட்சியையும்தான் இன்றைய கல்விதுறையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று கூறும் அனைவருக்கும் இந்த கேள்வி .பொதுவானது. உசேன் சார்! இன்னமும் நாம ஏன் மெக்காலேவை காரணம் சொல்லனும்? மெக்காலே அவர்கள் கல்விமுறையை அறிமுகபடுத்துவதற்கு முன்னால் இந்தியாவில் எந்த மாதிரியான கல்விமுறை இருந்திச்சு? ஆங்கிலம்தான உங்களுக்கு பிரச்சனை? ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆங்கிலம் ஒரு பாடம் மட்டுமே  ஆனால் இன்று அனைத்துமே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுகின்ற்றனர்,  இதுவும் மெக்காலேவின் சதியா? சரி மெக்காலேவின் கல்விமுறைய நல்லது இல்லை என்றால் சுகந்திரம் அடைந்து அறுபது வருடங்களா என்ன பண்ணுனீங்க? இன்னும் பல கேள்விகள் உண்டு. உசேன் சாரிடம் கேள்விகேட்க என்றுமே எனக்கு  தனி உரிமை உண்டு, ஏனென்றால் நான் அவருடைய மாணவன்!.. என்றுமே மாணவன்!” என்றவுடன் அரங்கம் ஒரு மிகப்பெரியா கரகோஷத்தை கொடுத்தது.

இலட்சுமிநாராயணன் “இப்போதான் உண்மையான விவாதம். கோபி கேட்ட கேள்விகளை நானும் ரெம்ப நாளாவே கேட்கனும்னுனு நினைச்சிட்டு இருந்தேன், யாராவது கோபிக்கு பதிலா சொல்லுங்க”.

உடனே நாகராஜ் கையை உயர்த்தினர்.

இலட்சுமிநாராயணன் “நாகராஜ் நீங்க உங்க கருத்தை சொல்லலாம்”

நாகராஜ் ஆரம்பித்தார் “ கோபியின் கேள்விகள் ஞாயமானது.... மெக்காலே என்ற ஒரு பரட்சி வீரன் இல்லாவிடில் இன்றைய இந்திய சமூகம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.... மெக்காலே என்ற ஆங்கிலேயனை நான் ஒரு புரட்சி வீரனாக பார்க்கின்றேன். மெக்காலே இந்தியாவில் கல்விமுறையை அறிமுகபடுத்தியபோது அன்றைய  இந்தியாவின் நிலைஎன்ன? ஐரோப்பாவில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் புரட்சியின் காரணமாக குறைந்த உற்பத்தி செலவில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு காலனிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதற்குமுன்பு வரை இந்தியாதான் உலக வர்த்தக அரங்கில் கோலோச்சிக் கொண்டிருந்தது. தொழிற்புரட்சிக்கு முந்தைய உலக வர்த்தகம் விவசாயம் மற்றும் கைவினைப்பொருட்களால் மட்டுமே ஆனது, விவசாயம் மற்றும் கைவினைப்பொருட்கள் உற்பத்தியில் நாம் கைதேர்ந்து விளங்கினோம் அதனால் நம்மால் உலக வர்த்தகத்தில் முன்னோடியாக ஒரு ஆதிக்கம் செலுத்தும் சக்தியா இருந்தோம். தொழிற்புரட்சியின் விளைவாக உலக வர்த்தகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளானது, அந்த மாற்றத்தை நம்மால், நம் அன்றைய கல்விமுறையினால் ஈடுகொடுத்து போகமுடியவில்லை, நம்மை பின்னுக்குத்தள்ளி மற்ற நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் முன்னோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டன. இந்த புதிய தொழிற்சமூகத்திற்கு தேவையான ஓன்று கல்வி, இதை மெக்காலே அறிமுகப்படுத்தினார். மெக்காலே இல்லாவிட்டால் இந்திய சமூகத்தின் நிலை இன்னுமும் மோசமாகத்தான் போயிருந்திருக்கும்”.

கயல்விழி தனது பங்கிற்கு சிலவற்றை கூறினார் “ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட கல்விமுறையினால் பல நன்மை தீமைகள் உள்ளன, ஆனால் நன்மைகளையே நான் அதிகம் பார்கின்றேன். கல்வி கற்றதன் விளைவாகத்தான் இந்திய சமூகத்தில் இருந்த எத்தனையோ சமூக கொடுமைகள் மாற்றம் அடைந்துள்ளது. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைபடுத்தி வந்த ஆணாதிக்க வாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. உடன் கட்டை ஏறுதல், பால்ய திருமணம், பெண் தாழ்ந்தவள், சமையல் அறையும் படுக்கை அறையும் தான் பெண்களின் இருப்பிடம் என்ற நிலை மாறி, பெண்கள் வெறும் குழந்தைகளைப் உற்பத்திசெய்யும் இயந்திரம் என்ற நிலை மாறி ஆணுக்குப் பெண் சரிநிகர் என்றாகிது கல்வியின் விளைவாகவே”.

இலட்சுமிநாராயணன் “நம்முடைய விவாதம் சற்று திசை மாறுகின்றது, தயவுசெய்து மீண்டும், இன்றைய கல்விக்கே வருவோம். கோபி அவர்கள் சொன்னது போல், கல்வித்துறையின் நிர்வாகம், பாடபுத்தகங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் முறை, இந்த மூன்றை மட்டும் பார்போம்” என்று கூறிவிட்டு “தற்போது மனப்பாடம் செய்வது உச்சநிலைக்குச் சென்றுவிட்டதால் அது அவசியம் மாற்றப்பட வேண்டும். புரிந்து கொள்வதின் சுவையை நாம் நம் குழ்கந்தைகளுக்குத் தர வேண்டும். இச்சுவை அவர்கள் கற்பதற்கும், தங்களின் சொந்த வழிமுறையிலான அறிவைப் பெறுவதற்கும், எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கையைச் சந்திக்கவும் உதவும்” இதை நான் சொல்லவில்லை தேசிய காலைவிடிவமைப்பு திட்டம் 2௦௦5-ல சொல்லிருக்காங்க இதைபத்தி நீங்க விவாதம் பண்ணலாம்.

மருத்துவர் வெங்கட் “இந்த கருத்தை கோதாரி கமிஷன் (1964-66) சுமார் நாற்பது வருடங்கலுக்கு முன்னால் சொன்னது, அதையே இப்ப தேசிய காலைவிடிவமைப்பு திட்டம் 2௦௦5-ல இன்னும் கொஞ்ச தெளிவா சொல்லிருக்காங்க, ஆன கவர்ன்மென்ட் இன்னும் முழு விருப்பத்தோட நடைமுறைப்படுத்த முன்வரதில்ல, எத்தனை அரசுப் பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் முறையில் மாற்றம் வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?”

நாகராஜ் “அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு இருக்காங்க, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2௦௦9- ல தெளிவா சொல்லிருகங்கா, அதற்கான பணிகள் விரைவாக நடந்து கொண்டுதான் இருக்கு. ஒன்பதாம் வகுப்பு வரை தோல்வியை இல்லை என்ற சட்டம் கொண்டுவந்திருகோம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை (CCE) கொண்டுவந்துள்ளோம், இதுல குழந்தைகளுக்கு இடையே உள்ள ஆரோக்கியமற்ற போட்டிகளை தவிர்த்து கற்றலுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது, இன்று CBSE பள்ளிகளில் இது முழுமையா நடைமுறை படுத்தப்படுகின்றது”.

கோபி அவர்கள் “சார் நீங்க சொல்லுறத கேட்பதற்கு நல்ல இருக்கு, CBSE பள்ளிகள் எண்ணிகையில் மிகவும் குறைவு, இங்கு அதிகமா இருக்கும் மாநில பாடத்திட்ட பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் இது முறையாக அமல்படுத்தப் படுகின்றது, அது தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சரி அரசுப்பள்ளிகளாக இருந்தாலும் சரி பெரிய மாற்றம் வரவில்லை. எத்தனை ஆசிரியர்களுக்குத் தெரியும் ஆல் பாஸ் முறை பயனுள்ளது என்று, குழந்தையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறை என்று?. ஆசிரியர்களின் பொதுவான கருத்து CCE முறையினால் ஆசிரியர்களின் வேலைப்பளு அதிகமாக்கபட்டுள்ளது, இந்த முறையினால் குழந்தைகளின் கற்றல் திறன் குறையும் நினைகின்றார்கள்”.[2]

பேராசிரியர் பாஸ்கர் அவர்கள் “நடைமுறை உண்மை என்னவென்றல் அரசின் கல்வியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் சட்டம் இயற்றுவதோடு மட்டும் நிற்றுவிடுகின்றது, அதை நடைமுறைப்படுத்த தேவையான முயற்சிகளை எடுப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. இந்த CCE முறையைப் பற்றி எத்தனை முறைகள் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு நாகராஜ் அவர்களால் பதில் கூறமுடியுமா?”

நாகராஜ் “பாஸ்கர் சார்... அரசு தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டுதான் வருகின்றது ஆனால் மாற்றம் என்பது ஒருசில நாட்களிலோ அல்லது மாதங்களிலோ காணமுடியாத ஓன்று, அதற்கான ஒரு குறுப்பிட்ட காலம் தேவை”

கோபி “எவ்வளவு நாள் இதையே சொல்லிக்கிட்டு இருக்குறீபீங்க, அதுக்கு ஒரு காலவரையறை கிடையாத, மூன்று நான்கு வருடங்களாகியும் இன்னும் போதுமான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படவில்லை, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை தரமுடியவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்கள்.”

நாகராஜ் “அதாவது அரசின் தரப்பில் தேவையான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது, தேவையான கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன அனால் ஆசிரியர்கள் அதை உள்வாங்கிக்கொண்டு பயன்படுத்துவதில் சில குறைபாடுகள் உள்ளன, இந்த குறைபாடுகளை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது”

உசேன் “நான் அரசுப் பள்ளியில் இருந்து வருகின்றேன் உண்மையில் எங்கள் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப் படவில்லை, நாங்கள் பழையகல்விமுறை நீண்டகாலம் பணிபுரிந்து உள்ளோம், எங்களுடைய ஆசிரியர் பயிற்சி முறை மற்றும் அனுபவம்  இவைகள் எல்லாம் இந்த புதிய முறையை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. அரசின் பயிற்சிகள் தேவையான அளவு இல்லை, அதுதான் முக்கியமான காரணம்”

வெங்கட் “உசேன் அவர்களின் வாதம் உண்மைதான், ஆனால் முழுவதும் உண்மையில்லை. தனியார் பள்ளிகளிலும் இந்த சமூகத்தில் இருந்து வந்த ஆசிரியர்கள் தான், ஏன் அவர்களால் இந்த புதிய கல்விமுறையை முழுமையாக அமல்படுத்த முடிகின்றது, அரசின் நிர்வாகம் சரியில்லை, மாதம் ஆனால் சம்பளம், கேள்வி கேட்பதற்கு யாரும் கிடையாது, அரசியல் பலம் இதன் காரணமாக மாற்றத்தை விரும்பாத ஆசிரியர் சமூகம், இதுதான் முக்கிய காரணம்”

உசேன் “தனியார் பள்ளிகளோடு அரசுப்பள்ளிகளை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். தனியார் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் குடும்பம், பெற்றோர்களின் கல்வியறிவு பொருளாதாரம் போன்றவை குழந்தையின் கல்வியில் பெரிய வித்தியாசத்தை ஏற்ப்படுத்தும், இவைகள் எல்லாம் எங்கள் பள்ளிக்கு இல்லை”

வெங்கட் “சார் நான் குழந்தைகள் கல்வி கற்பதைப் பற்றி பேசவில்லையே, புதிய கல்வித்துறையின் மாற்றங்களை உங்களால் பின்பற்ற முடிவில்லையே அதன் காரணத்தை சொன்னேன் அவ்வளவுதான்”

பேராசிரியர் பாஸ்கர் “சமூகத்தில் கட்டுபாடுகள் குறையுவாக உள்ளபோது இதுபோன்ற பிரச்சனைகள் வருவது இயற்கை. நவீன சமூகம் என்னதான் பகுதறிவுடையதாக இருந்தாலும் கட்டுபாடுகள் தேவை, சமூக நீதி நெறி, சமூக ஒழுக்கம் போன்றவைகள் இருந்தாலும் வெளிப்புற கட்டுப்பாடு ஓன்று தேவையானது, வெளிப்புற கட்டுப்பாடு அரசின் கையில் உள்ளது. அரசு தன் கடமையைச் செய்ய தவறுகின்றபோது இதுபோன்ற பிரச்சனைகள் வருகின்றன.”

நாகராஜ் “எல்லாத்தையும் அரசின் மேலே பழிபோட்டுவிடாதீர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்த சமூகத்தில் உள்ள அனைத்து உறுபினர்களுக்கும் பங்கு உள்ளது”

கோபி “நாகராஜ் நீங்க பாஸ்கர் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்று நினைகின்றேன். ஒரு நவீன ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும்போது அவர்களின் முதன்மை கடமை அரசுத்துறையை திறன்பட வழிநடத்திச் செல்வது. உங்கள் வழி நடத்தலின் தோழ்வியை மக்களின் மீதும் சமுகத்தின் மீதும் திணிப்பது சரிதான?”

நாகராஜ் “அரசசை நீங்கள் ஆட்சி அமைந்தபிறகு மட்டும் பார்க்கின்றீர்கள், ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே பார்க்கவேண்டும். அரசின் கொள்கைகள் எல்லாம் அவ்வளவு எழிதாக வடிவமைக்கப் படுவதில்லை, பல்வேறு குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும், வெவ்வேறு விருப்பங்களோடு குழுக்கள் இருக்கும், அதில் அரசு பணியாளர்களும் ஆசிரியர்களும் அடங்கும். எங்களுடைய எந்த ஒரு முயற்சியும் பல்வேறு குழுக்களின் ஆதிக்கத்திற்கு உட்படாமல் வருவது கிடையாது. அதனால் தான் எங்களால் அரசு பணியாளர்களை நிர்வாகிப்பதில் சிரமமான காரியமாக உள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஆசிரியர்கள் போராட்டம் உங்களுக்கு ஞாபாகம் இருக்கும் என்று நினைகின்றேன், ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டுவந்தது”

கோபி “நாங்க ஒன்னும் ஆரியர்களை பணிநீக்கம் பண்ணுங்க, அவர்களுக்கு தண்டனையை கொடுங்க அப்படின்னு எதிர்மறை பேசவில்லை. நீங்க ஆசிரியர்களுக்கு முறைய பயிற்சிகள் கொடுங்க, பயிற்சிகள் பெயரளவில் இல்லாமல் பயன்படும் பயிற்சியாக இருக்கட்டும், கல்வியியல் சிந்தனைகளை சொல்லிகொடுங்கள், கல்வித்துறையின் மாற்றங்களில் அவர்களை இணைத்துக்கொண்டு முன்னோக்கி எடுத்துசெல்லுங்கள், இதைத்தான் நாங்கள் விருப்புவது”

கயல்விழி “நிர்வாகத்தில் அரசு தவறிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட முக்கியமானது பாடப்புத்தகங்களில் மாற்றம் வேண்டும். கல்விக்கும் வாழ்க்கைக்கும் எந்த ஒரு சமபந்தமில்ல பாடங்கள் இன்றைய பாடப்புத்தகங்களில் எத்தனையோ உண்டு. ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்களை புகழ்ந்து பாடங்கள் தேவைதானா? ஆட்சி மாறும்போதெல்லாம் பாடங்கள் அழிக்கபடுவதும் சேர்க்கப்படுவதும் வேண்டுமா? தனக்கு தானே புழந்துகொண்டு அரசியல் நடத்த பாடப்புத்தகம் ஒரு மேடையா? சிந்தியுங்கள். பெண்ணை அடிமைபடுத்தும் நோக்கில், ஆணாதிக்க சிந்தனைகளை வளர்க கலாச்சாரம் என்ற பெயரில் உள்ள பாடங்கள் நீக்கப்பட வேண்டும். எடுத்துகாட்டாக நம்முடைய பாடப்புத்தகம் ஒரு பாடம் வீட்டில் உள்ள நபர்களை அறிமுகபடுத்துகின்றது அம்மா சமையலறையில் சமையல் செய்கின்றாள், அக்கா பாத்திரம் கழுவுகின்றாள், தம்பி விளையாடுகின்றான், அப்பா பேப்பர் படிகின்றார் இதுபோன்று பாடங்கள் நீக்கப்பட வேண்டும். சாதாரணமாக பார்த்தால் நான் கூறிய உதாரணத்தில் பெரிய வித்தியாசம் தெரியாது ஆழ்ந்து உற்றுப் பாருங்கள் உண்மை புரியும்.”

வெங்கட் “கயல்விழி அவர்கள் சொன்னது உண்மைதான். இதுபோன்ற பாடங்கள் நீக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமான வேலை அரசு பள்ளியின் நிர்வாகத்தை சீரமைப்பது, இல்லையென்றால் அரசு பள்ளிகளை முடிவிட்டு முழுவதும் தனியாரிடம் கொடுத்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்”

சற்று நேரம் அரங்கமே அமைதியாக இருந்தது.

நாகராஜ் “அரசு பள்ளிகள் இந்த சமூகத்திற்கும் நம்முடைய நாட்டிற்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருகின்றது என்பதை உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தியாவில் அரசுப் பள்ளிகள் தான் 80 சதவிகிததிற்க்கும் மேலானா பள்ளிகள். பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றுகின்ற மாபெரும் சக்தியாக அரசுப்பள்ளிகள் உள்ளது”

வெங்கட் “நாகராஜ் அரசியல்வாதிகள் மாதிரி பேசாதீங்க.... நீங்க சொன்ன 80 சதவிகித பள்ளிகளில் இன்று எத்தனை குழந்தைகள் படிகின்றார்கள், இந்தியா அளவிற்கு பேசவேண்டாம் நம்முடைய தமிழ்நாட்டிற்கு வருவோம் இந்த சென்னை மாவட்டத்தில் எத்தனை சதவிகித குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிகின்றார்கள், வறுமைக் கோட்ற்றிக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து  எத்தனையோ குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பணம் கொடுத்து படிகின்றார்கள், ஆட்டோ ஓட்டுனர், தெருவில் பூ வியாபாரி, அன்றாடம் வீட்டுவேலை செய்யும் தொழிலாளிகள் இவர்களில் பெரும்பாலனோர் வட்டிக்கு பணம் வாங்கி தனது குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஏன் இவர்கள் அரசுபள்ளிகளுக்கு போவதில்லை? நீங்கள் சொன்னீர்களே பின்தங்கிய ஏழை எளிய மக்களின் நலனுக்காக உள்ளது அரசுப் பள்ளிகள் என்று...”

உசேன் “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவது அரசுப் பள்ளியின் தரம் குறைந்தது என்ற காரணத்தால் அல்ல... தனியார் பள்ளிகளில் ஆங்கில கல்வியின் மோகம், ஒரு மாயை. இந்த மாயை தனியார் பள்ளிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது”

நாகராஜ் “உசைன் அவர்கள் சொன்னதுபோல் தனியார் பள்ளிகளில் அதிகமானோர் சேர்வதற்கு காரணம் ஆங்கிலமுறை கல்வி தான்”

வெங்கட் “உசேன் சார் ஆங்கில கல்வி ஒரு மாயை என்று வைத்துக் கொள்ளுவோம், உங்களின் குழந்தைகளும் நாகராஜ் அவர்களின் குழந்தைகளும் இந்த ஆங்கில வழியில் தானே கற்கின்றனர், பிறகு ஏன் மாயை சாதாரண குடிமக்களின் குழந்தைகளுக்கு தவிக்கப் படுகின்றது, அவர்களும் வரி செலுத்துபவர்கள் தானே, ஊசி வாங்கினாலும் பாசி வாங்கினாலும் ஏன் ஒரு பத்து ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்தாலும்கூட கல்விக்கென்று வரி வாங்கப்படுகின்றதே. ஏன் ஏழைகளின் உரிமை பறிக்கப்படுகின்றது, அவர்களுக்கு சமமான கல்வி தவிர்கபடுகின்ற்றது?”

உசேன் “இதற்க்கு முழுப் பொறுப்பும் தனியார் கல்விநிறுவனங்கள் தான், அவர்களுடைய வியாபார நோக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்”

வெங்கட் “உசேன் சார்.... தனியார் பள்ளிகள் கவர்ச்சிகரமான இருப்பதற்காக ஆங்கில பாடமுறையை அறிமுகபடுத்தினார்கள் என்று வைத்துகொள்வோம், ஏனென்றல் எங்களுடைய பள்ளிக்கான செலவு ஆசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை மாணவனிடம் கட்டணமாக பெறவேண்டும். நாங்கள் ஏன் ஆங்கில வழிகல்வி ஆரம்பித்தோம் முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாகராஜ் போன்ற அதிகாரிகள் தங்களின் குழைந்தைகளுக்கு மட்டும் ஆங்கிலவழி கேந்திரிய வித்யாலைவில் கல்வி, உயர்தர CBSE பாடத்திட்டம் போன்றவைகளால் எங்கள் குழந்தைக்கும் அது வேண்டும் என்று கொண்டுவந்தோம், அதுமட்டுமல்ல அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் ஆங்கில வழி, இதற்கு எங்கள் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும் அதனால் தான் நாங்களும் ஆங்கில வழி கல்வியை ஆரம்பித்தோம்”

பேராசிரியர் பாஸ்கர் “வெங்கட் வெரி குட்.... நீங்க சொன்னது ரொம்பவே சரியானது, கல்வியில் பாகுபாடு இருக்கக்கூடாது”

கோபி “வெங்கடின் ஆதங்கம் புரியுது. அவருடைய வாதம் ஆங்கில வழிக் கல்வியை ஏன் தனியார் பள்ளிகள் தொடங்கினார்கள் ஞாயப்படுதுவதாக இருந்கின்றது, அதுவும் ஒருவழியில் உண்மைதான். ஆனால் அவருடைய பேச்சை கொஞ்சம் ஆழமா புரிஞ்சுகனும். இதுமாதிரித்தான் நிறைய சமூக ஆர்வலர்கள் சொல்லிக்கிட்டு இருகாங்க அரசுப் பள்ளிகள் விட தனியார் பள்ளிகளில் செலவு மூன்றில் ஒருபங்கு கூட கிடையாது, அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு  தனியார் பள்ளிகளில் கல்வியை கொடுத்துவிடலாம், அப்படி பண்ணினால் வரிப்பணம் எவ்வளவோ சேமிக்கலாம். இந்த தனியார் பள்ளிகள் எப்படி குறைந்த செலவில் நிர்வாகிக்க முடியும், ஒரு வழிதான் அது ஆசிரியர்களுக்கும் மத்த ஊழியர்களுக்கும் குறைந்த சம்பளத்தில் பணியமர்த்துவது, இதுதான் பெரும்பாலுமான பள்ளிகளில் நடப்பது. எத்தனையோ ஆய்வுகள் இதை வெளிப்படுத்திருக்கு”[3]

வெங்கட் “கோபி அனைத்து பள்ளிகளுமே நீங்க சொல்லறது மாதிரி இல்ல, தனியார் பள்ளிகளில் சமூக சேவைசெய்யும் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. பள்ளியின் நோக்கம் தரமான கல்வியை குழந்தைகளுக்கு அழிப்பதாக இருக்கவேண்டும்”

கோபி “பள்ளியை வெறும் கல்வியை கொடுக்கும் ஒரு இடமாக மட்டும் பார்க்கவேண்டாம், நான் ஒத்துகொள்கின்றேன் தரமான கல்வி அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் கொடுக்கபடுகின்றது, தனியார் பள்ளிகள் சமூக சேவையின் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றது, இவைகள் எல்லாம் விரல் விட்டு எண்ணிவிடும் அளவுதான் உள்ளது. சமூக சேவை என்ன என்று முதலில் வரையறை செய்யுங்கள். சமத்துவமற்ற கல்வியை பணத்தின் அடிபடையில் விற்பனை செய்வது சமூக சேவையா? குறைந்த செலவில் தரமான கல்வியென்று அடிப்படை தேவைக்கும் குறைவாக ஊதியம் கொடுப்பது சமூக சேவையா?. பள்ளிகள் என்பது ஒரு சமமான, சமத்துவமான சமுகத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு கருவியாக இருக்கவேண்டும், இங்கு ஏழை பணக்காரன், தாழ்ந்தவன் உயர்ந்தவன், மேல்சாதி கீழ்சாதி என்ற பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே கல்வி என்று இருக்க வேண்டும், இதை தனியார் கல்வியால் கொடுக்கமுடியுமா?”

இலட்சுமிநாராயணன் “கோபி ஒரு நல்ல கேள்வியுடன் அவருடைய பேச்சை முடித்துள்ளார், நேரம் ஆகிவிட்டதால் இத்துடன் நம்முடைய விவாத்தை முடிதுக்கொள்கின்றோம், அடுத்து விவாதத்தில் கோபி அவர்களின் கேள்விதான் விவாத தலைப்பு. அனைவருக்கும் நன்றி, இங்கு நடந்த விவாதம் யாரையும் புண்படுத்தும் நோக்கதில் அல்ல, நாகராஜ் அவர்களுக்கும் இதை புரிந்துகொள்ள வேண்டும், அவரும் எங்களுடன் நீண்டகாலமகா பயணிப்பதால் புரிந்துகொள்வர்.”

மீட்டிங் முடிந்தவுடன் அனைவரும் தேனீர் அருந்த களைந்துவிட்டார்கள், கோபியை சுற்றி ஒரு பெரும்கூட்டம். இரகுபதி இலட்சுமிநாராயணிடம் சென்று “கோபி நல்ல பேசினாரு, யார் அவரு”

“அவர் இன்னைக்கு இரவு இங்கதான் இருபாரு, அப்புறம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு மற்ற நண்பர்களின் விசாரிப்புகளில் மும்பரமாக இருந்தார். சுமார் இரண்டு மணிநேரம் கழித்து இலட்சுமிநாராயணன் கோபியிடம் இரகுபதியை அறிமுகபடுத்தி வைத்தார்.

“நீங்க ரெம்ப நல்ல பேசினீங்க.....”

“தாங்க்ஸ்”

“நீங்க எங்க வேலை பார்க்குறீங்களா?”

“அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்-2௦௦9, பத்தி விழிப்புணர்வு பயணம் பண்ணிட்டு இருக்கோம். இந்திய முழுவதும் சுத்தி வருவோம், கிராமம் கிராமமா போய் பிரசாரம் பண்ணுவோம்”

“அரசு நடத்துற விழிப்புணர்வு திட்டமா?”

“இல்ல சார்... அரசாங்கத்துக்கு எந்த கவலையும் இல்ல... ஒரு தன்னார்வ நிறுவனம்”

“நீங்க இந்திய முழுவதும் பயணம் பண்ணியிருக்கீங்க மத்த மாநிலங்களில் கல்வியின் தரம் எப்படி இருக்கு”

“கல்வித் ‘தரம்’ அப்படினா என்ன சார்?”

“அதுதான் நாளிதழ்கள் தினமும் வருதே.... இந்த வருட ஆய்வில் கல்வித் தரம் குறைந்துவிட்டது, மத்திய அரசின் ஆய்வுகள் சொல்லுது கல்வித்தரம் உயர்ந்துள்ளது, அப்படி இப்படின்னு சொல்லுறாங்களே அதைப்பத்திதான் கேட்டேன்”

“கல்வியின் தரத்தை ஆய்வு செய்யும் அரசின் கல்வித்துறையாக இருந்தாலும் சரி தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கென்று தனியான ஒரு அளவுகோலை உருவாக்கியக் கொண்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் செய்து வெளியிடுகின்றார்கள். இந்த அளவுகோல் சரியானதா இல்லை முழுமையானதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பொதுவாக என்னைப் பொறுத்தவரையில் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த  கல்வியின் தரத்திற்கும் தற்போதைய கல்வியின் தரத்திற்கும் நிறையவே மாற்றங்கள் உண்டு, சில மாநிலங்களில் முன்னோக்கிச் செல்கின்றத, இது நம்முடைய எதிர்பார்ப்பிற்கு குறைவாகவோ அல்லது நம்முடைய குறைந்தபச்ச நிர்ணயத்திற்கும் குறைவாகவோ இருக்கலாம், ஆனால் இன்று பள்ளிகளின் கற்பித்தல் முறையிலும் மாணவர்களின் கற்றலின் திறனும் நல்ல மாற்றம் அடைந்துகொண்டே செல்கின்றது. ஆனால் வருத்தப்பட வேண்டியது சில மாநிலங்கள் கல்வியில் பின்னோக்கிச் செல்லுவதுதான்” என்று கோபி சொன்னார்.

“அரசுபள்ளிகளில் தரமில்லாத காரணத்தால், புதிய மாணவர்கள் சேர்கை குறைந்துகொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளில் தரம் அதிகமா இருப்பதால் மாணவர்கள் அங்கே அதிகமாக சேருகின்றனர் அப்படின்னு பொதுவா ஒரு கருத்து இருக்கு, அதைப்பத்தி என்ன நினைக்குறீங்க?”

“இது முழுவதும் உண்மை கிடையாது. ஒரு குழந்தை நல்ல படிக்குதுன்ன அதுக்கு பல்வேறு கரணங்கள் இருக்கு, உசேன் சார் சொன்னது போல் பெற்றோர்களின் கல்வி, பொருளாதாரம், அவர்கள் வசிக்கும் சமூதாயம், அப்புறம் குழந்தையின் ஆரோக்கியம் இதுவும் பொதுவாகவே பெற்றோர்களின் கல்வி பொருளாதாரத் தன்மையைப்பொறுத்து இருக்கும். தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளும்போது படித்த வசதிபடைத்த வீடுகளில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்த்துக்கொள்கின்றனர், அதனால ஒருசில பெரிய தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் நல்ல இருகின்றது, இல்ல குழந்தைகள் நல்ல படிகின்றார்கள் எப்படி வேண்டும்மென்றாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனா இந்த சிறிய தனியார் பள்ளிகள் பேருந்து கொட்டைகைகளிலும், பழைய குடோன்களிலும் ஆங்கில வழிக் கல்வி என்று சொல்லி நடத்துகின்றார்களே அவைகளில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை, ஆங்கில வழி கல்வி தவிர. ஆங்கில வழி கல்வி நல்லதுன்னு ஒரு சமூக நம்பிக்கை அதுதான் ஒரு முக்கியமான காரணம். கேந்திர வித்யாலையா, நவோதைய போன்ற அரசுபள்ளிகளில் பள்ளிகளில் சேரா காத்துக் கிடக்குறாங்க, இதுவும் அரசுப்பள்ளிகள் தானே?”




[1] தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2௦௦5, (National Curriculum Framework, 2005), National Council of Educational Research and Training, New Delhi
[2] Mallica Josh, Govt Teachers slam CCE, says students have stopped studying, Hindustan Times, May 25, 2012, Retrived from http://www.hindustantimes.com/india-news/newdelhi/govt-teachers-slam-cce-say-students-have-stopped-studying/article1-860825.aspx on 26th March 2014
[3] Ms. Swaleha Sindhi, The Plight of Non Governmental Teachers in India, International Journal of Humanitics and Social Sciences Invention, Volume I, Issue I, Dec 2012, Retrived from http://www.ijhssi.org/papers/v1(1)/Version-1/H114549.pdf on 26th March 2014.


“சில மாநிலங்களில் கல்வி பின்னோக்கிச் செல்கின்றது அப்படின்னு சொன்னீங்களே அதுக்கு என்ன காரணம்”

“நான் கல்வியை மாணவனின் படிப்பு பள்ளிகளின் தரம் அப்படின்னு குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இறந்தவர்கள் போக மீதம் உள்ளவர்கள் தங்களின் கனவு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அரசியல் சாசணத்தில் எழுதிவைத்திருகின்றனர், சமூகம் பொருளாதார அரசியல் உரிமைகள் பெற்று ஒரு சமத்வமான சமூகம் அமையவேண்டும், இந்த நிலையை அடைய கல்வியை ஒரு சமூக மாற்றத்தின் தூண்டுகோலாக ஒரு கருவியாக நான் பார்கின்றேன்”.

“எனக்கு புரியல”

“விளக்கமா சொல்லுறேன்.... நாம அப்படியே நடந்துகிட்டே பேசலாமா”

உடனே இலட்சுமிநாராயணன் “வாங்க அப்படியே நம்ம ஸ்கூல சுத்தி வருவோம்”.

கோபி தனது பேச்சை தொடங்கினார் “என்னுடைய அனுபவ முறையில் சொல்றேன், கல்வியில் ‘சமத்துவம்’ வேணும். சமத்தும் அப்படின்னா அனைவருக்கும் சமமான கல்வி அதாவது பாடத்திட்டங்களில் வேறுபாடு இருக்ககூடாது இப்போ CBSE, ICSE,  ஒவ்வொவொரு மாநிலத்துக்கும் ஒரு பாடத்திட்டம் அப்படியின்னு 35 மேல இருக்கு, இதை முதலில் தவிர்க்கணும், அடுத்து கேந்திர வித்யாலையா, நவோதைய, தனியார், மாநில அரசுப்பள்ளிகள் என்று நிர்வாகப் பிரிவினைகளும் அதிகமா இருக்குக் கூடாது”

“நீங்க சொல்லறது ஞாயம? இல்ல நம்ம நாடு எத்தனை கலாசார வேற்றுமைகள், பண்பாட்டு வேற்றுமைகள், மொழியில் வேற்றுமைகள் அப்படி இருக்கும் போது நீங்க சொல்லுற மாதிரி ஒரே பாடத்திட்டம் அப்படினா பிரச்சனை ஆகாத? காலச்சராமும் மொழியும் அழிந்து விடாத?”

உடனே இலட்சுமிநாராயணன் குறுக்கிட்டார் “எல்லோருக்கும் பொதுவான பாடத்திட்டத்தின் (Common Syllabus)  மேல் ஒரு தவறான கருத்து உண்டு, பொதுவான பாடத்திட்டம் அப்படின கலாச்சார பண்பாட்டுக்கு எதிரி. உண்மையில் அப்படியில்லை, நாங்கள் கூறும் பொதுவான பாடத்திட்டத்தில் அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்றவைகள் பாடங்கள் பொதுவாக இருக்கும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் பொதுவானது, வரலாறு சமூகவியல் போன்றைவகள் அந்தந்த மாநிலங்கள் அல்லது இடத்தை பொறுத்து மாறுபடும். அடுத்து முக்கியமானது தாய்மொழியில் கல்வி”.

“இந்த மாற்றம் மட்டும் கொண்டுவந்தால் போதுமா?” என்று இரகுபதி கேட்டார்.

“அடுத்து முக்கியமானது தனியார் பள்ளிகள் கூடாது, அரசுப்பள்ளிகள் மட்டும்தான் இருக்க வேண்டும், அப்படி சேவையின் நோக்கில் தனியார் பள்ளிகள் நடத்தவேண்டும் என்றால் குழந்தைகளிடம் ஒரு ரூபாய்கூட கட்டணம் வாங்காமல் பள்ளி நடத்த அனுமதிக்கலாம், அப்படி செய்தல் வியாபார நோக்கம் உடைய தனியார் பள்ளிகள் அனைத்தும் ஒழிந்துவிடும்” என்று கோபி பதில் சொன்னார்

“நீங்க சொல்லறது நல்ல இருக்கு. ஆனா அரசால் மட்டும் கல்விதுறைக்கு தேவையான நிதியை அளித்திட முடியுமா? வரும் காலங்களில் தேவையான முதலீட்டை அரசு செய்திட முடியுமா?” என்று இரகுபதி கேட்டார்.

“அரசாங்கம் தான் இதுவரை தேவையான முதலீட்டை பண்ணுறாங்க, தேவையான அரசுப்பள்ளிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பற்றாக்குறையாக இருந்தாலும், நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவையான பள்ளிகள் உள்ளன, தனியார் சுயநிதி பள்ளிகள் எல்லாம் பள்ளிகளின் பற்றாக்குறையினால் தொடங்கப்பட்டதல்ல, அனைத்தும் வியாபார நோக்கத்தில் தொடங்கப்பட்டது”

“இன்னொரு கேள்வி நீங்க ஏன் தனியார் பள்ளிகள் மீது அவ்வளவு அவநம்பிக்கையில் இருக்குறீர்கள்”

சற்று நேரா அமைதிக்கு பிறகு, கோபி பேச ஆரம்பித்தார் “எப்படி சொல்லுறதுன்னு தெரியல... நான் முயற்ச்சி பண்ணுகின்றேன். நான் இந்தியா அளவில் பேசபோறதில்ல நம்ம தமிழ்நாடு புதுச்சேரி அவ்வளவு மட்டும் பார்போம். அரசுப்பள்ளிகள் தரம் குறைந்ததால் தனியார் பள்ளிகள் வந்தது; இல்ல இல்ல தனியார் பள்ளிகளினால் தான் கல்வியின் தரம் குறைந்தது; அரசுபள்ளிகளில் மோசம்; தனியார் பள்ளிகள் பணத்தாசை பிடித்தவை; தனியார் பள்ளிகள் சிறந்ததா? அரசுப்பள்ளிகள் சிறந்ததா? அப்படின்னு விவாதம் பண்ண முடியாது. இந்த விவாதத்திற்கு முற்றும் கிடையாது முடிவும் கிடையாது. என்னுடைய பார்வை எல்லாம் கல்வியின் நோக்கம் என்ன? சுகந்திர இந்தியாவின் சமூக முன்னேற்றத்தில் கல்வி எவ்வாறு பயன்பட்டது, இனி எதிர்காலத்தில் நம் சமூகம் ஒரு நல்ல வளர்ச்சி அடைந்த சமூகமாக, ஒரு சமத்துவமான சமூகமாக, சாதி சமய இன வேறுபாடுகள் குறைந்து மனிதத்துவத்தை நேசிக்கிற ஓர் சமூகமா வரவேண்டும் என்றால் கல்வித்துறை எவ்வாறு இருக்கவேண்டும் அது யாரிடம் இருக்க வேண்டும். நம்முடைய நாட்டில் கல்வியின் பங்கு மிக முக்கியமானது, சாதி வேற்றுமைகள் குறைந்ததற்கும் தீண்டாமை குறைந்ததற்கும் கல்வி ஒரு மிகமுக்கியமான காரணம், மகாத்மா காந்தியின் கல்விதான் ஆங்கிலேயனே எதிர்த்து அகிம்சை வழியில் போராடி நமக்கு விடுதலை பெற்றுக்கொடுத்து, அம்பேத்கர் போன்ற தலித் விடிவெள்ளி தோன்றியதற்கு அவருடைய கல்விதான் காரணம், இன்னும் எத்தனையோ தலைவர்கள். இன்று சாதி முழுவதும் ஒழிந்து விட்டது தீண்டாமை அறவேயில்லை என்று கூறவில்லை, ஆனால் தீண்டாமை குறைந்து உள்ளது, சாதியின் வேற்றுமைகள் குறையத்தொடங்கி உள்ளது, இதற்கு முக்கிய காரணம் கல்வி”

இலட்சுமிநாராயணன் குறுக்கிட்டார் “ரகு சார் உங்கள இங்க அனுப்பி வைத்த டாக்டர் என்ன சாதின்னு தெரியுமா?”

“இல்ல தெரியாது.... ஆனா எனக்கு அவரு சாமி மாதிரி” என்றார் இரகுபதி

“அந்த டாக்டரின் சாதி சமூகசாதியில் அமைப்பில் கீழ்தளத்தில் உள்ளது, அவருடைய சமுகத்தில் பெரும்பாலுமானோர் இன்றும்கூட மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலை செய்கின்றார்கள், நீங்கள் இன்று அவரை அவ்வளவு மரியாதையாகப் பார்பதற்கு அவருடைய கல்வி தான் காரணம்” என்று இலட்சுமிநாராயணன்.

மீண்டும் கோபி “சாதி வேற்றுமைகள் மட்டும் அல்ல, வகுப்பு (Class) வேற்றுமைகளும் குறைந்ததற்கு பள்ளிக்கல்வி தான் காரணம், ஒரே சாதியில் இருந்தால்கூட வசதியின் அடிப்படையில் பிரிவினைகள் இருந்தன, அந்த வேற்றுமைகளைக் குறைத்தது கல்வி”

“இது என்னோட வாழ்க்கையிலும் நடந்திருக்கு சார், எங்க சம்பந்தி மாரிமுத்துவின் அப்பா பெரிய ஜமீன்தார், நாங்க ரெம்ப வசதியில்லாம இருந்தோம், என்னால பள்ளிக்கூடம் போகமுடியாத சூழ்நிலை, எப்படியோ படிச்சு வேலைக்கு வந்து அப்புறம் என்னோட பொண்ணை நான் டாக்டர் ஆக்கி மாரிமுத்துவின் மகனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம்” என்று இரகுபதி சொன்னார்.

“இரகுபதி சார் சுகந்திர இந்தியாவில் சமூக மாற்றத்தை கொண்டுவர சமூக நீதி கிடைக்க அரசு எத்தனையோ சட்டங்கள் கொண்டுவந்திருகாங்க, பல கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து நில சீர்திருத்தம், இடஒதுக்கீடு போன்றைவகள் இருந்தாலும், முக்கியமானது கல்விதான். சிலபேர் சொல்லுவாங்க இட ஒதுக்கீடதான் சமூக முன்னேற்றம் அடைய காரணம் என்று சிலபேர் நில சீர்திருத்தம்ன்னு, சிலபேர் அரசியல் மாற்றம் தான் காரணம்ன்னு, சிலபேர் பொருளாதார வளர்ச்சிதான் காரணம்ன்னு சொல்லுவாங்க, இவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு மாநிலத்தை மட்டும் தனிய எடுத்து அதுல என்ன எல்லாம் நிகழ்வுகள் நடந்ததென்று பார்த்து அப்புறம் இந்த காரணத்தால் தான் சமூக முன்னேற்றம் அடைந்தது என்று முடிவுக்கு வந்துவிடுறாங்க” என்று கோபி கூறினார்.

“அதை எப்படி இவ்வளவு ஆணித்தரமாக உங்களால் சொல்லமுடியும்? கல்வியினால் தான் சமூகமுன்னேற்றம் அடைய காரணமென்று”

“நாங்க சொல்லுறதே அப்படியே நம்பவேண்டாம்.... இதை விவரிச்சு சொல்லுறது ரெம்பவே கஷ்டமான வேலை, சில கேள்விகளை நாங்க சொல்லுறோம் அதுக்கு பதில் தேடுங்கள் அப்போது புரியும். ஏன் கேரள மாநிலம் சமூக முன்னேற்றத்தில் முன்னோடியாக உள்ளது? ஏன் மேற்குவங்கம் பின்தங்கி உள்ளது? ஏன் ஹரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பெண்கள்முன்னேற்றத்தில் பின்தங்கி உள்ளனர்? ஏன் இடஒதுக்கீட்டில் அனைத்து சாதிகளும் சீராக பயனடையவில்லை? ஏன் ஆதிவாசிகள் சமுதாயத்தில் மட்டும் பெரும்பாலனோர் பின்தங்கி உள்ளனர்? ஏன் தமிழ் பிராமணர்கள் இடஒதுக்கீடு இல்லாவிட்டாலும் சமூக முன்னேற்றத்தில் முன்னே உள்ளனர்? ஏன்  கியூபா கல்வியில் வளர்ச்சியடைந்த நாடக ஆனாது? ஏன் மேற்கு ஐரோப்பிய ஸ்கேண்டினேவியன் (நார்வே, டென்மார்க், ஸ்வீடன்) போன்ற நாடுகளில் சமூகம் முன்னேற்றம் அடைந்த சமூகமாக ஆனது? நீவீன கால பள்ளிக்கல்வியை எந்த நாடுகளில் ஆரம்பித்தார்கள் குறிப்பாக அமெரிக்க, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரியா, ரஷ்யா, கனடா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அரசாங்கம் பள்ளிகளை திறப்பதற்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடைதேடுங்கள், உங்களுக்கு புரிய வாய்புள்ளது” என்று கோபி சொன்னார்.

“ம்ம்... நானும் முயற்ச்சி பண்ணுறேன். எனக்கு தெரிஞ்ச அளவுல சமூக மாற்றம் அடைந்ததால் தான் கல்வியில் மாற்றம் அடைந்தது அப்படின்னு சொல்லுவாங்க” என்று இரகுபதி சொன்னார்

இலட்சுமிநாராயணன் பேச தொடங்கினார் “ஆமாம், பொதுவா அப்படித்தான் சொல்லுறாங்க. இது முட்டையில் இருந்து கோழி வந்துச்சா? இல்ல கோழியில் இருந்து முட்டை வந்துச்சா? மாதிரியானத கேள்வி. கிரேக்க அறிஞர்களை பத்தி உங்களுக்கு தெரியும் சாக்ரடீஸ், பிளாடோ, அரிஸ்டாட்டில் அவர்களோட கருத்துகலும் நீங்க படித்திருப்பீர்கள். இவர்கள் வாழ்ந்த காலம் ஏசுகிறிஸ்து பிறபதற்கு முன்னால், கி.மு ஐந்தாம் நூற்றாண்டு. அதற்குப் பிறகு இடைக்கால ஐரோப்பாவில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேல், கி.பி ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை எந்த ஒரு பெரிய கருத்துகளும், சிந்தனைகளும் எழவில்லை, இதை இருண்ட காலம் என்கின்றோம். கி.பி பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான் புதிய சிந்தனைகள், கருத்துகள் போன்றவை சமூகத்தில் வந்தன, இந்த காலகட்டம் மறுமலர்ச்சி காலத்தின் தொடக்கம். இந்த காலம் மிகமுக்கியமானது, இது ஐரோப்பாவில் நடந்தது என்றாலும்கூட இதன் தாக்கம் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக தொழிற்புரட்சிக்கு பிறகு மற்ற பகுதிகளுக்கு விரைவாக பரவியது. மறுமலர்ச்சி காலம் மிக முக்கியமானது, மறுமலர்ச்சி காலத்தில் கல்விமுறை இன்றைய பள்ளிக்கல்வி முறையில் இல்லாவிட்டாலும், ஏன் எதற்க்காக என்ற காரண காரியங்களை அறியும் பகுத்தறிவு சிந்தனை இருந்தது, இதுதான் கல்வியின் உண்மையான நோக்கம் கூட. நாங்கள் ஐரோப்பாவில் நடந்த மறுமலர்ச்சியை கூற காரணம், இன்றைய சமூக நிறுவனங்கள், அரசியல் சிந்தனைகள் பொருளாதாரம் கல்வி போன்றவைகள் ஐரோப்பாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால்”

“நீங்க சொல்லுறது நம்புறமாதிரிதான் இருக்கு, கல்வி தான் வேண்டும் சமூகமுன்னேற்றத்திற்கு      நானும் அதை ஒத்துகொள்கின்றேன். நீங்க ஏன் தனியார் பள்ளிகள் வேண்டாம்னு சொல்லுறீங்க” என்று இரகுபதி கேட்டார்.

கோபி உடனே “அய்யோ.... ரகு சார் நாங்க தனியார் கல்வி வேண்டாம்னு சொல்லவில்லை, வியாபார நோக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வேண்டாம் என்கின்றோம், எங்கள் மாணவர்களை சமூக பொருளாதார அந்தஸ்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என்கின்றோம். நாடு முழுவதும் சமசீர் கல்வியை கொண்டுவாருங்கள், தாய் மொழியில் கல்வியை ஊக்கபடுத்துங்கள், ஒருவன் படிக்கும் மொழியில், அவன் படிக்கும் பாடத்தில் நுழைவுத்தேர்வுகள் நடத்துங்கள், குறிப்பாகக் மத்திய அரசின் அகில இந்திய அளவிலான அனைத்து நுழைவுத்தேர்வுகளும் மாணவன் படிக்கும் பாடமொழியில், அவன் பாடத்திலிருந்து நடத்துங்கள் என்கின்றோம். இன்று அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ளன. மாணவனின் பள்ளிமொழிகளான தமிழையும், தெலுங்கையும், மலையாளத்தையும், ஒரியாவையும், கன்னடத்தையும், குஜராதியையும் இன்னும் எத்தனையோ மொழிகள் உள்ளன அவைளையும் சேர்த்துகொள்ளுங்கள் அந்த மாணவர்களும் வாய்ப்பு கொடுங்கள், மேலும் இந்த நுழைவுத்தேர்வுகளில் மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகமானா கேள்விகள் கேட்கப்படுகின்றன, ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கின்றோம்.[1][2] ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் தமிழில் எழுதலாம் என்று மாற்றிய பிறகு தமிழ்நாட்டில் எத்தனையோ நபர்கள் பயன்பெற்றார்கள், அதுபோலவே தமிழ் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்துங்கங்கள் என்கின்றோம்

“இன்னைக்கு நம்ம நாடு போலியோ இல்லாத நாட ஆனதற்க்கு காரணம் அரசாங்கம் அனைவருக்கும் பொதுவான சமமான முறையில் கொடுத்தாங்க. தன்னார்வ நிறுவனங்கள், உலக அமைப்புகள் மற்றும் பல நாட்டின் உதவியோடு, அரசாங்கம் முன்னின்று நடத்தி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் போலியோ சொட்டுமருந்து கொடுத்ததால் போலியோ இல்லா நாடாக மாறினோம். போலியோ மருந்தை ஏழைகளுக்கு மட்டும் அரசு இலவசமாகவும், மற்றவர்களுக்கு கட்டணம் என்று இருந்திருந்தால் இன்று நம்மால் போலியோ இல்லாத நாடாகியிருக்குமா என்பது ஒரு சந்தேகமே...” என்று இலட்சுமிநாராயணன் கூறிவிட்டு “வாங்க லேட்டாயிடுச்சு நாம போலாம்” என்று அழைத்தார்.

“ரெம்ப நன்றி... கோபி உங்க அலைபேசி எண்களை சொல்லுங்கள்” என்று வாங்கிக்கொண்டார் இரகுபதி. மறுநாள் காலையில் எழுந்து நூலகம் சென்று கல்வி சமபந்தமான நூல்களை தேடி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் இரகுபதி. அவர் கண்ணில் கலீல் ஹிப்ரனின் புத்தகம் தென்பட்டது. ஒரு வாரம் கலீல் ஹிப்ரனின் புத்தகத்தையே படித்தார் இல்ல அந்த புத்தகத்தோடு வாழ்ந்தார்.

ஒருவாரம் கழித்து இரகுபதி இலட்சுமிநாராயணனிடம் சொன்னார் “நான் ஊருக்கு போகலாமுன்னு இருக்கேன், இன்னும் ஒரு மாசம்தான் விடுப்பு இருக்கு, அங்கே போய் ஒருமாசம் இருக்கலாம்ன்னு நினைகின்றேன்”

“ம்ம்... நல்லது, நீங்க போயிட்டு ரெண்டுவாரம் கழிச்சு ஒருமுறை இங்க வந்திட்டு போங்க, எங்களையும் மறந்துடாதீங்க” என்று சிரித்துக்கொண்டே இலட்சுமிநாராயணன் சொன்னார்.

“இது இன்னோட பிறந்தவீடு மாதிரி எப்போ நினைச்சாலும் வருவேன்” என்று இரகுபதி கூறினார்.

“வெரி குட்... அப்ப வீட்டுக்கு போன் போட்டு காரை வரச்சொல்லுங்க”

“வேணாம்... நான் ரயிலில் போறேன், ரெம்ப நாளாச்சு ரயிலில் போயி”

அப்ப வாங்க தட்கால் டிக்கெட் புக் பண்ணுவோம் என்று, இலட்சுமிநாராயணனின் கணிப்பொறியை திறந்தார்கள். மறுநாள் மாலை இருவரும் புறப்பட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்தார்கள். இரயில் புறப்படும்போது இலட்சுமிநாராயணனின் கண்களில் கண்ணீர் தத்தும்பியது, இதை பார்த்த இரகுபதி “நீங்க.... வேர... நான் திரும்ப வராமலா போயிடுவேன்?” என்றார்.

“நான் எப்போவுமே எமோஷனல் ஆகா மாட்டேன்... என்னமோ தெரியல, சரி பார்த்து போயிட்டுவாங்க.

“இந்த கலீல் ஹிப்ரனின் புத்தகம் என்கிட்டையே இருக்கு, அடுத்து வரும்போது கொண்டுவருகிறேன்”.

“இருக்கட்டும்...” என்று இலட்சுமிநாராயணன் கூறினார், பாண்டியன் விரைவு இரயிலும் மெல்ல புறப்பட்டுச்சென்றது.

மறுநாள் காலையில் இரகுபதி வீட்டிற்கு சென்றவுடன், அனைவருக்கும் ஆச்சிரியம். உடனே அவருடைய மனைவி கேட்டார் “என்னங்க நேத்து போன் போட்டப்பகூட ஒன்னும் சொல்லல”

“நான் சொன்ன உடனே காரை எடுத்துக்கிட்டு வர்றோம்ன்னு சொல்லுவீங்க, அதுதான் நான் சொல்லல”

“சரி நீங்க வந்து குளிச்சிட்டு சாப்பிடுங்க, நான் இதோ தண்ணி காயவைக்கிறேன்”

இரகுபதி குளித்து ரெடியாகி மாரிமுத்துவை பார்க்க போனார். இவரைப் பார்த்தவுடன் மாரிமுத்து “எப்ப வந்தீங்க...? தங்கச்சி நீங்க ஒண்ணுமே சொல்லல”

“எல்லாருக்கும் ஒரு அதிர்ச்சிய கொடுக்கலாம்ன்னுதான்”

“சரி வாங்க சாபிடலாம்” என்று மாரிமுத்து அழைத்தார்.

“நான் இப்ப தான் சாப்பிட்டு வாரேன், உன்ன பாத்திட்டுப் போலாமுன்னு வைந்தேன்” என்றார்.

நண்பர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மூன்று மாதங்கள் ஊரில் நடந்த முக்கியமான விஷயங்களைப்பற்றி தெரிந்து கொண்டார். அன்று மாலையில் தர்ஷினியும் மருமகனும் வந்துவிட்டார்கள்.

“என்னங்க மாப்பிள்ள ஒரு போன் கூட போடாம வந்துடீங்க”

தர்ஷினி சொன்னாள் “அப்பா நீங்க சர்பரைஸ் கொடுக்கும்போது நாங்க கொடுக்ககூடாத?”

“நந்தினி மட்டும் தான் இல்ல...” என்று இரகுபதி சொன்னர்.

“அவ இன்னும் அரைமணி நேரத்தில்ல இங்க வந்திடுவா...” என்று தர்ஷினி சொல்ல

“அப்ப நீங்க திட்டம் போட்டு வந்தீங்களா, ஏன் படிக்கிற பொண்ண லீவ் போட்டு வரசொன்நீங்க?” என்று இரகுபதி கேட்டார்.

“நாளைக்கு ஒரு நாள் லீவ் போட்ட சனி ஞாயிறு லீவ் தானே அதுதான் வரசொன்னோம்”.

சற்று நேரத்தில் நந்தினியும் வந்துவிட்டாள், மாரிமுத்துவும் வந்தார். அனைவரும் ஒன்றாக இரவு சாப்பாடிற்க்கு அமர்ந்தனர்.

மாரிமுத்து கேட்டார், அடுத்து அப்பா என்ன பண்ணுறத இருகாரு என்று தர்ஷினியிடம் கேட்டார்.

“சம்பந்தி வாத்தியார் வேலைதான்... லீவ் முடிஞ்சதும் சேர்ந்திடனும்” என்று இரகுபதி சொன்னார்.

“ம்ம்... நல்லது....” என்று மாரிமுத்து சொன்னார்.

“நான் செத்தாலும் பள்ளிக்கூடத்தில தான் சாகனும், நான் அவ்வளவு நேசிக்கிறேன் என்னுடைய வேலைய...”

“சரி அதவிடுங்க சம்பந்தி.... நாம வேர ஏதாவது பேசுவோம்” என்றது மாரிமுத்து சொல்ல, உடனே தர்ஷினி “அப்பா உங்களுக்கு போன்” என்றாள்

“யாருமா”

“உங்க நம்பர்... நீங்க சொல்லுங்க யாருன்னு பார்க்கலாம்”

“மாரிமுத்து இங்க இருகாரு..... வேர யாரு?....” என்று யோசித்தார்.

“அப்பா இலட்சுமிநாராயணன் அங்கிள்”

“கொடு கொடு...” என்று வேகமாய் வாங்கி பேசினார்.

இலட்சுமிநாராயணனும் மற்றவர்களோடு பேசினார். கடைசியாக தர்ஷினி பேசினாள், பேசிவிட்டு “அங்கிள் நீங்க எங்க ஊருக்கு வாங்க, ஆன்டியையும் கூட்டிட்டு வாங்க...” என்றாள்.

“கண்டிப்பாக வர்றோம்.... உங்க ஆன்டி நாளைக்கு இங்க வராங்க, வந்ததும் இந்த சனி ஞாயிறு வரலாமுன்னு இருக்கோம். உங்க ஆன்டிக்கு இரகுபதிய பாக்கனும்னு சொன்னாங்க” என்றார்

“நிஜமாகவ சொல்லுறீங்க அங்கிள்....” என்று ஆவலுடன் கேட்டாள்.

“ம்ம்... உண்மையாவே.... என்னோட பிரண்டு கோபியும் எங்ககூட வருவார்.... அப்பா கிட்ட சொல்ல வேணாம் ஒரு சர்பரைஸ இருக்கட்டும்... சனிக்கிழமை காலையில் நாங்க உங்க வீட்டுல இருப்போம்” என்றார்.

“ஓகே அங்கிள் என்று போனை கட் பண்ணினாள்.

அனைவரும் சாப்பிட்டு எழுந்து விட்டார்கள். நந்தினி “அப்பா மாத்திர சாப்பிடுங்க” கூறினாள்.

“மாத்திரையா? அதை நான் நிறுத்தி ஒரு மாசதிக்கும் மேலாகுது” என்றார் சிரித்துக்கொண்டே...

தர்ஷினி “அப்பா சும்மா விளையாடதீங்க......... BP மாத்திரைய கண்டிப்பா எடுத்துக்கணும்” என்றாள்

“அது மனசு சரியில்லாததால் தான் BP வந்திச்சு... இப்ப நான் நல்லா இருக்கேன், என் மனசு சந்தோசமாக இருக்கு....” என்றார்.

“என்னதான் இருந்தாலும் ஒருதடவ நாளைக்கு டாக்டர பாத்திட்டு வரணும், ச்சே நானும் BP அபரடஸ பெங்களூரிலே வைச்சிட்டு வந்துட்டேன்” என்ற தர்ஷினி சொன்னாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் அடுத்த வாரம் வேணும்னா போகலாம்” என்று சொல்லிவிட்டு “சம்பந்தி நாம ஏன் ஒரு பள்ளிக்கூடம் திறக்கக்கூடாது?’ என்று மாரிமுத்துவிடம் கேட்டார்.

“ஆரம்பிக்கலாம் ஆனா பார்த்துக்க ஆளுவேனுமுள்ள... அதுதான் இப்பவே இங்க நாலு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுங்க இருக்கு....” என்றார் மாரிமுத்து.

“அதுதான் நான் இருக்கேன்ல... பள்ளிக்கூடம் தாயர் அப்படின்னா நான் வேலைய எழுதிகொடுத்திட்டு வந்திடுறேன்... அப்புறம் நம்ம பள்ளிக்கூடம் நம்ம ஊருல இருக்கிற இங்கிலீஷ் மீடியம் மாதிரி இல்லமா இலட்சுமிநாராயணனோட பள்ளிக்கூடம் மாதிரி... கட்டணம் இல்ல பள்ளி... தாய்மொழியில் அடிப்படை கல்வி... அப்புறம் ஆங்கிலத்த நல்ல சொல்லிகொடுக்கும் பள்ளி........” என்று அவருடைய ஆசையை சொன்னார்.

உடனே மருமகனும் “பண்ணுங்க நானும் உதவி பண்ணுறேன்... என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் நல்ல வேலையில இருகாங்க அவங்ககிட்டே உதவி பண்ண கேட்கலாம்”.

நல்ல முடிவு என்று சொல்லிவிட்டு மாரிமுத்து புறப்பட்டார். வாத்தியாரின் மகன் அப்பாவின் மடியிலே தூங்கிவிட்டான்.

மறுநாள் காலையில் வாத்தியாரின் மகன் அவசரமாகக் வீட்டுபாடத்தை எழுதிக்கொண்டிருந்தான். அவன் “அப்பா உங்கள பிரின்சிபால் ஸ்கூலுக்கு வரசொன்னாரு” என்று கூறினான்.

“சரி நீ போய் நான் வாரேன்”

“அப்பா நாலுமணிக்கு வாங்க” என்று கூறிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டான்.

அன்றைய பொழுது பல உறவினர்கள், பழைய பள்ளியில் வேலைபார்த்த நண்பர்கள் வந்தனர், இரகுபதி அனைவருடனும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தார், பொழுது போனதே தெரியவில்லை.

மாலை ஒரு நான்கு மணிக்கு இரகுபதி மகனின் பள்ளிக்கு செல்ல தயாரானர். மகனின் பள்ளிக்கூடம் அந்த கிராமத்தின் எல்லையில் உள்ளது, இரகுபதியின் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம்தான்.

“வசந்தி நான் பிரின்சிபால பார்த்திட்டு அப்படியே நம்ம தோப்பையும் பார்த்திட்டு வாரேன்”

“சரிங்க... செல்போனை எடுத்துட்டு போங்க” என்று செல்போனைக் கொடுத்தாள்.

இரகுபதி பள்ளியிக்கு சென்று முதல்வர் அறைக்கு போனார். அங்கே மூன்று நபர்கள் முதல்வரின் அறைக்கு வெளியே குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இரகுபதியை பார்த்ததும் ஒருவர் “சார் வணக்கம்” என்றார்.

“ம்ம்... வணக்கம்” என்று கூறிவிட்டு.

“என்ன செல்லபாண்டி இங்க இருக்கீங்க...” என்றார்.

“பிரின்சிபால பாக்க வந்தோம்... அவரு இன்னும் கிளாஸ்ல இருந்து வரல அதுதான் இங்க இருக்கோம்” என்றார்.

“அப்புறம் என்ன விஷயமா...” என்று இரகுபதி கேட்டார்.

“அது ஒண்ணுமில்லங்க... பையனுக்கு ரெண்டு மாசமா பீஸ் கட்டல... அதுதான்” என்று அவர் கூறினார்.

“என்னப்பா... அத ஒழுங்க கட்டவேண்டியதனே... படிக்குற பசங்களுக்கு கஷ்டபடுதலமா?” என்றார்.

“அதெல்லாம் ஒழுங்க கட்டினோம்... நான் திருப்பூர்ல வேலைக்குப் போறேன்ல இந்த ரெண்டு மூணு மாசமா ஒழுங்க வேலை இல்ல... அதனால கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு” என்று செல்லபாண்டி கூற, இரகுபதி அமைதியாய் இருந்தார்.

செல்லபாண்டி சிறிது நேரம் கிழித்து “பேசாம உங்க பள்ளிகூடதிலேயே சேர்க்கலாமுன்னு நினைக்கிறன்...” என்றார்

“இவருக்கு விஷயம் தெரியாதோ” என்று இரகுபதி மனதுக்குள் நினைத்துக்கொண்டார். அப்பொழுது பிரின்சிபால் வந்தார். அவர் இரகுபதியை பார்த்தவுடன் “சார் வாங்க... சாரி சார்.. நீங்க வந்து ரெம்ப நேரம் ஆச்ச... வாங்க உள்ள வாங்க” என்று இரகுபதியை உள்ளே அழைத்துக்கொண்டு போனார்.

“நீங்க வரசொன்னது”

“சார்’ அதெல்லாம் ஒண்ணுமில்ல, உங்க மகன் இப்போ நல்ல படிக்குறான், ஒரு ரெண்டுமாசம் கொஞ்சம் சேட்டை ஒழுங்க படிக்கமா இருந்தான்... இப்போ நல்ல படிக்குறான்... சும்மா பாரேன்ட்ஸ் மீட் பண்ணணும் அதுதான் வரசொன்னேன்” என்று சொல்லிவிட்டு இந்த ரேங்க் கார்டுல ஒரு கையெழுத்துப் போடுங்க என்று கொடுத்தார்.

கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தவர், செல்லபாண்டியை பார்த்து வரேன் என்று சொல்லிவிட்டு கிழம்பினர். வரும் வழியில் அவருடைய தென்னந்தோப்புக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வந்தார். வரும் வழியில் எல்லாம் செல்லபாண்டி சொன்னது காதில் கேட்டுகொண்டிருந்தது. இன்னும் எத்தனை பெற்றோர்கள் இதுமாதிரி கஷ்டபடுவார்களோ என்று மனதில் நினைத்துக்கொண்டே வந்தார். மணி ஆறுக்கு மேல் ஆகிவிட்டது, சூரியன் மெல்ல மறையத் தொடங்கியது. வீட்டிற்க்கு வரும் வழியில்தான் அவருடைய பழைய அரசுப் பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளியை கடக்கும்போது போது மனது படபடத்தது நெஞ்சம் சற்று கனமானது. பள்ளியை பார்க்க கூடாது என்று முகத்தை குனிந்துகொண்டே வந்தார். அவர் பள்ளியை கடந்ததும் யாரோ “சார் வணக்கம்” என்று கேட்டது.

இரகுபதி சட்டென்று திரும்பி பார்த்தார், அங்கே யாரும் இல்லை. முன்னே ஒரு அடி எடுத்து வைத்தார் மீண்டும் குரல் கேட்டது “சார் வணக்கம்.....”

இரகுபதி திரும்பி பள்ளியின் வாசலுக்கு வந்தார். இரும்பு கேட் வழியே உள்ளே எட்டிப் பார்த்தார். புதிய கட்டிடம், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அரசு கட்டிக்கொடுத்தது. உள்ளே பல வகை மரங்கள் எல்லாம் இரகுபதி நட்டுவளர்த்தியது. இப்போ தண்ணீர்கூட ஊற்ற ஆளில்லாமல், சில மரங்கள் காந்து போக தொடங்கிருந்தது. இரகுபதி அங்கும் இங்கும் சுற்றி பார்த்தார். எதிரில் உள்ள வீட்டிற்கு சென்று “வீட்ல யாருமில்லையா?” என்று குரல் கொடுத்தார். ஒரு சிறுவன் ஓடிவந்து “சார்ர் குட் மார்னிங்......” என்றான்.

“குட் மார்னிங் இல்ல... குட்இவினிங்..... எங்க அம்மா இல்லையா?” என்று கேட்டு வாயை மூடுவதற்குள் உள்ள இருந்து சிறுவனின் அம்மா வந்தார்.

“சார் வாங்க...”

“ம்ம் என்ன உங்க பையன் ஒழுங்க பள்ளிக்கூடம் போறன்ன?”

:எங்க சார்... நீங்கதான் நம்ம பள்ளிகூடத்தை மூடிட்டிங்க... இவன் புது பள்ளிக்கூடத்துக்கு சரியாய் போறதே இல்ல.. பசங்களோட சேந்து நேத்து குளத்துல மீன்பிடிக்க போயிருக்கான்... இங்க வீட்டுபக்கத்துல இருந்தா எப்பவும் யாராவது பாத்துகுவோம்...” என்றார்.

“ஏய்... நல்ல குழந்தை... ஒழுங்க பள்ளிக்கூடம் போகணும்” என்று சிறுவனுக்கு அறிவுரை சொல்லிவிட்டு. “ஒரு குடம் இருக்க... இந்த மரங்களுக்கு தண்ணி ஊத்திட்டு கொடுக்குறேன்” என்று கேட்டார்.

உடனே “ம்ம்ம்... “ என்று ஒரு பழைய குடத்தை கொண்டுவந்து கொடுத்தார்.

இரகுபதி குடத்தை வாங்கிகொண்டு பள்ளியின் கதவுகளைத் திறந்து உள்ளே போனார். கதவில் பூட்டு மட்டும் இருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை. உள்ளே போய் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து மரங்களுக்கும் செடிகளுக்கும் ஊற்றிகொண்டிருந்தார். வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது, அவர் மனசில் செல்லபாண்டி சொன்னதும், இங்கே அந்த சிறுவனின் அம்மா சொன்னதும் திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது, முகம் வேர்த்தது. இரகுபதி அப்படியே ஒரு மரத்தின் மீது சாந்து கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு வீட்டிற்க்கு கிழம்பிவிட்டார்.

மறுநாள் இலட்சுமிநாராயணன், அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் கோபி வந்துவிட்டார்கள். இரகுபதியின் வீட்டில் திருவிழா போன்று காட்சியழிதது. அன்று மாரிமுத்துவின் வீடு, வாத்தியாரின் தென்னந்தோப்பு மற்றும் கிராமத்தை சுற்றிவந்தார்கள். வரும் வழியில் அவருடைய பள்ளிக்கூடத்தை காட்டினர். கோபி கேட்டார் “சார் கட்டிடம் எல்லாம் புதுசா”.

“ம்ம்... ரெண்டு வர்ஷம்தான் ஆச்சு” என்று வாத்திய சொன்னார்.

இரவு உணவிற்கு இரகுபதி அவருடைய இரண்டு ஆசிரியர் நண்பர்களையும் அழைந்திருந்தார். ஒருவர் பெயர் காந்தி மற்றொருவர் பெயர் பெரிய மருது, இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இலட்சுமிநாராயணனையும் கோபியையும் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தி வைத்துவிட்டு, இலட்சுமிநாராயணன் மற்றும் கோபி செய்யும் பணிகளை எடுத்துக் கூறினார். உணவருந்திவிட்டு அனைவரும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றி பேசினார்கள், மாரிமுத்து, அவரது மகன், தர்ஷினி, மற்றும் இரகுபதியின் நண்பர்கள் என்று அனைவரும் இருந்தனர்.

இரகுபதி நேற்று செல்லபாண்டி தனது மகனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் கஷ்டபடுவதை சொன்னார்.

உடனே இரகுபதியின் மருமகன் ஜானகிராமன் “மாமா நம்ம வேணுமுன்னா பீஸ் கட்டலாமே?” என்றார்.

மாரிமுத்து சொன்னார் “நான் கொடுக்குறேன்”

“மாரிமுத்து நீ சொல்லுறது நல்ல இருக்கு, செல்லபாண்டி மாதிரி நம்ம ஊருல இன்னும் ரெம்பபேரு இருகாங்கப்பா....” என்று காந்தி சொன்னார்.

“பரவாயில்ல... என்ன பத்து பசங்க இருப்பாங்களா? நாம கட்டலாம்? என்ன வருஷத்துக்கு ரெண்டு இலட்சம் ஆகுமா?” என்று மாரிமுத்து சொன்னார்.

பெரிய மருது சொன்னார் “நாம மொதல எத்தன பசங்களுக்கு பீசு கொடுக்க முடியலைன்னு ஒரு கணக்கேடுபோம்”

இலட்சுமிநாராயணனும் கோபியும் என்ன நடக்கின்றது என்பது உற்று கவனித்தார்கள். ஏதோ நல்ல மாற்றதிக்கான முதல் படி என்று மனதில் நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.

இரகுபதி “முதல் வேலையா நாம நம்ம ஊருல எத்தனை குழந்தைகள் இந்த நாலு தனியார் பள்ளிகளில் படிக்குறாங்கன்னு கணகேடுப்போம், அப்புறம் தெரியுமுல்ல” என்றார்.

“இரகுபதி சொன்னதுதான் சரியுன்னு படுத்து, நேர இந்த பள்ளிகூடங்களுக்கே போய் எத்தன பசங்க படிக்குறாங்கன்னு கேட்டிருவோம் என்றார்” என்று காந்தி சொன்னார்.

“அதெல்லாம் எதுக்கு நாளைக்கு ஞாயற்று கிழமை நான் ஊர் கிராம சபைய கூட்டுறேன் அப்ப தெரியுமுள்ள” என்று மாரிமுத்து சொன்னார்.

“நம்ம ஊருல கிராமசபைக்கு கூட்டம் கூட்டின யாருப்பா வராங்க... எல்லாம் டிவி முன்னாலேயே பொழுத கழிக்கணுமுன்னு இருபாங்க” என்று காந்தி சொன்னார்.

“சித்தப்பா நல்லது பண்ணனுமுன்ன காலத்த கடத்த வேணாம்.... நாளைக்கு கூட்டத்தை கூட்டுவோம்... எவ்வளவு பேரு வராங்கன்னு பாப்போம்....” என்று ஜானகிராமன் சொன்னார்.

“அதுதான் எனக்கும் நல்லதுன்னு தோணுதுங்க” என்று இரகுபதி சொன்னார்.

“நாளைக்கு நாங்களும் உங்க ஊரு கிராம சபை நடக்குறத பார்க்க ஒரு சந்தர்பம இருக்கும்” என்று கோபி சொன்னார்.

நாளைக்கு கிராம சபையை கூட்டுவது என்று முடிவெடுத்து அனைவரும் களைந்து சென்றார்கள். மறுநாள் காலையில் ஊரில் கிராம சபை உதவியாளரின் உதவியுடன் கிராம சபை கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் மாலை ஆறுமணிக்கு கிராம சபை கூடியது. இருநூறுக்கும் அதிகமான ஊர் பொதுமக்கள் வந்திருந்தனர். கோபியும் இலட்சுமிநாராயணனும் வந்திருந்தார்கள்.

மாரிமுத்து “எல்லோருக்கும் வணக்கம்... நம்ம ஊருல மொத்தம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேல குடும்பங்கள் இருக்கு, ஆனா இவ்வளவு பேருதான் வந்திருக்கீங்க.... இன்னைக்கு கூட்டம் கூட்டினது காரணம், நம்ம ஊருல இருக்குற வசதியில்ல குழைந்தைகளுக்கு படிப்புக்கு உதவித்தொகை கொடுக்கலாமுன்னு ஒரு கணக்கு எடுக்குறோம் அதுக்கு தான் வரசொன்னோம்” என்றார்.

ஒரு பெண் எழுந்து “என்ன அரசாங்கம் சலுகையா?”

“இல்ல இது நம்ம கிராம சபையில இருந்து உதவி பண்ணலாமுன்னு இருக்கோம்” என்று மாரிமுத்து பதிலளித்தார்.

அந்த பெண் மீண்டும் எழுந்து “அப்ப அரசாங்க உதவிதானே?, எங்க பேரையும் எழுதுங்க... ரெண்டு பசங்க ஒன்னு நாலாவது படிக்குது, பெருசு ஆறாவது... நாங்களும் கஷ்டபடுற குடும்பம்தான்”

மற்ற நபர்களும் எங்க பேரையும் எழுதுங்க என்று கோரசாக கூறினார்கள். மாரிமுத்துவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். இரகுபதி எழுந்து “கொஞ்சம் அமைதியா இருங்க.... இந்த உதவித்தொகையை நம்ம ஊரு பஞ்சாயத்து பணத்துல இருந்து கொடுக்கப் போறதில்ல... இந்த இங்க மெட்ராசில இருந்து வந்துருக்கிற எங்க நண்பர்கள் கோபியும் இலட்சுமிநாராயணனும் தான் கொடுக்க போறாங்க. அவங்க ஒரு தொண்டு நிறுவனம் வைச்சு மக்கள் சேவை பண்ணுறாங்க, அவங்க நம்ம ஊருல இருக்குற கஷ்டபடுற குடும்பங்கள இருக்குற பசங்களுக்கு படிக்க உதவி பண்ணுறாங்க. அதுனாலதான் நம்ம பஞ்சாயத்து வழிய கொடுக்கலாமுன்னு கூட்டத்தை கூட்டினோம்” என்றார்.

ஒருவர் எழுந்து “அப்படினாலும் எங்க பேரை எழுதுங்க நாங்களும் கஷ்டபடுற குடும்பம் தானே”

“இங்க பாருங்க அவங்க ஒரு பத்து பசங்களுக்கு உதவி பண்ணுறத சொல்லியிருகாங்க, நேத்து நம்ம மாயாண்டி மகன் செல்லபாண்டிய பார்த்தேன், அவங்க பையனுக்கு ஸ்கூல பீஸ் கட்டமுடியலைன்னு சொன்னறாரு அதுமாதிரி யாராவது கஷ்டபடுற குடும்பம் இருந்த சொல்லுங்க...” என்றார் இரகுபதி

ஒரு பெண் எழுந்து “நீங்க ஒங்க சாதி பசங்கள பாத்து கொடுப்பீங்க... பெறகு எதுக்கு எங்க எல்லாம் வரசொன்னீங்க... வாங்க நம்ம எல்லாம் போலாம்” என்று பக்கத்தில் இருந்தவர்களை கூப்பிட்டார்.

மாரிமுத்து “அம்மா தயவு செஞ்சு கொஞ்ச நேரம் இருங்க.... நாங்க சாதிய பாக்கல எல்லாம் நம்ம ஊரு ஜனங்க அவ்வளவுதான்... கொஞ்ச நேரம் இருங்க எங்கள கொஞ்சம் பேச விடுங்க”

அனைவரும் அமைதியாக அமர்ந்தார்கள். காந்தி சொன்னார் “செல்லபாண்டிய சொன்னது ஒரு உதாரணம்தான்... நாங்க சாதியா வைச்சு கண்டிப்பா பிரிச்சு பார்க்கப் போறதில்ல. உதவி பண்ணுற அவங்களும் எங்க சாதி கிடையாது. நீங்க எல்லாரும் பேரு பதிவுபண்ணிட்டு போங்க, உங்க வீட்டு பக்கத்துல இருக்குறவங்களுக்கும் சொல்லுங்க... நாங்க நாளைக்கு நம்ம ஊருல இருக்குற நாலு பள்ளிகூடத்துக்கும் நேருல போறோம். அங்க போய் எத்தனை குழந்தைகள் பீஸ் கட்டவில்லைன்னு கணக்கு எடுக்க போறோம்”

“அய்யா நான் தப்பா சொல்லிருந்த மன்னிச்சிடுங்க....” என்று அந்த பெண் கூறினாள்.

“அய்யோ... அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா....” என்று ஒரு புன்னகையுடம் இரகுபதி சொன்னார்.

நிறையப்பேர்கள் தங்களின் குழந்தைகளின் பெயர்களை பதிவுசெய்து விட்டு போனர்கர்கள்.

மாரிமுத்து “இரகுபதி நல்ல வேலை காப்பதுனீங்க இல்லன்னா...” என்று இரகுபதிக்கு நன்றி கூறினார்.

கோபியும் இலட்சுமிநாராயணனும் இரகுபதியை பாராட்டினார்கள். மறுநாள் கோபியும் இலட்சுமிநாராயணனின் குடும்பமும் ஊருக்கு திரும்பிவிட்டார்கள். தர்ஷினியும் ஜானகிராமனும் பெங்களுருக்கு சென்று விட்டார்கள். மாரிமுத்து, இரகுபதி, பெரிய மருது மற்றும் காந்தியும் பள்ளிகளுக்கு செல்ல தயாரானார்கள். முதலில் சென்றது தமிழ்நாட்டின் உள்ள பெரிய  பள்ளியின் கிளை, ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றது. மாரிமுத்துவை பார்த்ததும் நேராக பள்ளியின் முதல்வர் அறைக்கு காவலாளி அழைத்துச் சென்றார். பள்ளியின் முதல்வரிடம் இவர்கள் வந்தற்கான காரணத்தை சொன்னதும், அவர் “ரெம்ப நல்ல விஷயமா இருக்கு... உங்கள மாதிரி கல்விக்கு சேவை பண்ணுறத நெனச்ச சந்தோஷமா இருக்கு”

“நாங்க யாருக்கு பண்ணுறோம்... எல்லாம் நம்ம ஊரு குழந்தைங்களுக்கு” என்று இரகுபதி சொன்னார்.

பள்ளியின் முதல்வர் “நாங்களும் இதுமாதிரி சேவை பண்ணுறோம்.... எங்க ஸ்கூல நல்ல படிக்குற குழந்தைகளுக்கு நாங்க பீஸ் குறைச்சு வாங்குவோம்... அப்புறம் பத்தாவதுல வேர எந்த ஸ்கூலையும் முதல் மார்க்கு வாங்கி இங்க வந்து சேர்ந்த நாங்க சுத்தமா பீஸ் வாங்குறது இல்ல... இப்ப எங்க ஸ்கூல எல்லாரும் பீஸ் கட்டிட்டாங்க.... நாங்க ஸ்கூல்பீஸ் ஸ்டார்ட் பண்ணும்போதே கலெக்ட் பண்ணிடுவோம்... நெக்ஸ்ட் இயர் வேணும்ன்னா நல்ல படிக்குற குழந்தைகல இருந்த கூட்டிட்டு வாங்க நாங்க இலவசமா படிக்க வைக்கிறோம்....”

அவருக்கு நன்றி கூறி வெளியே வந்தார்கள்.

மாரிமுத்து “பரவாயில்ல இவ்வளவு பெரிய பள்ளிக்கூடம இருந்தாலும் இலவசமா படிக்க வைக்குறேன்னு சொல்லுறாங்க” என்றார்.




[1] The story of IITs, Indian Stastical Institute- Kolkata, Retrived from http://www.isical.ac.in/~jeexiiscore_normal/Detailed_stories.htm on 29th March 2014
[2] CBSE tilt tag on tech entrance test- nit formula accused of biased against State boards, The Telegraph-calcutta India, May 22, 2013  http://www.telegraphindia.com/1130522/jsp/nation/story_16924789.jsp#.UzaG_U3NvIU taken on 29.03.2014


“சம்பந்தி இவங்க இப்படித்தான் ஒரு சில நல்ல படிக்குற மத்த பள்ளிக்கூடத்து பசங்கள இலவசமா சேர்த்துக்கிறத சொல்லிட்டு மத்த குழந்தங்ககிட்ட அதிகமா வாங்குவாங்க... இது இவங்களோட வியாபார யுக்தி” என்று இரகுபதி சொன்னார்.

உடனே காந்தி “அதுதான் வாத்தியாரே நல்ல மார்க் வாங்குற குழந்தைங்கள இவங்க சேர்த்துகிட்டு எங்க பள்ளிக்கூடம் நல்லா இருக்குன்னு சொல்லுறாங்கள!...”

“ம்ம்ம்... இவங்க கட்டணம வாங்க மாட்டாங்க, இலவசமா விடுதி வசதிகூட கொடுக்குறாங்களாம்”[1]

“வாங்க நம்ம அடுத்த ஸ்கூலுக்கு போவோம்” என்று மாரிமுத்து அழைத்தார்.

அடுத்த பள்ளிக்கூடம் இரகுபதியின் மகன் படிக்கும் பள்ளிக்கூடம். அது மேல்நிலை பள்ளி, பள்ளியை நடத்துபவர் முன்னாள் அமைச்சர் கல்வி செல்வன், தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர், மாவட்ட அளவில் பொறுப்பில் இருப்பவர். இவர்கள் முதவரிடம் வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார்கள்.

பள்ளியின் முதல்வர் “நல்ல விஷயமா இருக்கு.... எங்க ஸ்கூல ஒரு இருநூறு மேல குழந்தைகள் இன்னும் முழு கட்டணமும் கட்டாம இருக்காங்க”

“இவ்வளவு குழந்தைகள் இருகாங்கள? அப்புறம் என்ன பண்ணுவீங்க பள்ளிக்கூடம் நடத்துறது ரெம்ப கஷ்டமா இருக்குமே” என்று பெரிய மருது கேட்டார்.

“முடிஞ்ச அளவுக்கு வசூல் பண்ணுவோம், அப்படியும் சில பேர் முழுவதும் கட்டமுடியாம போகும், அதெல்லாம் பெரிசா நினைக்குறதில்லை” என்றார் பள்ளியின் முதல்வர்.

“இந்த ஸ்கூல மொத்தம் எத்தனை குழந்தைகள் படிக்குறாங்க..” என்று காந்தி கேட்டார்.

“இப்போ ஒரு இரண்டாயிரம் குழந்தைகள் இருக்கும், எல் கே ஜி, யு கே ஜி எல்லாம் சேர்த்து” என்று பள்ளியின் முதல்வர் சொன்னார்.

“எங்க ஊருல இருந்து எத்தனை குழந்தைகள் படிக்குறாங்க, அதுல எத்தனை குழந்தைகளால் கட்டணம் கட்டமுடியலைன்னு சொல்லமுடியுமா” என்று இரகுபதி கேட்டார்.

நீங்க கொஞ்சம் வெளியில உட்காருங்க ஆபீஸ்ல பார்த்து சொல்லுறோம், என்று இவர்களை வரவேற்ப்பரையில் உட்கார சொன்னார் பள்ளியின் முதல்வர்.

இரகுபதி அறிவிப்பு பலகையைப் பார்த்தார் அடுத்த ஆண்டுமுதல் சிபிஎஸ்இ முறை அமல்படுத்தப்படும் என்று விளம்பரம் இருந்தது.

சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வர் இவர்களிடம் வந்து “சார் ஊர்ருல இருந்து இரநூறு குழந்தைகள் படிக்குறாங்க, அதுல பதிமூணு பேரு இந்த டெர்ம் பீஸ் கட்டல” என்று சொன்னார்.

மாரிமுத்து கேட்டார் “சார் அந்த லிஸ்ட் கொடுக்கமுடியுமா?” என்று கேட்டார்

சற்று யோசனைக்குப் பிறகு “ம்ம்ம்... வாங்கிகோங்க” என்றார்

இரகுபதி “இந்த பள்ளிக்கூடம் சிபிஎஸ்இ பாடமுறைக்கு மாற்றப்போறீர்களா?” என்று கேட்டார்.

“நாங்க இப்பவே டென்த்க்கு கீழ எல்லாம் சிபிஎஸ்இ பாடமுறையில தான் நடத்துறோம், நெக்ஸ்ட் இயர் பெர்மிசியன் கிடைச்சதும் ஸ்கூல முழுவதும் சிபிஎஸ்இ பாடமுறைதான்”

இரகுபதி “ஏன் திடீருன்னு இப்போ சிபிஎஸ்இக்கு மாத்துறீங்க?”

“இப்போ இருக்குற சமச்சீர் சிலபஸ் அவ்வளவு நல்ல இல்ல சார் அதுதான் மாத்தலமுன்னு” பள்ளியின் முதல்வர் பதில் சொன்னார்.

காந்தி “அப்போ மாநில அரசாங்கம் அனுமதி கொடுத்திடாங்கள?” என்று கேட்டார்.

“சார் இப்போ மாநில அரசின் அனுமதி தேவையில்லை....சென்ட்ரல் கவர்ன்மென்ட் நேரடியாக விண்ணப்பம் பண்ணலாம், மாநில அரசுக்கு நாங்க சிபிஎஸ்இ போர்டுக்கு விண்ணப்பம் பண்ணியிருக்கோம்ன்னு தெரிவிச்ச மட்டும் போதும் எல்லாம் நம்ம அமைச்சர் சசி தரூர் கொண்டுவந்ததுஎன்று பள்ளியின் முதல்வர் விளக்கினர்[2].

அவருக்கு நன்றி கூறி வெளியேறினார்கள். பெரிய மருது கேட்டார் “ஏம்ப்பா ரகு உன் பையன் இங்கதானே படிக்குறான், எவ்வளவு பீஸ் கட்டுறீங்க?”

இரகுபதி “அய்யா நான் அறுபது ஆயிரம் ஸ்கூல் பீஸ் கட்டுறேன், அப்புறம் அது இதுன்னு ஒரு முப்பது ஆயிரம் ஆயிடும்”.

காந்தி “நீங்க வசதியா இருகீங்க... பாவம் இந்த ஏழை குழந்தைகள் என்ன பண்ணுவாங்க”

இரகுபதி “நீங்க வேர நான் என் பையான சேத்துவிடும்போது வெறும் மூணு ஆயிரம் தான் இருந்துச்சு, இப்போ இவ்வளவு ஆயிடுச்சு” என்றார்.

அடுத்த பள்ளிக்கு போனார்கள். அது உயர்நிலை பள்ளி, பள்ளியின் முதல்வர் செழியன், இவர் அந்த பள்ளியின் உரிமையாளரும் கூட. தனது சொந்த ஊரில் பள்ளிக் நடத்துகின்றார். மாரிமுத்துவின் தூரத்து சொந்தம். இவர்கள் போனவுடன், “வாங்க வாங்க” என்று அனைவரையும் உட்காரவைத்தார்.

மாரிமுத்து வந்த காரணத்தை சொல்ல பள்ளியின் முதல்வர் ஒரு லிஸ்டை கொடுத்தார், அதில் நாற்பத்தி ஐந்து மாணவர்களின் பெயர்கள் இருந்தது. மாரிமுத்துவுக்கு ஆச்சிரியம், என்னப்ப “இவ்வளவும் நம்ம ஊரு பசங்கள?’ என்று கேட்டார்.

“நம்ம ஸ்கூல நம்ம ஊரு பசங்கதான் அதிகமா படிக்குறாங்க, அப்புறம் பக்கத்துக்கு ஊருல இருந்தும் வாரங்க...”

பெரிய மருது “எவ்வளவு குழந்தைகள் மொத்தம் இங்க படிக்குறாங்க...”

மொத்தம் ஒரு நானுறு குழந்தைகள் படிக்குறாங்க” என்றார்.

அவர்கள் அடுத்தப் பள்ளிக்குச் சென்றார்கள். இது ஒரு ஆங்கில நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, போன வருடம் தான் இந்த ஊரில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த பள்ளி இந்தியா முழுவதும் உள்ள மடத்தின் கிளைப்பள்ளி. இந்த ஊரு நகரத்திற்கு அருகில் இருப்பதால் இங்கே தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிபிஎஸ்இ பாடமுறை அமல்படுத்தப் படுகின்றது. காந்தியும் இரகுபதி வாத்தியாரும் தலைமாசியியரிடம் போய் பேசிவிட்டு வந்தார்கள். இந்த பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் கட்டணம் கட்டியுள்ளன.

அனைவரும் மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து மதிய உணவருந்திக்கொண்டே அடுத்து என்ன பண்ணுவது என்று பெசிக்கொண்டிருன்தனர்.

பெரிய மருது கேட்டார் “என்னப்பா மாரிமுத்து மொத்தம் ஐம்பத்தி எட்டு குழந்தைகள் பீஸ் கட்ட முடியாம இருக்காங்க, எல்லாத்துக்கும் நீங்க கட்ட முடியுமா?”

“இப்ப என்ன பண்ணுறது, நானும் என்னமோ ஒரு பத்து இருபது பசங்க இருபாங்கன்னு நினைச்சு வந்தேன்...” என்று காந்தி வருத்தப்பட்டார்.

“எனக்கும் என்ன பண்ணுறதுன்னு புரியாம இருக்கு” என்றார் மாரிமுத்து.

காந்தி சொன்னார் “எனக்கு பசங்கள பார்த்த பாவமா இருக்கு... எங்க கிட்ட பணம் இருந்த நாங்களும் சேர்த்து உதவி பண்ணுவோம்.... ஆனா நாங்களே பென்ஷன வைச்சு காலத்த ஓட்டுறோம்”

இரகுபதி சொன்னார் “சம்பந்தி நான் இலட்சுமிநாராயணனுக்கும் மருமகனுக்கும் போன் போட்டு விஷயத்தை சொல்லுறேன், மருமகன் ஏதோ அவங்க சிநேகிதர்கள் கிட்ட உதவி கேக்குறதா சொல்லியிருக்காரு... பார்போம்”

“ம்ம்... என்ன இருந்தாலும் ரெண்டுநாள் எடுத்துகுங்க... நாம ஏதாவது சொல்லனும், இல்லேன்னா ஊரு  சனங்க ஒரு மாதிரியா பேசிடுவாங்க....” என்று மாரிமுத்து சொன்னார்.

“அய்யா உங்களுக்கு ரெம்ப நன்றி.... நீங்களும் எங்ககூட வந்து உதவி பண்ணுனதுக்கு” என்று இரகுபதி கூறினார்.

“ரகு ரிடையர்ட் ஆயிடுச்சுன்னு சும்மா வீட்டுக்குள்ளேயே இருக்குறதுக்கு இந்த மாதிரி வேலை பார்த்த மனசுக்கு கொஞ்சம் நல்ல இருக்குப்பா.... உனக்குத்தான் நாங்க நன்றி சொல்லனும்” என்று சொல்லிவிட்டு காந்தியும் பெரிய மருதுவும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

இரகுபதி அன்றிரவு மருமகனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொன்னார்.

“என்ன மாமா இவ்வளவு குழந்தைங்க பீஸ் கட்டமுடியாம கஷ்டப்படுறாங்கள?” என்று ஜானகிராமன் கேட்டார்.

“இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியல... நாம ஏதாவது பண்ணணும் இல்லையின்னா ஊரு மாதிரி பேசுவாங்க” என்று இரகுபதி சொன்னார்.

“விடுங்க மாமா அது ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் என்னுடைய நண்பர்கள்கிட்ட கேட்குறேன், இல்லையின்னா நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு பாதி பீஸ் எல்லா குழந்தைகளுக்கும் கட்டிடுவோம்” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு இலட்சுமிநாராயணனுக்கு போன் போட்டு என்ன செய்வது என்று கேட்டார். இலட்சுமிநாராயணன் சொன்னார் “இத்தனை குழந்தைகளுக்கு பண உதவி பண்ணுறது கஷ்டமானது, ஒவ்வொரு வருஷமும் இவ்வளவு குழந்தைகளுக்கு பண உதவி பண்ணு முடியுமான்னு பார்கனும் இல்லைன்னா எல்லாம் வேஸ்டா போயிடும் என்றார்”

இரகுபதி “இப்ப நாம ஏதாவது பண்ணணும் இல்லையின்னா ஊர் தலைவரு பேரு கேட்டுப்போயிடும்” என்றார்.

“இதுமாதி பண்ணுங்க.... பத்தாவது இல்ல பணிரெண்டாம் வகுப்பு குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களுக்கு மட்டும் பீஸ் கட்டுங்க... மத்த குழந்தைகளுக்கு ஏதாவது பாதி பீஸ் கொடுத்து அந்த பள்ளிகூடத்துல போய் நாம பேசி பீஸ குறைக்கலாம்” என்று யோசனை சொன்னார்.

இரகுபதிக்கு நல்லதாகவே பட்டது. இரகுபதி இலட்சுமிநாராயணனையும் கிராம சபை கூட்டதிற்க்கு வரும்படி அழைத்தார். இரகுபதி இலட்சுமிநாராயணன் கூறியதை மற்ற நபர்களுக்கும் தெரியப்படுத்தினார், அவர்கள் அனைவரும் எட்டு பத்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை தேர்வுசெய்தனர், மற்ற குழந்தைகள் எல்லாம் அதற்கு கீழே உள்ள வகுப்புகளில் படிப்பவை. சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு கிராம சபை கூடியது, சுமார் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் வந்திருந்தனர். இவ்வளவு கூட்டத்தை யாரும் எதிர்பார்கவில்லை. மாரிமுத்து இலட்சுமிநாராயணனை அறிமுகபடுத்தி வைத்துவிட்டு, சுமார் ஐம்பத்தி எட்டு குழந்தைகள் கட்டணம் செலுத்தவில்லை என்றும், அவர்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் எட்டு குழந்தைகளுக்கு கட்டணம் இலட்சுமிநாராயணன் அவர்கள் வழங்குவார்கள் என்றும் மற்ற குழந்தைகளுக்கு அவரவர் பள்ளிகளில் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். தேர்வு செய்துள்ள பெயர்களையும் வாசித்தார்.

கூட்டத்தில் ஒரே சலசலப்பு. உடனே ஒருவர் எழுந்து “எங்க குழந்தையும் பத்தாவதுதான் படிக்குது நாங்களும் பீசு கட்டல, அது எப்படி எங்க பையான நீங்க கணக்குல சேர்க்கவில்ல?” என்று கேள்வி எழுப்பினார்.

பெரிய மருது “ஏய்... அமைதியா இருங்கப்பா... குமாரு நாங்களே நேர பள்ளிகூடங்களுக்கு போய் இந்த லிஸ்ட்ட வாங்கிட்டு வந்தோம்... நீ என்னமோ இப்படி பேசுற?” என்றார்.

குமார் “அப்ப வாங்க நம்ம நாளைக்கே பள்ளிகூடத்துக்கு நேரபோவோம்...” என்றார்.

“குமாரு நாங்க தேர்வு பண்ணிம்போது எந்த பாரபட்சமும் இருக்க கூடாதுன்னு தேர்வு பண்ணிருக்கோம், உங்களுக்கு பார்த்தாலே தெரியும், சரி நாளைக்கு நாம நேர போலாம், இப்போ இங்க லிஸ்ட் பள்ளிகூடத்துல கொடுத்தது அதுலையும் ஒருதடவ பாரு உன் பையன் பேரு இருக்கான்னு” என்று மாரிமுத்து பள்ளிகளில் இருந்து கொடுத்த லிஸ்டை கொடுத்தார்.

அதை வாங்கிப் படித்துவிட்டு “அய்யோ அந்த பள்ளிக்கூடமே இந்த லிஸ்டுல இல்ல என்றார்”

மாரிமுத்து “என்ன சொல்லுற... நீ போன வாரம் கிராம சபை மீட்டிங்கு வந்திருந்தியா?” என்று கேட்டார்.

“இல்ல தலைவரே” என்று மெல்ல சொன்னார்.

இரகுபதி “அதுதான் உனக்கு புரியல” என்று சொல்லிவிட்டு சென்ற வாரம் என்ன நடந்தது என்பதையும், இந்த ஊரில் உள்ள பள்ளிகளில் மட்டும் கணக்கெடுப்பு நடத்துவது என்ற முடிவையும் சொன்னார்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு செல்லபாண்டி “ஐயா என் குழந்தைக்கு பீஸ் கட்ட மாட்டிங்கள? இன்னைக்கு கூட பள்ளிக்கூடத்துல வரச்சொல்லி இருந்தாங்க” கூறினார்.

“செல்லபாண்டி நீ ஒன்னும் கலவைப்பட வேணாம் நாங்க கண்டிப்பா உதவிபண்ணுவோம்” என்று மாரிமுத்து சொன்னார்.

மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு. மாரிமுத்து அனைவரையும் அமைதியாய் இருக்கும்படி கேட்டுக்கொண்டு, உங்களுக்கு எதாவது சொல்லணுமுன்ன இருந்தா யாராவது முன்னாடி வந்து சொல்லுங்க என்றார்”

ஒருவர் எழுந்தார் “தலைவரே வணக்கம், இலட்சுமிநாராயணன் சாருக்கும் எங்களின் ஊரின் சார்பா வணக்கம். நம்ம ஊருல இன்னும் நிறைய குழந்தைகள் பக்கத்துக்கு ஊருல இருக்குற வேரவேர பள்ளிக்கூடங்களில் படிக்குறாங்க. தனியார் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல படிக்க வைக்குற இன்னும் நிறைய குடும்பங்களுக்கும் பணப்பிரச்சினை இருக்கு, அதுனால் அவங்களையும் கணக்கெடுத்துக் நீங்க உதவி பண்ணுன நல்ல இருக்கும்” என்றார்.

அனைவரும் அமைதியாக இருந்தனர், இலட்சுமிநாராயணன் பேசினார் “எல்லாருக்கும் வணக்கம் இந்த ஐம்பது குழந்தைகளுக்கு உதவி பண்ணுறது நான் மட்டும் கிடையாது, மாரிமுத்து, இரகுபதி சார், பெரிய மருது வாத்தியார் மற்றும் காந்தி அய்யா எல்லோரும் சேர்ந்துதான் உதவிபண்ணலாமுன்னு முடிவு பண்ணிருக்கோம். உங்க ஊருல இன்னும் எத்தனை குழந்தைகள் இதுமாதிரி இருக்குன்னு தெரிஞ்சுகிட்ட அடுத்து என்ன பண்ணலாமுன்னு முடிவு பண்ணலாம்”.

ஒரு இளைஞ்சன் எழுந்தான் “ஐயா எங்க ஊருல சுமார் ஆயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கும் மேல இருக்கு, சராசரியாக ஒரு குழந்தைன்னு கணக்கு வைச்சாலும் ஆயிரத்து ஐநூறு குழந்தைகள் இருக்கு” என்றான்.

தம்பி உங்க பேரு என்ன என்று இலட்சுமிநாராயணன் கேட்டார்.

ராஜா என்றான். உடனே இலட்சுமிநாராயணன் தம்பி நீங்க இங்க வாங்க உங்கள மாதிரி இளைஞ்சர்கள்தான் வேணும் என்று அவனை கூப்பிட்டு அவர்களுடன் நிறுத்தினார்.

அவன் வந்தவுடன், ராஜா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்றார்.

“சார் நான் பிஎஸ்சி பிஎட் முடிச்சிட்டு இப்ப சசும்மாத்தான் இருக்கிறேன்” என்றான்.

நீங்க ஒன்னு பண்ணுங்க இங்க இருக்குற மக்களில் எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று ஒரு தோராயமா கணக்குப் போட்டு சொல்லுங்க என்றார் இலட்சுமிநாராயணன்.

ஒரு அரைமணிநேரம் கழித்து ராஜா சொன்னான், “சார் 657 குழந்தைகள் படிக்குறாங்க, அதுல ஒன்னுல இருந்து அஞ்சாவது வரைக்கும் 252, 337 பேரு ஆறுல இருந்து பத்துவரைக்கும், மீதம் மேல்நிலைப்பள்ளியில படிக்குறாங்க” என்றான்.

இலட்சுமிநாராயணன் கேட்டார் “இவ்வளவு குழந்தைகள் உங்க ஊருல இருக்கும் போது எதுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி கூட அரசாங்கதுல கட்டிகுடுக்கல?”

பெரிய மருது சொன்னார் “இங்க ஒரே ஒரு அரசாங்க தொடக்கப்பள்ளி மட்டும்தான் ரெம்ப வருஷமா இருந்துச்சு, மேல படிக்க பக்கத்து ஊருல இருக்கிற கிருஷ்துவ சாமியார் பள்ளிகூடத்துக்குதான் போவோம், அது மேல்நிலைப்பள்ளி, இப்பவும் அங்க தான் அதிக குழந்தைகள் படிக்குறாங்க. கடந்த ஒரு பத்துவருஷமா தான் இந்த இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடங்கள் வந்த பிறகு எல்லாரும் அங்க இங்கேன்னு போய் சேர்த்து அரசாங்க பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் வர்றது இல்லைன்னு அந்த தொடக்கப்பள்ளியையும் மூடிடாங்க”

இலட்சுமிநாராயணன் சொன்னார் “இவ்வளவு குழந்தைகளுக்கும் பண உதவி பண்ணுறது ஒரு பெரிய காரியம், அப்படியே பண்ணினாலும் அடுத்த வர்ஷம் பண்ண முடியுமான்னு நினைச்சா கஷ்டமான காரியமாகதான் இருக்கும். எனக்கு ஒரு யோசனை ஆனா நீங்க தான் முடிவு பண்ணணும்”

மாரிமுத்து “சார் நீங்க சொல்லுங்க முடியுமான்னு பாக்கலாம்” என்றார்.

“நீங்க ஏன் உங்க ஊருல இருக்குற அரசாங்க பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க ஏற்பாடு பண்ண கூடாது” என்று இலட்சுமிநாராயணன் கேட்டார்.

உடனே கூடத்தில் இருந்த ஒருவர் “சார் அது தமிழ் மீடியம், எங்க குழந்தைகள் படிக்குறது இங்கிலீஷ் மீடியம்.. அது எப்படி சரியாகும்” என்றார்.

“நீங்க இங்கிலீஷ் மீடியம் வேணும்னாலும் மாத்திக்கலாம்... அதுக்கென்னப்பா” என்றார் இலட்சுமிநாராயணன்.

“சார் அந்த பள்ளிக்கூடத்துல பசங்க ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போறதுக்கு கூட ஒரு டாய்லெட் கூட நல்ல இல்ல” ஒருவர் சொன்னார்.

“ஐய்யா நான் போன வாரம் இந்த ஊருக்கு குடும்பத்தோட வந்து சுத்திபார்தோம், எவ்வளவு நல்ல இருக்கு, கோயில் அருமையா கட்டிருகீங்க, எவ்வளவு சுத்தமா இருக்கு, எல்லாம் நீங்க ஒன்னா சேர்ந்து நம்ம கோயிலுன்னு பார்த்துகிறது. அதுமாதிரிதான் நம்ம பள்ளிகூடமுன்னு நினைச்சு நீங்க சுத்தமா வைச்சுக்கலாம்”

“சார் அதெல்லாம் நடக்குற காரியமா... அந்த பள்ளிகூடத்துல மூணு வாத்தியார் மட்டும்தான் இருந்தாங்க.... தமிழ் மீடியம், இப்ப எல்லாம் இங்கிலீஷ் படுச்சதான் ஏதாவது வேலைகிடைக்கும், வாத்தியார் மகனே இங்கிலீஷ் மீடியதுலதான் படிக்க வைக்குறாரு...” என்று ஒருவர் கூறினார்.

“நான் இங்கிலீஷ் மீடியம் படிக்க வைக்குறது தப்புன்னு சொல்லவரல... பத்து வருஷத்துக்கு முன்னாடிவரை இந்த ஊருல எல்லாரும் தமிழ் மீடியதுல்ல தானே படிக்க வைச்சாங்க, எத்தனையோ டாக்டர்கள் உங்க ஊருல இருகாங்க, எத்தனைபேர் எஞ்சினீயர ஆயிருகங்கா, மிலிட்டரியில் எவ்வளவுபேர் இருகாங்க, இன்னும் இவ்வளவு பேர் அரசாங்க வேலையில் இருகாங்க. ஏன் நம்ம இரகுபதி சார் மூத்த பொண்ணு டாக்டருக்கு படிச்சிருக்கு, மாரிமுத்து மகன் பெரிய சாப்ட்வேர் எஞ்சினீயர இருகாரு எல்லாரும் தமிழ் மீடியத்துல படிச்சவங்க தானே?..” என்றார்”

“அதெல்லாம் விடுங்க சார் இப்ப எங்க குழந்தைகளுக்கு என்ன பண்ணுவீங்க” என்று ஒரு பெண் கேட்டாள்.

“அததான் நான் இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கேன்... உங்க பள்ளிக்கூடம் திரும்பவும் ஆரம்பிக்கிறதுக்கு நடவடிக்கைகள் எடுங்க, உங்க ஊருல இருந்து ஒரு பத்துபேர் என்கூட வாங்க, எங்க பள்ளிக்கூடம் எப்படி நடத்துறோம்ன்னு பாருங்க, அது மாதிரியே உங்க பள்ளிக்கூடம் நடத்தலாம். நல்ல ஆங்கிலம் கற்றுத்தரும் பள்ளியாக மாற்றுங்கள். அரசாங்கத்துல மூணு ஆசிரியர்கள் மட்டும் கொடுத்தால் என்ன?, உங்க ஊருல இருக்குற படித்த விருப்பம் உள்ள மூன்று இளைஞ்சர்களை ஆசியர்கள நியமனம் பண்ணுங்க, அவங்களுக்கு தேவையான சம்பளத்தை வீட்டுக்கு மாசம் பத்து ரூபா வசூல் பண்ணுனாலே போதும். நாங்க இந்த பத்தாவது படிக்குற பசங்களோட பீஸ் கட்டுறோம்... அப்புறம் இந்த பள்ளிக்கூடம் திரும்ப ஆரம்பிச்சா அதுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய உதவி பண்ணுறோம் என்றார்”

கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு, நிறைய குரல்கள் இதெல்லாம் நடக்குற காரியம் இல்ல... சும்மா நம்ம நேரத்தை வீணக்குறாங்க என்று சிலபேர் எழுந்து போய்விட்டார்கள். மாரிமுத்து தயவுசெய்து கொஞ்சம் அமைதியா இருங்க என்று கேட்டுப்பார்த்தார். ஆனால் கூட்டம் களைந்து கொண்டிருந்தது. ராஜா எழுந்து யாரெல்லாம் பள்ளிக்கூடம் வேணுமுன்னு நினைக்குறவங்க இங்க இருங்க என்றான்.

நிறையபேர் போய்விட்டார்கள் ஒரு நூறுபேர் மட்டும் அங்கே இருந்தார்கள். மாரிமுத்துவிக்கு ஒரு சந்தேகம் “சார் மூடுன பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கமுடியுமா?” என்றார்.

“அரசாங்கத்துல மூடின பள்ளிக்கூடத்தை திறக்கக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்ல... இதுமாதிரி மூடின பள்ளிக்கூடங்கள் கர்நாடக மாநிலத்துல மீண்டும் திறக்கப்பட்டுள்ளது”.[3] என்றார் இலட்சுமிநாராயணன்.

ராஜா கேட்டான் “சார் இப்ப நாங்க என்ன பண்ணனுமுன்னு சொல்லுங்க?”

“நாளைக்கு என்கூட உங்க ஊருல இருந்து ஒரு பத்துபேர் வாங்க, நாங்களே செலவு பண்ணி கூட்டிட்டு போறோம். எங்க பள்ளிக்கூடம் எப்படி இருக்குன்னு பாருங்க, ஒருவாரம் அங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடும் நாங்களே பண்ணுறோம். அதுமாதிரி உங்க பள்ளிக்கூடத்தையும் மாத்தலாம்” என்றார் இலட்சுமிநாராயணன்.

செல்லபாண்டி முதல் ஆளாக “சார் நான் வரேன் எம் பேர முதல எழுதுங்க” என்றார்.

இலட்சுமிநாராயணன் “கண்டிப்பாக எழுதிக்கிறோம், ராஜாகிட்ட பேரு கொடுங்க... பத்துபேருதான், அதிகமா இளைஞ்சர்கள் இருந்த நல்லா இருக்கும்” என்றார்.

கூட்டம் களைந்து சென்றது, இரகுபதியின் கண்களிலில் கண்ணீர் ததும்ப கேட்டார் “நீங்க உண்மையாதான் சொல்லுறீங்களா... மீண்டும் எங்க பள்ளிக்கூடம் திறப்பாங்களா?”.

அவங்க பள்ளிக்கூடத்த திறக்குறது இல்ல; நாம திறக்குறோம். கிராம சபை இதை செய்யலாம். பள்ளிக் கல்வியில் சில பணிகளை செய்ய பஞ்சாயத்து ராஜ்யம் சட்டத்தில் இதுக்கு இடம் இருக்கு, நம்ம தமிழ்நாட்டில் தாலுக பஞ்சாயத்துக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க[4].  அவங்க அரசாங்க பள்ளிக்கூடத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செஞ்சுகொடுக்கலம், அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளுக்கு உதவுவதற்க்கு கூட இடம் இருக்கு. அப்புறம் நம்ம கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2௦௦9, அதிலையும் இடமிருக்கு.[5]

பெரிய மருது “சார் இவ்வளவு நாளா எங்களுக்கு இதெல்லாம் தெரியாம போச்சு” என்றார்.

இரகுபதி “நான் இதை முன்னால நின்னு திரும்பவும் பள்ளிக்கூடம் திறக்கபோராடுறேன்” என்று ஆர்வமாக சொன்னார்.

மறுநாள் பத்து நபர்கள் வந்திருந்தார்கள், ராஜா, செல்லபாண்டி, செழியன் மற்றும் சில படித்த நபர்கள் இலட்சுமிநாராயணனுடன் சென்னைக்குப் புறப்பட்டு சென்றார்கள். ஒருவாரம் இலட்சுமிநாராயணனின் பள்ளிக்கூடம், மருத்துவர் வெங்கட் அவர்களின் “தாய் வீடு’ பள்ளி, இன்னும் அதேபோல் உள்ள இரண்டு பள்ளிகள், அங்க எவ்வாறு கல்வி கற்பிக்கப் படுகின்றது என்பதை பார்த்து தெரிந்துகொண்டார்கள். ஊரில் இரகுபதி, மாரிமுத்து, காந்தி மற்றும் பெரிய மருது ஆகிய நான்கு பேரும் உதவி தொடக்க கல்வி அலுவலகம் சென்று அதிகாரியிடம் மீண்டும் பள்ளிக் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவரும் இது முடியக்கூடிய காரியம் தான் ஆனால் எங்களுக்கு எத்தனை குழந்தைகள் சேரா விருப்பம் உண்டு என்ற விவரம் வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் இருந்து வந்தவுடன் கிராம அலுவலகத்தில் ஒரு கூடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது, சுமார் ஐம்பது நபர்கள் வந்திருந்தனர். ராஜாவும் செழியனும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

செழியன் “நான் இவ்வளவு நாளா ஒரு பள்ளிக்கூடம் நடத்துறேன், ஆசிரியராகவும் இருக்குறேன் ஆனா அங்க போனப் பிறகுதான் தெரியும் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக்கொடுக்கலாமுன்னு, குழந்தைகள் எப்படி கற்றுக்கொள்கின்றார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். அங்க இருந்து வர மனசே இல்லாம கிழம்பி வந்தேன். என்னுடைய பள்ளியையும் அதுமாதிரி மாத்தானும், எங்க பள்ளிகூடத்துல இருக்குற அத்தனை ஆசிரியர்களையும் அங்க அனுப்பலாமுன்னு இருக்கிறேன்” என்றார்.

ராஜா “நான் பிஎட் படிக்கும்போது ஒரு ரெண்டு மூணு மாசம் கிளாஸ் எடுத்திருக்கேன், இங்க போன பிறகுதான் தெரியும் நான் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியிருக்குதுன்னு” என்றான்.

இரகுபதி சொன்னார் “சரி அதைப்பத்தி பிறகு பேசுவோம்.. அடுத்த நடவடிக்கை என்ன பண்ணலாமுன்னு பேசலாம், நாங்க கல்வி அதிகாரியப் போய் பாத்திட்டு வந்தோம், அவரு எத்தனை குழந்தைகள் அரசுப்பள்ளியில் மீண்டும் சேரா இருக்காங்கன்னு லிஸ்ட் கொண்டுவரச்சன்னார். அதுனால நாளைக்கு நாம ஒரு கணக்கு எடுக்கணும், ஒண்ணுலயிருந்து அஞ்சாவது வரைக்கும் படிக்குற எத்தனை குழந்தைகளை மீண்டும் அரசுப்பள்ளியில் சேர்க்க விருப்ப படுறாங்கன்னு தெரிஞ்சுக்கணும்”.

காந்தி சொன்னார் “ரகு பேசாம ஒண்ணுல இருந்து பண்னேண்டாவது வரைக்கும் எத்தனை குழந்தைகள் பீஸ் கட்ட முடியம இருக்காங்கன்னு ஒரு லிஸ்டும் தயார் பண்ணிடுவோம், அதுல ஒண்ணுலயிருந்து அஞ்சாவது வரைக்கும் படிக்குறது எத்தனை குழந்தைகளுன்னு பிரிச்சிடுவோம்” என்றார்.

“அதுதான் சரின்னு நானும் நினைக்குறேன், நம்ம செழியன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிடுவோம்” என்று மாரிமுத்து சொல்லிவிட்டு “செழிய நீயும் ஒரு பள்ளிக்கூடம் வைச்சு நடத்துற உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லு” என்று செழியனிடம் கேட்டார்.

“எனக்கு ரெம்ப சந்தோஷம் தான், நான் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சது பணம் அதிகமா சம்பாதிக்க இல்லை, படிச்சுட்டு சும்மா இருந்த எனக்கு ஒரு வேலை வேணும்ன்னு அவ்வளவுதான்” என்று செழியன் சொன்னார்.

மறுநாள் ஒவ்வொருவரும் ஒரு பகுதியென பிரித்து குழந்தைகள் கணக்கெடுத்து முடித்தனர். சுமார் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 35 மேல் குழந்தைகளின் அரசுப்பள்ளியில் சேரா விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த குழந்தைகளில் 15 பேர் உள்ளுரில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள், அதிலும் 79 குழந்தைகள் முன்னால் அமைச்சர் அவர்களின் பள்ளியில் படிப்பவை.

இவர்களின் குழு உள்ளுரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அதன் தலைமையாசிரியர்களை சந்தித்தது. செழியனின் பள்ளியை தவிர மற்ற பள்ளிகள் குழந்தைகளுக்கு மாற்றுசான்றிதல் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். முன்னால் அமைச்சர் அவர்களின் பள்ளியின் முதல்வர், விஷயத்தை பள்ளியின் மேலாளருக்குத் தெரியப்படுத்தினர். மேலாளர் முன்னால் அமைச்சர் கல்வி செல்வனுக்குத் தெரியப்படுத்தினர்.

“விடுங்க என்ன எண்பது பசங்கதானே?” என்று கல்வி செல்வன் சொன்னார்.

“இல்ல சார் இதுமாதிரி விஷயத்தை இப்பவே கிள்ளிடனும் இல்லேன்னா பிரச்சனை ஆகிடும்” என்று மேலாளர் கூறினார்.


தொடர்ச்சி அடுத்த blog-ல்......





[1] M K Ananth, Two-year-long struggle to achieve results, The Hindu, May 22, 2013, Retrived from http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/twoyearlong-struggle-to-achieve-results/article4738177.ece  on April 01,  2014
[2] CBSE, Circular no 2013/10/581277, 08.07.2013, Retrived from http://cbseaff.nic.in/cbse_aff/Circulars/CIRCULAR2.pdf on 01-04-2014
 
[3] Sathish G T, It’s back to the government schools at four villages in Hassan, The Hindu, June 3, 2013 Retrived from http://www.thehindu.com/news/national/karnataka/its-back-to-government-schools-at-four-villages-in-hassan/article4775705.ece on April 01, 2014
[4] Rural Development and Panchayat Raj Department, Government of Tamil Nadu, Retrived from http://www.tnrd.gov.in/pract/pract_draft.pdf  on April 02, 2014
[5] Tamil Nadu School Education Department, Retrived from http://www.tnschools.gov.in/rteindia.html on April 02, 2014





 

2 comments: